05-22-2004, 09:48 PM
குவைத்திற்கான இலங்கைத் து}துவராலயத்தில் மொத்தமாக 522 பெண்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு அங்கு எந்தவிதமான சுகாதார வசதிகளும் வழங்கப்படுவதில்லை. இப்பெண்கள் பார்க்கச் சென்ற என்னையும் அங்குள்ள அதிகாரிகள் உள்ளே அனுப்பவில்லை. அங்குள்ள பெண்கள் சாப்பிடுவதற்கு ஒரு ரொட்டியும், பருப்பு கறியும் மட்டுமே வழங்கப்படுகிறது.இவையெல்லாவற்றுக்கும் மேலாக து}துவராலய அதிகாரிகள் அங்குள்ள இலங்கைப் பெண்களை அரேபியர்களுக்கு விற்று பணம் சம்பாதிக்கிறார்கள். அங்குள்ள பெண்கள் ஒவ்வொருவரினதும் அழுகைக்குரல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது.

