Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஊர்க்குருவியோடு எனக்கொரு வழக்கு...
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/pod_april04_18.jpg' border='0' alt='user posted image'>

அப்பா தந்த
பப்பா உண்டு
விதைகள் காய வைத்து
நட்டேன் நாலு விதை
கிணற்றடியில்.........

மணிக்கொரு தடவை
சென்று பார்த்து
முளைக்க வைத்த பப்பா,
எப்ப வளரும் என்னளவென்று
நாளும் பாத்து
வளர்த்த பப்பா,
நாலு காய் காய்த்திருக்க
பட்ட சந்தோசம் சொல்லிமாளாது...!
எப்ப அது பழுக்கும் என்று
காய் கண்ட பொழுதிலேயே
பங்கு போட்டிருக்க
உண்மையில் பழுத்த பொழுது
நானும் செல்லடிக்குப் பயந்து
சுதந்திரம் இழந்து
ஊரை விட்டு ஓடியிருக்க
செல்லடிக்குள்ளும்
தன் கூடு காத்து
ஊரோடு ஒட்டிய
குருவி ஒன்று
சொந்தங் கொண்டாடி
உண்டது அப்பப்பா...!

இப்ப ஒரு உண்மை
உரைக்குது அக்குருவி....
உதட்டளவில் தாயகப்பற்றுரைத்து
வாழ்ந்தால் என் மண்ணிலேயே வாழ்வேன்
வீழ்ந்தால் தமிழ் மண்ணிலேயே வீழ்வேன் - என்று
வீர வசனம் பேசியோரெல்லாம்
செல்லடிக்கல்ல
அதை சாட்டுவைத்து
செல்வத்தனம் காண
தூர தேசம் பறந்த
சுயநலக்காரர்கள் வரிசையில் - நீ
அப்பப்பாவுக்கு சொந்தமில்லை
அதன் சுவையறிய
உனக்கு உரிமையில்லை என்று...!

இப்ப என் சித்தம் தெளியுது....
தூர இருந்து நீர் சிந்திய
மேகத்துக்கு இல்லை
தண்ணி ஊற்றி
பப்பா வளர்த்த உரிமை...!
பப்பா அருகிரு
கிணற்றடி ஊற்றுக்கே
உண்டு அவ்வுரிமை...!
பப்பா நட்டாலும்
என் சுயநலத்துக்காய்
பப்பா மறந்த நானும்,
நட்டது முதலாய்
வளர்த்தது வரை கூட இருந்த
அந்தக் குருவி
துன்பத்திலும்
பப்பா காத்ததாய் சொல்கிறது...!
அப்போ அதற்குத்தானே
பப்பா உண்ண உரிமை...!

சின்னக் குருவியது
கொண்ட உண்மை தேசப்பற்றறிந்து
வெட்கித்து ஒதுங்கினேன்...!
வாழ்க குருவி
நீயே உன் தேசத்தின் தேசபக்தன்...!
இத்தோடு முடிக்கின்றேன் என் வழக்கு...!
உன்னோடு இல்லை
எனக்கொரு போட்டி
நீயாய் தந்தால்
நானும் சுவைப்பேன்
நீ காத்த பப்பா தன் சுவை...!


முதற்பதிவு இங்கே... http://kuruvikal.yarl.net/archives/2004_05.html
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஊர்க்குருவியோடு எனக் - by kuruvikal - 05-23-2004, 02:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)