05-20-2004, 12:19 PM
இடிபாடுகளுக்குள்ளிருந்தும் எழத்தெரிந்தவர்கள்
.
" .. உலகெங்கும் சிதறிய நம் துளிகளும், சிந்தையால் ஈழவர் என்ற இனம் அன்றோ! கூடு திரும்பும் 5 லட்சம் உறவுகளோடு எல்லோரும் சேர்ந்தால் எழாதோ இங்கோர் புது யுகம்! .. "
நினைவுகளைப்போலவே நீண்டு செல்லும் நெடுஞ்சாலைகள் போக இரண்டு, வர இரண்டு என இடப்பட்ட வரிசைக்குள் விரையும் வாகனங்கள், பாதையின் இருமங்கிலும் பசுமைமிகுந்து கிடக்கும் வயல்கள், தோட்டங்கள், இடையிடையே கனரவாகங்கள் நெஞ்சாலையிலிருந்து வெளியேறித் தம் பாதை தேடி அடையும் கைத்தொழில்பேட்டைகள், ஊர்மனைகளிலிருந்து தொழிலாளர்களை தம் மடியில் அள்ளிக் கொண்டு வந்து சேர்க்கும் நீளம் குறைந்த தொடருந்துகள்.
அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தும், அநாவசியங்களைத் தவிர்த்தும், ஊருக்கொரு நூலகம், விளையாட்டு திடல், பாடசாலை, வைத்தியசாலை, மற்றும் பொதுமக்கள் கூடிமகிழ்த்த குதூகலித்திருக்க ஓர் மண்டபம் இப்படியாக இருக்கும் பல ஊர்மக்களுக்குப் பொதுவாய், மாவட்டத்திற்கு ஒன்றென நவீன உலகின் அற்புதங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் நகரங்கள் விண்ணை முட்டும் கட்டடங்கள், வீதிகளின் இருபக்கங்களும் வகைக்கொன்றாய் வசதியாய் அழகான கடைகள், கண்ணும் கருத்துமாய் காவலில் ஈடுபட்டிருக்கும் காவற்துறையினர், வீதிகளின் நடுவே விதம் விதமான வண்ணமலர்ச் செடிகள், கல்வி கற்கும் ஒரு வகையினர். வெவ்வேறு கடமைகளில் ஈடுபட்டுள்ள இன்னுமொரு வகையினரை இவற்றிற்கடுத்த மூன்றாவதாய், ஓங்கி வளர்த்திருக்கும் இத்தேசத்தினை கட்டியெழுப்பிய தலைமுறையினர், இளைய தலைமுறையிடம் தம் பணியை ஒப்படைத்துவிட்டு ஓய் வாய்ச் சேர்ந்து நாட்டு நடப்புகள் பேசுவதிலும் நற்பணிகள் ஆற்றுவதிலுமாய்! இழிந்தோர் மற்றும் ஏற்போரென்று எவருமே இல்லாத நன்னெறிச் சமத்துவ தேசம் ஒன்றாக நம்முடைய தேசம் ஆகினால்... ஆக்கப்பட்டால்!....
