Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஹக்கீமினால் ஏமாற்றப்பட்ட பெண்
#22
ஹக்கீமுக்கெதிரான சதிமுயற்சியை கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
றிஷாட், நஜீப், பைலா எம்.பி.க்களின் கொடும்பாவிகளும் எரிப்பு


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமுக்கெதிராக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டதாக் கூறப்படும் சதி முயற்சியைக் கண்டித்து கிழக்கில் பல்வேறு இடங்களிலும் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் நேற்று நடைபெற்றன.

ஜும் ஆ தொழுகையையடுத்து நடைபெற்ற இந்த ஊர்வலங்கள் அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் மிகவும் மினுமினுப்பாக அமைந்திருந்தன.இறக்காமம் ஜும்ஆ பள்ளியிலிருந்து ஆரம்பித்த இந்த ஊர்வலம் இறக்காமம் பிரதான சந்திவரை சென்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் சுலோக அட்டைகளையும் நீண்ட பதாகைகளையும் தாங்கிச் சென்றதையும் காணக் கூடியதாயிருந்தது.


அமைச்சுப் பதவிகளுக்காக முஸ்லிம்களை அடகு வைக்காதீ“ரகள். பண ஆசைக்காக, றவூப் ஹக்கீமை வஞ்சிக்காதே உண்மையான முஸ்லிமாயிருந்து கொண்டு முஸ்லிம்களை தலைகுனிய வைக்காதே! போன்ற வாசகங்களையும், ஊர்வலத்தில் சென்றோர் ஏந்திச் சென்றனர். பின்னர் றிசாத் பதியுதீன் நஜீப், ஏமஜீது ஆகியோரின் கொடும்பாவிகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டன.

இதேவேளை அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆப் பள்ளியிலிருந்து ஹக்கீமுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் இடம்பெற்று கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.

நேற்று அம்பாறை மாவட்டத்தின் சகல முஸ்லிம் பிரதேசங்களிலும் கலகம் அடக்கும் பொலிஸார் விரைந்து காணப்பட்டதுடன் அவசரத் தேவைக்கென விஷேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும், கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. முஸ்லிம் சமூகத்தின் முகத்தில் அறைய நினைத்தவர்கள் முகம் குப்புற விழுந்து மூக்குடைபட்டார்கள் என்ற துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

கொழும்பில்...

இதேளை நேற்று கொழும்பு கொம்பனித்தெரு சந்தியிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கொம்பனித்தெரு ஜும்ஆப் பள்ளியில் ஜும்ஆ தொழுகையின் பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை ஏந்திக் கொண்டு கொம்பனி வீதி சந்திவரை சென்று சதி முயற்சியில் ஈடுபட்ட எம்.பி.க்களான ஹுசைன் பைலா, றிஷாட் பதியுதீன் மற்றும் இனாமுல்லா போன்றோருக்கெதிராக எழுதப்பட்ட வாஷங்ககளை ஏந்தியவாறு கோஷமெழுப்பினர்.

இதில் கொழும்பு மாநகர சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

புத்தளத்தில், ....

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன், நஜீப் ஏ.மஜீத் மற்றும் ஹுஸைன் பைலா ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் நகரில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் நகர சபை உறுப்பினர் ஏ.ஓ.அலிகான் ஆகியோர் தலைமையில் ஒன்று கூடிய முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பதாதைகளை ஏந்திக் கொண்டு புத்தளம் நகர மத்தியிலுள்ள சுப்பர் மார்க்கட் வரைக்கும் ஊர்வலமாக கோஷங்களை இம்மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக கோஷித்துக் கொண்டுசென்றனர்.

இவ்வூர்வலத்தில் இம்மூன்று எம்.பி.க்களையும் கண்டித்து எழுதப்பட்ட பதாதைகள் காணப்பட்டதுடன் ரிசாத் எம்.பி. போன்று வடிவமைக்கப்பட்ட கொடும்பாவியொன்று தூக்கிச் செல்லப்பட்டது.

பின்னர் அக்கொடும்பாவி நகர மத்தியில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களால் தீமூட்டி எரிக்கப்பட்டது. சுமார் அரை மணித்தியாலத்துக்கு மேலாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாகாண சபை உறுப்பினர்கள் நியாஸ் உயர்ந்த இடமொன்றில் ஏறி நின்று எம்.பி.மார்களையும் அரசையும் கடுமையாக சாடினார்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் பொலிஸாரும், விஷேட அதிரடிப்படையினரும் புத்தளம் நகரில்பலத்த பாதுகாப்பை மேற்கொண்டிருந்தனர்.

வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-18-2004, 12:02 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:09 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 01:06 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:41 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:56 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 07:56 PM
[No subject] - by tamilini - 05-18-2004, 09:00 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:37 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:22 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:23 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:24 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:25 PM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 02:44 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 09:17 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 09:32 PM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 10:43 PM
[No subject] - by Mathan - 05-20-2004, 01:24 AM
[No subject] - by Mathan - 05-20-2004, 01:31 AM
[No subject] - by Eelavan - 05-20-2004, 05:47 AM
[No subject] - by Manithaasan - 05-21-2004, 06:55 PM
[No subject] - by Mathan - 05-22-2004, 01:38 AM
[No subject] - by kuruvikal - 05-22-2004, 02:16 AM
[No subject] - by Eelavan - 05-22-2004, 05:04 AM
[No subject] - by Mathan - 06-02-2004, 02:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)