05-22-2004, 01:50 AM
அடிப்படை நான்கு விடயங்கள் தொடர்பாக
முதலில் அரசின் உறுதிமொழி எழுத்தில்,
பின்பே பேச்சுக்கான திகதி நிர்ணயம்!
பிரபாவின் விடாப்பிடி நிலைப்பாடு இது!
இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை குறித்து மட்டுமே முதலில் பேசுவது என்பது உட்பட சமாதானப் பேச்சுக்கு அடிப்படையாக விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள நான்கு விடயங்கள் தொடர்பாகவும் இலங்கை அரசின் சார்பில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் உறுதிமொழியை எழுத்தில் பெற்றுக்கொண்ட பின்னரே நேரடிப் பேச்சுக்கான திகதி, இடம் ஆகியவை நிர்ணயம் செய்யப்படுவதும், அவற்றை அறிவிப்பதும் இடம்பெறமுடியும்.
- இவ்வாறு திட்டவட்டமான - விடாப்பிடியான - உறுதியான - நிலைப்பாட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இருக்கின்றார். புலிகளின் தலைமையோடு நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்கள் இத்தகவலை உதயனுக்குத்| தெரிவித்தன.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் முன்னைய அரசுடன் 1994 - 1995களில் பேசிய அனுபவம் புலிகளுக்கு நிறையவே உண்டு. அடிப்படை விடயங்களில் திட்டவட்டமான இணக்கம் கண்டு, அதை எழுத்தில் பெறாமல் சமாதானப் பேச்சில் இறங்கினால் பின்னர் வீண் ஏமாற்றங்களை வழமைபோல் எதிர்கொள்வதோடு, நெருக்கடிகளையும், அதனால் சர்வதேச அபகீர்த்தியையும் சம்பா திக்க வேண்டி நேரிடும் என்பதை பழைய பட்டறிவு தங்களுக்கு உணர்த்துவதாகத் தலைவர் பிரபாகரன் கருதுகிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விடயங்கள் தொடர்பாக அனுசரணைப் பணியாற்றும் நோர்வேத்தரப்பு ஊடாக சில சமாதான சமிக்ஞைகளை ஜனாதிபதி காட்டியுள்ளார் என்பது வாஸ்தவம்தான். அவை ஆக்கப10ர்வ மானவையாகவும் உள்ளன என்பதும் உண்மைதான்.
ஆனால், வெறும் சமிக்ஞைகளையும் செய்திகளையும் நம்பி மோசம் போகத் தலைவர் பிரபாகரன் தயாரில்லை. திட்டவட்டமான - தெளிவான - உறுதிமொழிகளை ஜனாதிபதி எழுத்து மூலம்வழங்கினால் மட்டுமே மேற்கொண்டு சமாதான முயற்சி முன்நகரும் பேச்சுக்கான திகதி, இடம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும். பேச்சுக்கு அடிப்படையாக விடுதலைப் புலிகள் முன்வைத்த நான்கு விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி அனுப்பும் தகவல்கள் ஒரு மாதிரியாக உள்ளன. வெளிவிவகார அமைச்சர் வெளியிடும் கருத்துக் கள் வேறுமாதிரியாக உள்ளன. அரசின் பங்காளிக் கட்சிகளிடம் இருந்து விடப்படும் அறிவிப்புகள் முற்றிலும் மாறாக உள்ளன. இந்தச் சூழ்நிலையில் பேச்சுக்கான அடிப்படைகள் குறித்து அரசிடம் எழுத்தில் உறுதியுரை பெற்ற பின்னரே மேற்கொண்டு நகருவது என்பதில் தலைவர் பிரபாகரன் மிகவும் உறுதியாகவும் பிடி வாதமாகவும் இருக்கின்றார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கச் செய்யும் முயற்சியாக அடுத்தவாரம் கொழும்பு வரும் விசேட அனுசரணையாளர் எரிக்சொல்ஹெய்மிடமும் இதே நிலைப்பாட் டையே புலிகளின் தலைமை வெளிப்படுத்தும் என்றும் தெரியவருகின்றது.
உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>