Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துயர் பகிர்வோம்..
#6
ஈழத்தில் மெல்லிசையின் பங்குக்கு அத்திவாரமான மூத்த கலைஞர்களில் ஒருவரான சங்கீதபுூஷணம் <b>எம்.ஏ.குலசீலநாதனின் </b>இழப்பின் போது -
தன் வளமான குரலால் பாடி பலரது மனமேடைகளில் இடம் பிடித்துக் கொண்ட அவர் பாடிய ஒரு பாடலை என்னால் நினைவு கூராமல் இருக்க முடியவில்லை.


சந்தன மேடை என் இதயத்திலே
உன் சதங்கையின் நாதந்தான் கேக்குதடி
மந்திரமில்லாத மயக்கமடி
வண்ண மாமயில் நீயெம் தேவியடி

பாட்டுக்கு ஆடிடும் பாவைதான்
அவள் பாபம் எல்லாம் புதுமை ராகந்தான்
மானுடத்தின் குரல் ஒன்றுதான்
அவள் மனதை மயக்கியது உண்மைதான்

கானத்தில் கனிந்தவள் வந்திடுவாள்
இங்கு கண்டறியா இன்பம் தந்திடுவாள்
வானத்தில் ஒளிரும் நட்சத்திரமாய்
எங்கள் வாழ்வுக்கு வழிகாட்டி நின்றிடுவாள்.

இப்பாடலை அமரர் எஸ்.கே.பரராஜசிங்கத்துடன் இணைந்து பாடியுள்ளார்.
பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரன் என் சண்முகலிங்கம்.
இசையமைத்தவரும் குலசீலநாதனே.

இப்பாடல் இன்னும் தொடர்கிறதோ தெரியவில்லை. என் நினைவில் இருக்கும் வரிகளே இவை.
Nadpudan
Chandravathanaa
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 05-23-2004, 10:43 PM
[No subject] - by AJeevan - 05-23-2004, 10:56 PM
[No subject] - by sOliyAn - 05-24-2004, 01:27 AM
[No subject] - by kuruvikal - 05-24-2004, 01:42 PM
[No subject] - by Chandravathanaa - 05-25-2004, 10:52 AM
[No subject] - by AJeevan - 05-27-2004, 11:37 AM
[No subject] - by Rajan - 05-27-2004, 08:28 PM
[No subject] - by tamilini - 05-27-2004, 08:54 PM
[No subject] - by kuruvikal - 05-28-2004, 11:54 AM
[No subject] - by Rajan - 06-01-2004, 05:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)