05-26-2004, 09:44 AM
<b>தம்பையாவின் படுகொலை குறித்த விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்: மட்டு-அம்பாறை அரசியல்துறை </b>
[ ஐ.பி.சி தமிழ் ] [ புதன்கிழமை, 26 மே 2004, 5:48 ஈழம் ]
கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல் பீடத் தலைவர் குமாரவேல் தம்பையாவின் படுகொலை குறித்த விசாரணைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டு-அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டு-அம்பாறை அரசியல்துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குமாரவேல் தம்பையாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியிலும், தமிழ் மக்களின் தேசிய நலன்களிலும் குமாரவேல் தம்பையா தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் எனவும், தமிழ் மக்களிடம் நீங்காத இடம்பிடித்த இவரை தேசவிரோத சக்திகளே படுகொலை செய்துள்ளதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழ் மக்களின் கல்வி, பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக நலன்களை அழிப்பதற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கும் சில தேசவிரோத சக்திகள் கங்கணம் கட்டி நிற்பதாகவும், இதனொரு முயற்சியாகவே குமாரவேல் தம்பையா மீதான படுகொலை இடம்பெற்;றுள்ளதாகவும் இவ்வறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நன்றி புதினம்
<b>கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுட்டுக் கொலை </b>
[ மட்டக்களப்பிலிருந்து தேனுராள் ] [ திங்கட்கிழமை, 24 மே 2004, 19:10 ஈழம் ]
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் குமாரவேலு தம்பையா இனந் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு ஞானசூரியர் சதுக்கத்தில் உள்ள விரிவுரையாளரின் வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாதோர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.