05-22-2004, 01:49 AM
கலைஞர், வைகோ, நெடுமாறன்
தமிழகத்தில் சிவாஜிலிங்கம் சந்திப்பு
தமிழகத்திற்குச் சென்றிருந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ முக்கியஸ்தருமான எம்.கே. சிவாஜிலிங்கம், அங்கு தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, மறுமலர்ச்சி தி.மு.க. தலைவர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இச்சந்திப்பு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக் கது. இந்தச் சந்திப்புகள் தொடர்பாக எம்.கே. சிவாஜிலிங்கம் உதயனுக்கு| தகவல் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
வைகோவுடன் சென்னையில் உள்ள மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தலை மைச்செயல கமான தாயகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வைகோவுடன் சந்திப்பு இடம் பெற்றது.
ஈழத்தமிழர்களுக்காக வைகோ சிறைசென்று வந்தமைக்காகவும்,உரிமைக்காகக் குரல் கொடுப்பதையும் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தேன். சந்திப்பின் போது மறுமலர்ச்சி தி.மு.கவின் சிவகாசித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிப்பிபாறை ரவிச்சந்திரனும் உடனிருந்தார்.
உயிர் மூச்சு உள்ளவரை ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பேன் என்றும் வைகோ தெரிவித்தார். மேலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தளபதிகளுக்கும், போராளிகளுக்கும், மக்களுக்கும் தனது அன்பைத் தெரிவிக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் அமையவுள்ள புதிய அரசு ஈழத்தமிழருக்கு எதிராகச் செயற்பட முடியாதவாறு தடுக் கும் வேலையைத் தாங்கள் செய்ய முடியும் எனவும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட் டார்.
கலைஞருடன் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதியை தி.மு.க தலைமைச் செயலகமான அண்ணா அறிவாலயத்தில்| சந்தித்து தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொண்டேன். தலைவர் கருணாநிதியுடன் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப் பினர் மாறன் ஆகியோர் உடன் இருந்தனர். அந்தச் சந்திப்புக் கடந்த சனி இரவு இடம் பெற்றது.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர் வில் தி.மு.கவின் பங்கு என்றும் உண்டு எனவும் குறிப்பிட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் கலைஞர்.
கடந்த திங்கள் மாலை 4 மணியளவில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை அவருடைய இல்லத்தில் சந்தித்து ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்துவரும் தியாகங்களைப் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தேன். பழநெடுமாறன் எனது சேவையைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். ஈழத் தமிழர்களின் போராட்ட நியாயத்தை இந்தியாவில் மட்டுமல்ல உல கம் முழுவதும் எடுத்துக் கூறுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார் அவர்.
அவருடன் சிறை மீண்ட இயக்கத் தோழர்களும் பேராசிரியர்களும் அச்சந்திப்பில் கலந்துகொண்டனர். வீரப்பனுடனும் தொடர்பு ஏற்படுத்தி கன்னடநடிகர் ராஜ்குமாரை விடுவிக்க உதவிய கொளத்து}ர் மணியும் இந்தச் சந்திப்பின்போது உடன் இருந்தார்.
தமிழீழத் தேசியத் தலைவருக்கும் இயக்கத்துக்கும், ஈழத்தமிழருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும்படி நெடுமாறன் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>