நிச்சயமற்ற ஒரு சமாதான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மீண்டும் ஒரு போர் ஆரம்பிப்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக, தென்னிலங்கையின் இனவாதமே அமையும். இந்த வகையில் தொடர்ச்சியான அழிவுகளும், இழப்புக்களும் மக்கள் மனங்களில் இனி நாம் உய்யும் வழியில்லை', என்ற ஒரு விரக்தி நிலைக்கு இட்டுசெல்லலாம். ஆனால் இடிபாடுகளும், இல்லாமைகளும் நிறைந்திருந்த இப்பூமியின் ஒரு பகுதியிலிருந்து எவ்வாறு இப்படி வியக்கத்தகு 'சொர்க்காபுரி' உருவானது என்று அறிந்து கொள்வதன் மூலம் அழிவு என்பது முடிவல்ல ஒரு புதிய தொடக்கத்திற்கான அடிக்கல் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
இன்று நம்முடைய மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் மேற்கு ஜரோப்பிய தேசங்கள், முழுமையான போர்க்கோலம் பூண்டிருந்த 2ம் உலகயுத்தகாலகட்டம் அது. முதலாம் உலகயுத்தத்திலிருந்து மீண்ட தேசங்கள், இரண்டு தசாப்பதங்களில் தான் கண்டுவிட்ட வளர்ச்சிகளையெல்லாம் போர்த்தளபாடங்களாகப் பரீட்சித்துக்கொண்டிருந்தவேளை அது. ஜேர்மனி, அவுஸ்திரேலியா, இத்தாலி மற்றும் துருக்கி சேர்ந்த பலமான கூட்டோடு, பிரான்சு, பிரித்தானியா, ஜக்கிய அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் கூட்டு மோதியது. இந்த நாடுகளின் காலனித்துவ மேலாண்மை காரணமாகவும், ஜேர்மனியோடு கூட்டுச் சேர்ந்த ஜப்பானின் போரீடுபாட்டாலும் உலகம் முழுவதிலும் வியாபித்த 2ம் உலகயுத்தத்தில் 61 நாடுகளைச் சேர்ந்த 110 மில்லியன் (11கோடி) போர்வீரர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று கூறப்படுகின்றது. உலகத்தின் ஒவ்வொரு மூன்றாவது மனிதனும் அன்றைய கட்டத்தில் ஒரு போர்வீரனாக இருந்தான் எனவும் அறியப்படும் இந்தப் போரில் படைவீரர்கள் இழப்பு 25 மில்லியன் (2.5கோடி) உயிர்கள் அதில் 10 மில்லியன் ரஷ்யப்
படை வீரர்கள். இங்கு குறிப்பிடத்தக்கவை போர்வீரர்களின் இழப்புக்கள் மட்டுமே என்பது நோக்கத்தக்கது. உலகம் முழுவதிலும் பொதுமக்களின் இழப்பு உட்பட 60 மில்லியனுக்கும் (6 கோடி) அதிகமானது.
இப்படிப்பாரிய அழிவுகளைச் சந்தித்த 2ம் உலகயுத்தம் 1945இல் முடிவுக்குவந்தது. ஜேர்மனியக் கூட்டுப்படை ரஷ்யாவின் அர்ப்பணிப்பு மிக்க தாக்குதலில் படுதோல்வியைச் சந்தித்தது. ஜேர்மனியை நோக்கி முன்னேறிக் கொண்டு வந்த அமெரிக்கக்கூட்டு மற்றும் ரஷ்யப் படைகள் தாம் ஆக்கிரமித்த பகுதிகளை முறையே சொந்தம் கொண்டாடின. இதன் காரணமாகவே சோசலிஷ ஆட்சிக்குட்பட்ட பகுதி கிழக்கு ஜேர்மனியாகவும், முதலாளித்துவ ஆட்சிக்குட்பட்ட பகுதி மேற்கு ஜேர்மனி எனவும் பிரிந்துபோனது. தோற்ற பகுதியினர் மட்டுமன்றி வென்ற பகுதியினரும் பொருளாதார ரீதியாக பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தனர். தமது முழு உற்பத்தித்திறனையும் போரியல் தளபாடங்களுக்கான செலவிட்டமையே இதற்கான காரணமாகும். இந்தவேளையிலே பிரிட்டன் இலங்கையிடம் கடன்பட்டிருந்ததும், தமது உணவுத்தேவைகளுக்காக இந்தியாவையே நம்பியிருந்ததும் கவனிக்கத்தக்கது.
கிழக்கு ஜேர்மனி 03 ஒக்ரோபர் 1989 இல் மேற்குடன் இணைந்தது.
முதலாம் உலகயுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஜேர்மனியை வென்றவர்களின் முழுப்போர்ச்செலவையும் கொடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. இவ்வாறான ஒரு தடை முறையைப்பின்பற்றி தாம் பிடித்து வைத்திருக்கும் மேற்கு ஜேர்மனியிடம் முடியும்வரை கறந்துவிட வேண்டுமென்ற போக்கையே அமெரிக்க நேசப்படைகள் ஆரம்பத்தில் கொண்டிருந்தன. இருந்தும் இவ்வாறான ஒரு ஆக்கிரமிப்புப் போக்கை தாம்கடைப்பிடிக்கும் பட்சத்தில், கருத்தியல் ரீதியாகப் பலம் பெற்றுவரும் சோசலிஷக்கிழக்கு ஜேர்மனி, எங்கே ஒரு முன்னுதாரண தேசமாகப்போய்விடுமோ என்று அமெரிக்கா அஞ்சியது. ஜேர்மனியை விட சோசலிஷத்தையே தமது முதலாவது எதிரியாகக்கொண்டது.
