05-21-2004, 11:44 AM
<b>இயன் மார்ட்டினுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு </b>
[ வவுனியாவிலிருந்து மகாமுனி ] [ வெள்ளிக்கிழமை, 21 மே 2004, 13:04 ஈழம் ]
சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னாள் தலைவரும், மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவருமான இயன் மார்ட்டினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சந்தித்து கலந்துரையாடியதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கிஷோர் சிவநாதன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சமாதான முன்னகர்வுகள் எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பாகவும் இனிவரும் காலத்தில் எவ்வாறு முன்னகர்த்த வேண்டுமென்பதும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் அவர்களின் விடுதலை தொடர்பாகவும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இடம்பெற்று வரும் கொலைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக சிவநாதன் கிஷார் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் இரா.சம்பந்தன், யோசப் பரராஜசிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ். கனகரட்ணம், எம்.கே.சிவாஜிலிங்கம், சிவநாதன் கிஷோர், ஈழவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றி புதினம்
<b>எதிர்க்கட்சித் தலைவர் பதவியேற்க வாஜ்பாய் மறுப்பு </b>
[ காவலு}ர் கவிதன் ] [ வெள்ளிக்கிழமை, 21 மே 2004, 2:48 ஈழம் ]
சோனியா காந்திக்கெதிரான பிரச்சாரங்களால் கோபமடைந்த முன்னாள் பிரதமர் அடேல் வாஐ;பாய், எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
பா.ஐ.க. தலைவர்களான சுஸ்மா சுவராஐ_ம் உமா பாரதியும் நடத்திய போராட்டங்களே வாஐ;பாய்க்கு எரிச்சலை ஊட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துணைப் பிரதமராக இருந்த அத்வானியே ஏற்கட்டும் என்று வாஐ;பாய் கூறியுள்ளார். எனினும் தேசிய ஐனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவராகப் பதவியில் நீடிக்க வாஐ;பாய் இணங்கியுள்ளார்.
இதற்கிடையில், சோனியா காந்தி பிரதமராக வந்திருந்தால், காங்கிரஸ் ஆட்சியை விரைவாக விழுத்தியிருக்கலாம் என்று கருதும் சங் பரிவார் உட்பட பா.ஐ.க.வினர் பலர், அவர் பிரதமராக வருவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உமா பாரதியும் சுஷ்மா சுவராஐ_ம் காரியத்தைக் கெடுத்து விட்டதாகக் கருதுவதாக செய்திகள் கூறுகின்றன.
வாஐ;பாய் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்காவிடில், அத்வானியின் பொறுப்பில் பா.ஐ.க. விரைவில் பிளவுபட்டுவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.