05-22-2004, 01:28 AM
ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜயம்பதியும்
புலித்தேவனும் நேற்று பேர்லின் பயணம்
அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமாதான பேச்சுவார்த்தையினை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் நோர்வே அனுசரணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜயம்பதி விக்கிரமரட்ணவும், விடுதலைப்புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் நேற்று ஜேர்மன் தலைநகரமான பேர்லினுக்கு சென்றுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பமாகவுள்ள நிலையில் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ள இவர்கள் இருவரும் பேர்லின் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பேர்லின் சென்றுள்ள இவர்கள் இருவரும் சமாதான முயற்சியினை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்
இவர்கள் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெளிநாட்டு அமைப்பொன்றின் ஏற்பாட்டிலேயே இவர்கள் சில கருத்தரங்குகளிலும் பங்குபற்றுவர் எனத் தெரியவருகின்றது.
சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது எப்போது என்பதை தீர்மானிப்பதற்காக நோர்வேயின் சமாதானத் தூதுவர் நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கை வருகின்றார். இவரின் விஜயத்தினையடுத்து பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் இணங்கியமைக்கு அமைய கூட்டறிக்கை ஒன்றினை நோர்வே அரசாங்கம் வெளியிடவுள்ளது.
இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டினை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்றுள்ள போதிலும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியதும் இரண்டு மூன்று பேச்சுக்களில் மட்டும் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை குறித்து கலந்துரையாடுவது என்றும் அதன்பின்னர் இறுதி தீர்வு குறித்த பேச்சுக்கள் அதனடிப்படையில் நடைபெறவேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளதாகவும் தெரியவருகிறது.
இத்தகைய நிலைப்பாட்டிற்கு தீர்வைக்கண்டு பேச்சுக்கான திகதியை தீர்மானிப்பதற்காகவே எரிக்சொல்ஹெய்ம் இலங்கை வருகின்றார். இவரது வருகையையடுத்து பேச்சுவார்த்தை தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் உள்ள தமது சட்ட நிபுணர்களை அழைத்து விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை தொடர்பான பேச்சுக்களில் கலந்துரையாடப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக புலிகள் சட்டநிபுணர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பேர்லின் சென்றுள்ள புலித்தேவன் அங்குள்ள சட்ட நிபுணர்கள், மற்றும் இராஜதந்திரிகளுடன் ஆராய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
புலித்தேவன், ஏனைய சில ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயம் செய்து பலருடனும் கலந்துரையாடவுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
பேச்சுக்களை ஐரோப்பிய நாடொன்றிலேயே நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் அது குறித்து அரசாங்கத்தினதும் புலிகளதும் சமாதான செயலகப் பணிப்பாளர்கள் ஆராய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>