இதன் காரணமாக சோசலிஷம் நிரூபிக்கப்பட்டுக்காட்டப்படும் கிழக்கு ஜேர்மனிக்கு எதிராக, தம்முடைய முதலாளித்துவ திறந்த பொருளாதாரத்தின் மகிமைகளை மேற்கு-ஜேர்மனியில் நிகழ்த்திக் காட்டவென உத்தேசித்து மேற்கு - ஜேர்மனி சோசலிஷக் கருத்துப்பரப்புகைக்குள் ஆட்பட்டும் பட்சத்தில், தன்னுடைய ஏனைய ஜரோப்பியக் கூட்டாளிகளையும் இழக்க வேண்டிவருமென அச்சம் கொண்டு, 1947 யூன்மாதம் ஜேர்மனி உட்பட போரால் நலிவுற்ற ஜரோப்பிய நாடுகளுக்கான தனது உதவித்திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா.
அவ்வேளையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் கற்லெற் மார்சலின் மீளமைப்புத்திட்டம் (European Recovery Program ERP) 'மார்ஷ் திட்டம்' எனவே அழைக்கப்பட்டது. இதன் நோக்கங்களாக பின்வரும் 4 விடயங்கள் அமைந்திருந்தன.
01. அமெரிக்க உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்புக்களை ஜரோப்பாவில் ஏற்படுத்துதல். இதன் மூலம் அமெரிக்கா பொருளாதார வளர்ச்சிக்கு தளம் அமைத்தல்.
02. அமெரிக்காவின் உதவி கிடைக்காமல் போகும் பட்சத்தில், சோவியத்தின் சோசலிஷ ஆளுகை மேற்கு ஜரோப்பாவின் செல்வாக்குப் பெறும் ஆபத்தைத் தடுத்தல்.
03. சோசலிஷ கருத்தியலுக்கு எதிராக, போட்டியாக ஒரு முதலாளித்துவவெற்றி முன்வைக்கப்படவேண்டும்.
04. முதல் மூன்று விடயங்களையும் சாதித்துக் கொள்வதற்காக மக்களின் அன்றாட தேவைகளானவற்றை பூர்த்திசெய்தல்.
இவ்வாறான இந்த நான்கு நோக்கங்ளையும் கருத்தில் கொண்டு 1948ம் ஆண்டிலிருந்து 1952 வரையிலான காலப்பகுதியில்,இந்த மேற்கு ஜரோப்பிய நாடுகள் கடனடிப்படையில் 13 பில்லியன் அமெரிக்க டொடர்களைப்பெற்றன. இந்தப்பணத்தின் பெரும்பகுதி இந்த நாடுகள் அமெரிக்காவிலிருந்த இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்பட்டது. கடன் வழங்கிய 'காரணத்துக்காக உதவும்' அதேநேரம், தனது உற்பத்திகளைவிற்கும் ஒரு தந்திரமாகவும் அமெரிக்கா இதைக் கையாண்டது.
மேற்கு ஜேர்மனியைப் பொறுத்தவரையில் போருக்குப்பின் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக, அப்போதிருந்த றைஸ் மார்க் (RM) தனது பெறுமதியை முற்றிலிலும் இழந்திருந்தது. குளிருக்கு எரிப்பதற்காய் பணத்தாள்களைக் கட்டுக்கட்டாய் எரிக்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்திருந்தவேளையில் தான், 'ஜரோப்பிய மீளமைப்புத் திட்டம்' நடைமுறைக்கு வந்தது. 1948யூன் மாதம் 21இல் புதிய நாணயமாக 'டொச் மார்க்' (RM) அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஜேர்மனியருக்கும் (மேற்கு ஜேர்மனி) 40 டொச்மார்க் கடனாகப் பெற்ற பணத்திலிருந்து வழங்கப்பட்டது. கடைகளில் எல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் குவிந்து கிடந்தன. மிகுந்த துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்த மேற்கு, ஜேர்மனியார்கள்; அதுவரை ஒருவகைக் கிழங்குக்கஞ்சியையும், பாணையுமே உண்டுவந்தவர்கள், ஒரு நாள் இரவோடு எல்லாம் மாறியதைக்காண்கின்றார்கள். அதிகமானவர்கள் தங்கள் 40 டொச்மார்க்கிற்கு வயிறார உண்டார்கள். வேறு சிலர் நல்ல உடைகளை வாங்கினார்கள். கூடவே அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்களின் உதவியுடன் உள்ளுர் உற்பத்தி முடுக்கிவிடப்படுகின்றது. ஒவ்வொருவரும் தங்களாலன உச்ச உற்பத்தியில் ஈடுபட்டனர்.
