Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இவர்களுக்கு ஓர் பகிரங்க சவால்...
#2
யார் இவர்கள்

1988 ம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ராஜனி திரணகம,ராஜன் கூல்,தயா சோமசுந்தரம்,கே.சிறிதரன் ஆகியோரையும் இன்னும் சில பலகலைக் கழக ஆசிரியர்களையும் உள்ளடக்கி மனித உரிமைகளுக்கான பலகலைக்கழக ஆசிரியர் அமைப்பு(யாழ்ப்பாணம்) என்ற பெயரில் ஒரு புத்திஜீவிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

அவ்வமைப்பின் ஆரம்ப வேளையில் யாழ் மண்ணில் இந்தியப்படைகள் நிலைகொண்டிருந்தன,விடுதலைப்புலிகள் தவிர இந்திய இராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்டுக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்,டெலோ போன்ற இயக்கங்களும் இந்திய இராணுவத்தால் தமிழ் இளைஞர்களை வலுக்கட்டாயமாகச் சேர்த்து அமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய இராணுவம் என்பனவும் இருந்தன.

இவ்வாறான காலப்பகுதியில் யாழ் மண்ணில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும்,மற்றும் போராளிக்குழுக்கள்,போராட்டங்கள் போன்றவற்றின் தோற்றம் வளர்ச்சி பற்றியும் யாழ் பல்கலைக்கழக புத்திஜீவிகள் என்ற முறையில் இந்த அமைப்பானது அறிக்கைகளை வெளியிட்டு வந்தது.தமிழர்களின் போராட்ட வரலாற்றில் யாழ் பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.மாணவர்கள் மாத்திரமின்றி பல்கலைக்கழக ஆசிரியர்களும் காத்திரமான பங்களிப்பை வழங்கி வந்திருக்கின்றனர்.இதனால் யாழ் பல்கலைகழக ஆசிரியர் அமைப்பு என்ற வகையில் இவர்களின் அறிக்கை மதிப்பும் பெறுமதியும் உடையதாயிற்று.உள்ளூர்ப் பத்திரிகைகள் மாத்திரமின்றி வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களும் இவர்களது அறிக்கைகளை மேற்கோள் காட்டிச் செய்திகளை வெளியிட்டார்கள்.அந்த அறிக்கைகளின் பெறுமதிக்கு அவற்றை எழுதியவர்களை விட வெளியிடப்பட்ட தளமான யாழ் பல்கலைக்கழகம் என்பதே காரணமாக இருந்தது.

இவ்வாறான நிலைமையில் ஈழப்போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தவும் எந்தவித பக்கச்சார்புமின்றி போராளிக்குழுக்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய விமர்சனங்களை வழங்கவும்,அதேவேளை சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்திய இராணுவத்தின் செயற்பாடுகளை வெளியுலகத்திற்கு எடுத்துக் காட்டவும் என்று முறிந்த பனை(Broken Palmyra) என்ற நூலை ஆக்கி வெளியிட்டார்கள்.
இந்நூலானது எந்தவிதப் பக்கச்சார்புமற்றது என்று கூறக்கூடிய வகையிலும் நிறைய வரலாற்றுத் தகவல்களையும் அரசியல் ஆய்வுகளையும் கொண்டதாக காணப்படுகின்றது.இதன் பிரதான ஆசிரியராக இருந்த ராஜனி திரணகம அவர்களுக்கு மாணவர் மத்தியில் இருந்த மதிப்பு உள்ளூரில் நிறையத் தகவல்களைத் திரட்ட உதவியுள்ளது.இந்திய இராணுவத்தினர் வருவதற்குக் காரணமாக இருந்த செயற்பாடுகள்,இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணத்தைக் கைப்பர்ற நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கை ஒப்பரேஷன் பவான்.தமது கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் வந்த பின்னர் இந்திய இராணுவத்தின் செயற்பாடுகள்,போராளிக்குழுக்களின் செயற்பாடுகள் போன்றவற்றை சம்பவங்களின் அடிப்படையிலும் சாட்சிகளின் அடிப்படையிலும் விபரித்திருக்கின்றது அந்த நூல்.

இன்று கூட ஈழப்போராட்டம் பற்றிய நேர்மையான,விளக்கமான தகவல்களை அறிய விரும்பும் ஒருவருக்கு நான் அந்த நூலின் பெயரையே கூறுவேன்.ஆரம்பத்தில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழ் சிங்களத்திலும் இந்ந்நூல் வெளியிடப்பட்டது.

<img src='http://kavithai.yarl.net/archives/rajani.jpg' border='0' alt='user posted image'>

Dr.Rajani Thiranagama
M.B.B.S(Colombo), Ph.D(Liverpool)
Head Dept of Anatomy, University of Jaffna


21 செப்டெம்பர் 1989 இல் இந்நூல் எழுப்பிய அதிர்வின் விளைவாக இந்நூலின் பிரதம ஆசிரியர் ராஜனி திரணகம படுகொலை செய்யப்படுகிறார்.படுகொலைக்கான காரணம் விடுதலைப்புலிகள் எனக்கூறப்பட்டது.படுகொலையைத் தொடர்ந்து இந்த பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பினரது குரலும் அறிக்கைகளும் தடம்புரண்டு முற்று முழுதாக விடுதலைப்புலிகளை விமர்சிப்பனவாக அமைந்தன இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து.1990 இல் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டதாகக் கூறி விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டார்கள்.

அதன் பின்னரான அவர்களின் நடவடிக்கைகள் இதுவரைகாலமும் அவர்கள் செய்து வந்த பணியிலிருந்து விலகி முற்று முழுதாக புலிகளை விமர்சிப்பதும்,பல்வேறு சம்பவங்களுடன் விடுதலைப்புலிகளைத் தொடர்புபடுத்தி அறிக்கை விடுவதுமாக மாறிப்போனது.இவர்கள் தமது அறிக்கைகளுக்கு சமூகத்தில் ஒரு மதிப்பினைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் என்ற பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.

தங்களைப் புத்திஜீவிகளென்றும், நடுநிலைவாதிகளென்றும்,தமிழ் மக்களை அழிவிலிருந்து மீட்க வந்த மீட்பரென்றும் கூறிக்கொள்ளும் இவர்களது செயற்பாடுகளை விமர்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
தொடர்ந்து வாசிக்க முன்பு இவர்களின் இணையத் தளத்திற்கு ஒருமுறை சென்று இவர்கள் யார் என்பதையும் இவர்களால் பக்கம் பக்கமாக வெளியிடப்பட்ட அறிக்கைகளையும் பொறுமை இருந்தால் படித்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் நான் கூறப்போவது உங்களுக்குப் புரியும்.உண்மைத் தன்மை விளங்கும்.

நன்றி - ஈழநாதனின் வலைப்பூ (http://www.kavithai.yarl.net)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-20-2004, 12:31 PM
[No subject] - by kuruvikal - 05-20-2004, 03:56 PM
[No subject] - by Mathan - 05-20-2004, 04:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)