05-26-2004, 10:54 PM
சந்தரிக்கா எது வரை விட்டுக்கொடுப்பார்? - நிலாந்தன்
".... நிதியுதவி கையில் வரும் வரையிலுமா? அல்லது சர்வதேச அளவில் தன்னைப்பலப்படுத்தும் வரையிலுமா? அல்லது நாடாளுமன்றத்தில் விலைக்கு வாங்கக் கூடிய எதிர்கட்ச்சி ஆட்களை விலைக்கு வாங்கும்வரையிலுமா? அல்லது ஆர்தர் சி கிளாக் முன்பு ஒரு முறை தீர்க்கதரிசனம் உரைத்ததுபோல சமாதானத்துக்கான நோபல் பரிசை வெல்லும் கனவு மெய்ப்படும் வரையிலுமா? ...."
பிரதிச்சபாநயாகர் தெரிவில் சந்திரிக்கா எப்படியோ வெற்றி பெற்றுவிட்டார்.
போட்டியின்றித் தெரிவுகள் நடந்திருப்பது என்பது சபாநயாகர் தெரிவில் தான் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்தும் பாதுகாக்க முடியாத அளவுக்கு கட்சி நிலவரங்கள் மாறி இருப்பதாக யு.என்.பி அஞ்சியதே காரணம்.
சில கிழமைகளுக்குள் சந்திரிக்கா நடாளுமன்றத்தில் கட்சி நிலவரங்களைத் தனக்குச் சாதகமாக மாற்றி அமைத்து விட்டார் என்பதே இதன் அர்த்தம்.
முஸ்லிம் காங்கிரஸைக் குழப்பியதிலும் இ.தொ.கா வைத்தளம்பச் செய்ததிலும் கூட அவர் கணிசமான அளவு வெற்றி பெற்று விட்டதாகவே தோன்றுகிறது.
சந்திரிக்கா இப்படிச் செய்வார் என்பது ஏற்கனவே நன்கு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். நடாளுமன்றத்தில் தனது கூட்டு முன்னணியின் நிலையை ஸ்திரப்படுத்தும் முகமாகவே அவர் அவசரப்பட்டு சமாதானம் செய்யத் தொடங்கினார். இதற்காக கொழும்புக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் பல தடவைகள் ஹெலிகொப்டர்கள் பறக்க வேண்டியிருந்தது. நோர்வேயில் இருந்து அதன் வெளியுறவு அமைச்சர் பீற்றசனும் துணையமைச்சர் ஹெல்கேசனும் மினக்கெட்டு கொழும்புக்கும் கிளிநொச்சிக்கும் வரவேண்டியிருந்தது.
முதலில் சந்திரிக்கா நிபந்தனைகளை விதிப்பது போல ஒரு தோற்றம் உண்டாகியது பேச்சுக்களில் இடைக்கால நீர்வாக ஏற்பாட்டைப் பற்றிக் கதைக்கும் அதேநேரம், இறுதித்தீர்வைப் பற்றியும் கதைக்கப்படவேண்டும் என்று அவர்; நோர்வே து}துவர்களிடம் சொல்லி அனுப்பியிருந்தார். அதோடு, பேச்சுக்கள் வெளிநாட்டில் நடப்பது அவருக்கு விருப்பம் இல்லை என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் புலிகள் தமது நிவைப்பாட்டை திட்டவட்டாக தெரிவித்த போது அவர் உடனடியாக தனது நிலையிலிருந்து இறங்கினார். இது அவர் தனது நிபந்தனைகளை விட்டுக்கொடுத்தது போல ஒரு வெளித்தோற்றத்தைத்தரக்கூடும். ஆனால் இப்படி விட்டுக்கொடுப்பது என்று அவர் ஏற்கனவே முடிவெடுத்து விட்டிருந்தார். ஆதை எடுத்த எடுப்பில் செய்யாமல் முதலில் நிபந்தனைகளை விதிப்பது போல் விதித்து பின்பு அவற்றை விட்டுக்கொடுப்பது போல் சமாதானத்தின் பால் தனக்கிருக்கும் பற்றுதியை வெளிப்படுத்துமாற் போல அவர் நடந்து கொண்டார். இதன் மூலம் தமிழர்கள் தனது சமாதானத்தில் அதிக நம்பிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் தனது கூட்டு முன்னணிக்கு எதிராக வாக்களிக்கமாட்டார்கள் என்றும் அவர் நம்பினார்.
