Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விழித்தது என் மனம்....!
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/kuruvikkudu.jpg' border='0' alt='user posted image'>

பிறந்தது முதலாய்
தனிமையில் வாழ்கிறேன்
சுற்றம் இருப்பினும்
என் மனதோடு வாழ்வதென்னவோ
தனிமையில் தானே...!

அந்த மனத்துக்கு
ஓர் இதம் தேடி
மாலை மயங்க
கடற்கரை ஓடினேன்...
போன பொழுதில்
மனித ஆணும் பெண்ணுமாய்
செய்யும் கண்றாவிகள் கண்டு
சீ... என்று போனது
போன கணத்திலேயே
விலகி அருகிருக்கும்
பூங்காவில் புகுந்திருக்க
முனைந்திருந்தேன்
அங்கும் மனித அசிங்கங்கள்
கண்ணுக்கெட்டிய வரை.....
வாசலிலேயே விடை பெற்று
நகரங்கள் கடந்து
கிராமத்துக்கு ஓடினேன்
நல்ல வயற்கரை
வனப்பதில் களித்திருக்க
கனவு கண்டபடி....!

ஆனால் அங்கே
வயலும் இல்லை வனப்பும் இல்லை
வடிவாய் இருந்த கிராமமெல்லாம்
மண்மேடுகளாய்
இராணுவக் காவலரணாய்
காட்சியளிக்க
சித்தம் ஒடுங்கி
வேட்டைக்கு வரும் வேட்டுக்கு மிஞ்சி
மீண்டேன் என்கூடு...!

கொண்டேன் போதும் இந்த
நான் வைத்த தோப்பும்
என் வீடும் என்றே....!
அன்றே அத்தோடே
வேண்டாத தேடல்கள் தொலைத்து
என் மனமும் மகிழ்ச்சியோடு
ஐக்கியமானது
கனவுகள் கலைத்து
இனிதாய் தன் சுய நிகழ்வுகள்
தரிசித்தது....!

முதற் பதிவு இங்கே... http://kuruvikal.yarl.net/archives/000873.html#more
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
விழித்தது என் மனம்....! - by kuruvikal - 05-21-2004, 04:38 PM
[No subject] - by tamilini - 05-21-2004, 11:03 PM
[No subject] - by shanmuhi - 05-22-2004, 06:09 PM
[No subject] - by kuruvikal - 05-23-2004, 02:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)