Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பல்கலைக்கழக மாணவர் வேண்டுகோள்
#1
புலிகள் இயக்கம் மீதான தடை நீடிக்கை
இந்தியா மீள்பரிசீலணை செய்ய வேண்டும்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை இந்தியாவின் புதிய அரசு மீள்பரிசீலனை செய்ய வேண் டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டிருக்கின்றது.
ஈழத்தமிழர்களினதும், தமிழகத்து மக்களினதும் உணர்வுகளுக்கு மதிப் பளித்து இந்திய அரசு இதனைச் செய்ய வேண்டும் என்று மாணவர் ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது:-
ஈழத்தமிழ் மக்களின் சுதந்திர விடு தலையினை தமது இலட்சியமாகக் கொண்டு பல்வேறு உயிர்த்தியாகங்க ளின் மத்தியில் கடந்த இரண்டு தசாப் தங்களாகப் போராடி வருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை தமிழ் மக்களிலிருந்து பிரித்து அவர் களைத் தனிமைப்படுத்தி இல்லாதொழிக் கும் பல்வேறு முயற்சிகளில் ஸ்ரீலங்கா அரசானது முனைந்து செயற்பட்டு வரு கின்றது. குறிப்பாக ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடும் ஒரு விடு தலை அமைப்பினைத் பயங்கரவாதி கள் என முத்திரையிட்டு தடைசெய்து ஏனைய நாடுகளையும் தமது பொய்ப் பிரசாரத்தின் மூலம் விடுதலைப் புலி கள் அமைப்பினை தடைசெய்யுமாறு கோரி வந்தது. இதனடிப்படையில் எமது அயல் நாடான இந்தியாவும் தமி ழீழ விடுதலைப் புலிகள் அமைப்பி னையும் தடைசெய்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் சமாதான சூழலில் எமது விடு தலைப் போராட்டத்தின் யதார்த்தத் தினைப் புரிந்துகொண்ட பல்வேறு உலக நாடுகள் விடுதலைப் புலிகள் மீதான பார்வையினை மாற்றி வரு கின்றன. குறிப்பாக விடுதலைப் புலி கள் அமைப்பினை உத்தியோகபூர்வ மாகத் தமது நாடுகளுக்கு அழைத்தும் சமாதான நடவடிக்கைகளில் தமிழர் தரப்பு நியாயங்களுக்காகக் குரல் கொடுத்தும் வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில்தான் இந்தி யாவும் எமது விடுதலைப் போராட் டம் தொடர்பான யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையினை நீக்கி எமது சுதந்திரமான இருப்புக்கு வழி சமைக்கும் என ஈழத்தமிழ் மக்களா கிய நாம் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தோம். இலங்கைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி யின் பின்னால் உள்ள ஏகப்பிரதிநிதி கள் விடுதலைப் புலிகள் என்ற நிலைப் பாடும், தமிழகத்தினை பொறுத்தமட் டில் ஈழத்தமிழர் ஆதரவு கூட்டணியின் வெற்றியும் மேலும் வலுவூட்டின. தமி ழீழ மக்களும் தமிழக மக்களும் ஒரே சாரப்பட கருத்தொற்றுமையினை கொண்டுள்ளார்கள் என்பதனை நடந்து முடிந்த இலங்கை, இந்திய தேர்தல் முடிவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்த சூழ்நிலையில் இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தடையை மேலும் 2 ஆண்டுகள் நீடித் தமை மிகுந்த வேதனையினை ஊட் டுவதோடு அதிருப்தியினையும் உண்டு பண்ணுகிறது. இதனை நாம் வன்மை யாகக் கண்டிக்கின்றோம்.
எனவே, இந்தியாவில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு ஈழத்தமிழர் களினதும் தமிழகத்து மக்களினதும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உண்மை நிலையினை புரிந்துகொண்டு நசுக்கப்படும் ஓர் இனத்திற்காக போரா டும் ஓர் அமைப்பு மீதான தடையினை நீடித்திருப்பது குறித்து, மீள்பரிசீலனை செய்வதோடு ஈழத்தமிழர்களின் சுதந் திரமான சுபீட்சமான வாழ்வுக்கும் தமது ஆதரவினை வழங்குமாறு வேண்டுகின் றோம்.
\" \"
Reply


Messages In This Thread
பல்கலைக்கழக மாணவர் வே - by Eelavan - 05-25-2004, 05:35 AM
[No subject] - by kuruvikal - 05-25-2004, 08:39 PM
[No subject] - by tamilini - 05-25-2004, 09:49 PM
தமிழன் - by kavithan - 06-11-2004, 07:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)