மேலும், சமாதானச் செயலராக கதிர்காமரோடு ஒத்துப்போகாத ஒரு அனைத்துலக இராஜதந்திரியான ஜயந்த தனபாலாவை நியமித்ததும் கூட தமது சமாதான முயற்சிகளின் நம்பகத் தன்மையயை கூட்டுவதற்கே.
தனபால முன்பு ஐ.நா வில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். முன்னைய ரணில் அரசு சமாதான முயற்சிகளின் போது அவரை சமாதானச் செயலராக பெறுப்பேற்குமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் அப்போது ஐ.நா வில் தான் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட ஒரு பணியை பூர்த்தி செய்ய வேண்டியிருந்ததால் தனபால யு.என்..பியின் அழைப்பை ஏற்கமுடியவில்லை என்று சொல்லப்பட்டது.
இப்பொழுது அதே தனபாலவை சந்திரிக்கை கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் அவர் இரண்டு திசைகளில் செய்திகளை அனுப்பியுள்ளார். முதலாவது தமிழர்களுக்கு அதன்படி கதிர்காமருடன் முன்பு முரண்பட்ட தனபாலவை கதிர்காமருக்குப் பதில் சொல்ல தேவையில்லாத அளவுக்கு அதிகாரமுடைய ஒரு பொறுப்பில் நியமித்ததன் மூலம் தனது சாமாதான முயற்சிகளை தமிழர்கள் நம்ப வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
மற்றது, சர்வதேச சமூகத்திற்கு குறிப்பாக மேற்கு நாடுகளுக்கு தனபால ஒரு விருப்பமான இராஜதந்திரி. அவரை சமாதான செயலாராக நியமித்ததன் மூலம் சமாதான முயற்சிகளை தான் ஒரு நாடகமாக முன்னெடுக்கவில்லை என்று நிருபிப்பதே அவரின் நோக்கம். உண்மையில் தனபாலவின் சர்வதேச அளவில் சந்திரிக்காவின் சமாதான முயற்சிகளின் நம்பகத்தன்மையை உயர்த்தியிருக்கின்றது.
இதன்மூலம் அவர் தனது இலக்குள் சிலவற்றை நெருங்கிவரத்தொடங்கிவிட்டார். சுந்திரிக்காவுக்கு இப்போது நான்கு பிரதான இலக்குகள் உண்டு முதலாவது தான் சமாதானத்தின் எதிரி என்று தமிழர்களின் மனதில் விழுந்திருக்கும் படிமத்தை அகற்றுவது. இரண்டாவது, சர்வதேச அளவில் தனது சமாதான முயற்சிகளின் நம்பகத்தன்மையை கூட்டுவது. மூன்றாவது, தான் சமாதானம் செய்வது தனது கட்சியை நாடாளுமன்றத்தில் ஸ்திரப்படுத்துவதற்காகவோ அல்லது நிதி உதவியை பெறுவதற்காகவோ அல்ல என்று நிரூபிப்பது. நாலாவது, சமாதான முயற்சிகளில் இந்தியாவை முடியுமானால் பங்களியாக்குவது.
இந்த நான்கு இலக்குகளையும் அடைவதற்காக முதற்கட்ட முயற்சிகளை பொறுத்தவரை அவர் சில விசயங்களில் வெற்றிகரமாக முன்னேறியிருப்பதாக தோன்றுகிறது.
சபாநாயகர் அவர் பெற்ற எதிர்பாராத தோல்வியிலிருந்து அவர் பாடங்கற்றிருப்பதாவும் தெரிகிறது. இழப்புகளும் தோல்விகளும் அவரை மேலும் மேலும் வெற்றிக்கான குறுக்கு வழிகளை நோக்கியே உந்தித்தள்ளியள்ளன. தொடர்ச்சியான இழப்புக்கள், புறக்கணிப்புகள், அவது}றுகள் போன்றவற்றின் ஊடாகவே உருவாகியவர் அவர்.
விஜயகுமாiதுங்கவை காதலித்த காரணத்தினாலேயே அவர் தனது குடும்பத்தை பகைக்க நேர்ந்தது. இது ஒரு கட்டத்தில் கணவனோடு சேர்ந்து தாய்க்கு எதிராக அதாவது இன்று தான் தலைமைதாங்கும் கட்சிக்கு எதிராக அரசியல் நடத்தும் ஒரு நிலைக்கு அவரை இட்டுச் சென்றதுஇ சிறு வயதில் தகப்பன் சுட்டுக் கொள்ளப்பட்டது. பின் நாளில் குடும்பத்தை பகைத்து மணந்த கணவன் கண்முன்னால் சுட்டுக்கொல்லப்பட்டது? என்று பெரிய இழப்புகளால் உருவாகியவர் அவர்.
