05-25-2004, 11:47 PM
சபாஸ் இளைஞன். ஐந்தாம் அறிவின் ஆள்மன வெளிப்பாட்டை அருமையாக விளக்கினீர். உம் கருத்து சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்தது.
குருவியாரே ஏனய்யா உந்த புறங்கூறல் ? உங்களிட்டை நல்ல கருத்தக்களஞ்சியம் இருக்கு அதை நல்லபடியாத் தாங்கோ வாசிக்கிறோம். வளர்கிறோம். ஏன் காகத்தையும் , நாயையும் கூப்பிட்டு....?????????????
குருவிகள் நீங்கள் குறிப்பிட்ட சிலரது பிழைகளைத்தான் து}க்கி உச்சியில் வைத்து உருவெடுக்கிறீர்கள். ஆனால் யதார்த்தத்தில் நடைமுறையில் பெண்கள் ஆதிக்க சமூகத்தினரால் பாதிக்கப்படுவதுதான் நிசம்.
விளம்பரம் என்றால் பெண்களை அரைகுறையாக்கினால்தான் தனக்கு இலாபம் என்பதை கருத்திலெடுக்கும் முதலாளி தனது வியாபாரத்தைப் பெருக்க பெண்களை பயன்படுத்துகிறான். ஆனால் அந்தப்பெண்கள் எல்லாருமே பெண்ணிலையில் கரிசனையானவர்கள் அல்ல. அவர்கள் அதையொரு தொழிலாகச்செய்யலாம். பெண்ணின் முன்னேற்றமென்பது விளம்பரங்களில் அலங்காரம் காட்டும் பெண்களுக்கானது அல்ல. அது இன்னும் லட்சோப லட்சம் பெண்களின் ஆள்மனங்கள் புதைந்து கிடக்கும் ஆண்மேலாதிக்கத்தின் கால்களுக்குள் நசிந்து கிடக்கிறது.
இந்த முன்னேறிய நாடுகளில்கூட பெண்களின் ஆழுமைகள் பெருமளவில் வெளிப்பட்டாலும் கொடுப்பனவு இன்னும் ஆணுக்கு 50என்றால் பெண்ணுக்கு 40தான். அப்படியாயின் ஏன் தொழில் செய்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா ? சமவேலைக்குச் சம கொடுப்பனவு கேட்டு முதலாளிகளின் ஆதிக்கத்துக்கு பணியமனசு இடம்கொடுக்காது வேலைகளையும் பலர் இழந்துள்ளார் புரியுமோ ?
தொழில் என்றால் என்னவும் செய்யலாமா என்றும் குருவிக்குஞ்சு கேக்குமெண்டும் தெரியும். நாங்கள் பணம் கறக்கும் , அல்லது பணம் சேர்க்கும் மனிதச்சதைகள் பற்றிப்பேசுவதை விட்டு யதார்த்தமாகப்பெண்ணின் உண்மையான பிரச்சனைகளைப் புரிந்து பேசி தீர்வு காணுதல் சாலப்பொருந்தும். :roll:

+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com