கொழும்பில் அவருக்கு முன்பிருந்த சிங்கள தலைவர்களில் அவரளவுக்கு இழப்புக்களால் உருவாகியவர் வேறு எவருமில்லை. ரணிலைவிடக் கூடுதலாக அவருக்கு இருக்கும் தகுதிகள் இவை.
பிரேமதாசவைப்போல ஒரு தலைவரால் தான் இப்போது சந்திரிக்காவுக்கு எதிராக யு.என். பிக்கு தலைமை தாங்க முடியும். ரணிலுக்கு அப்படியொரு அரசியல் பாரம்பரியம் இல்லை.
எனவே சந்திரிக்காவை தோற்கடிப்பதைவிடவும் தன்னுடைய தலைமைத்துவத்தை தனது கட்சிக்குள்ளேயே பாதுகாப்பதற்கான உத்திகளைப் பற்றியே ரணில் அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இத்தருணத்தில் சந்திரிக்கா தன்னை மேலும் பலத்தும் முயற்சிகளில் இறங்கிவிட்டார்.
சுமாதானம் செய்வதில் தனது பலம் என்று ரணில் நம்பியது அவருடைய சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் தான். இப்படி ஒரு பலம் சந்திரிக்காவுக்கு தற்சமயம் இல்லை. அவர் அதை இனித்தான் உருவாக்கவேண்டியிருக்கிறது.
ஆனால் இப்பொழுது தமிழர்களுக்கு பலமாய் இருப்பது இந்த விசயம் தான். அதாவது சந்திரிக்கா தன்னை சர்வதேச அளவில் ரணில் அளவுக்கு இனிமேல் தான் ஸ்தாபித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதையும் கூட அவர் கணிசமான அளவிற்கு புலிகளுடன் சேர்ந்து தான் செய்ய வேண்டியிருக்கிறது. புpராந்திய மட்டத்தில் சந்திரிக்கா ரணிலைவிட பலமானவர் போல காணப்படுகின்றார். உள்ளநாட்டில் அரசியலமைப்பின் படியும் அவருடைய சூழ்ச்சி கரமான தலைமைத்தவ ஆளுமைப்படியும் ரணில் விக்கிரமசிங்கவின் போதாமைகளின் படியும் சந்திரிக்கா ஒப்பீட்டளவில் பலமானவராக காணப்படுகிறார். ஆனால் சர்வதேச அளவில் அவர் ரணிலைவிடவும் பல வீனமானவராகவே காணப்படுகின்றார்.
எனவே உள்நாட்டிலு}ம் சர்வதேச அளவிலும் தன்னைப்பலப்படுத்தும்வரை அவர் தமிழர்களுக்கு மேலும் விட்டுக்கொடுக்கக்கூடும்.
விட்டுக்கொடுத்தால்தான் சமாதானம் செய்யலாம். நாடாளுமன்றத்தில் தனது கூட்டு முன்னணியை ஸ்தரப்படுத்தலாம். சுமாதானம் செய்தால்தான் நிதியுதவி பெறலாம். நிதியுதவி கிடைத்தால்தான் பொருளாதாரம் அசையும். எனவே சந்திரிகா தனது சமாதானத்தின் ஆரம்ப கட்டங்களில் சில விட்டுக்கொடுப்புகளுக்கு போகும் தென்படுகின்றன. இப்படியே அவர் எதுவரை விட்டுக்கொடுப்பார்?
நிதியுதவி கையில் வரும் வரையிலுமா? அல்லது சர்வதேச அளவில் தன்னைப்பலப்படுத்தும் வரையிலுமா? அல்லது நாடாளுமன்றத்தில் விலைக்கு வாங்கக் கூடிய எதிர்கட்ச்சி ஆட்களை விலைக்கு வாங்கும்வரையிலுமா? அல்லது ஆர்தர் சி கிளாக் முன்பு ஒரு முறை தீர்க்கதரிசனம் உரைத்ததுபோல சமாதானத்துக்கான நோபல் பரிசை வெல்லும் கனவு மெய்ப்படும் வரையிலுமா?
நிலாந்தன் /Eelanatham

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>