பலரை இழந்து போயிருந்த தேசத்தில் பற்றாக்குறைகள் பல. குறிப்பாக ஆசிரியர்பற்றாக்குறை. திறமையுள்ளவர்கள் குறுகிய காலப்பயிற்சியுடன் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆக இந்த 40 டொச்மார்க்'கே நாணயப்பரிமாற்றத்திற்குட்பட்டு கொள்வனவு விற்பனை என்ற சுழற்சியில் புழக்கத்தில் இருந்தது. முக்கால்வாசிதொழிற்சாலைகள் அழிக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தில், மூன்றில் ஒருபங்கினர் வதிவிட வசதிகளற்று வாழ்ந்துவந்த சூழலில், தன்னம்பிக்கையை மட்டும் விடாது கடுமையாக உழைத்தார்கள். இவர்களின் கடுமையான உழைப்பைக் கண்ட அமெரிக்கா மேலதிகமாக ஆளுக்கு 20 மார்க் வீதம் கடன் வழங்கியது.
முடமாக்கப்பட்ட தமது தேசத்தினை மீண்டும் நிலைபெறச்செய்ய வேண்டுமென்ற பிரயத்தனத்துடன், கடுமையான குளிரிலும் உழைத்தார்கள் மேற்கு ஜேர்மனியர்கள். எட்டிய பயன்....1952ம் ஆண்டு பெற்றுக் கொண்ட கடன் மீளளிக்கப்பட்டது. போருக்கு முன்பு இருந்த தனிநபர் வருமாணத்தைவிட, 35 வீதத்தினால் இப்போது அதிகரித்திருந்தது. தனது சகல வடுக்களிலிருந்தும் சுயமாகவே மீண்டு, எழுந்து நின்ற ஒரு தேசமாக தன்னை வளர்த்துக்கொண்டது.
கடனாளியாக இருந்த நாடு 5 வருடங்களுக்குள் கடன்கொடுக்கும் நிலைக்கு தன் உழைப்பிலே உயர்ந்து கொண்டது. ஒட்டுமொத்த மேற்கு
ஜேர்மனியர்களின் இந்த வெற்றிக்கு முதுகெழுப்பாக இருந்து 'மார்ஷல் உதவித்திட்டத்தை' வழிநடத்திச் சென்றவரும், டொச் - மார்க்கின் தந்தை என சிறப்பிக்கப்படுபவருமான லுட்வின் எயர்ஹார்ட் இங்கே நினைவு கூறப்படவேண்டியவர். 1949 இலிருந்து 1963 வரை 14 ஆண்கள் நிதியமைச்சராக இருந்து நாட்டை, மக்களின் உழைப்பை பயன்காணச் செய்தார். இன்று 82மில்லியன் மக்களோடு ஜேர்மனி இருக்கும் இடத்தை உலக அரசியல் அது வகிக்கும் பாத்திரத்தை ஜந்து வருடங்கள் (1948 - 1952) அவர்களின் மூத்த சந்ததி சிந்திய வியர்வையினுடாகவே நாம் பார்க்க வேண்டும்.
இப்பொழுது சொல்லுங்கள் எங்கள் தேசம் வளர்ச்சி பெறுவது யார் கையில் தங்கியிருக்கின்றது? வெறுமனே விமானக்குண்டுவீச்சுக்களால் கட்டடங்களைச் சிதைத்து விடுவதால், எங்கள் கனவுகளைச் சிதைத்துவிடலாமோ? கல்லெறிந்து நம் இனமென்னும் கூடு சிதறடிக்கப்பட்டதாக எதிரி கனவு காணலாம்.
ஆனாலும், உலகெங்கும் சிதறிய நம் துளிகளும், சிந்தையால் ஈழவர் என்ற இனம் அன்றோ! கூடு திரும்பும் 5 லட்சம் உறவுகளோடு எல்லோரும் சேர்ந்தால் எழாதோ இங்கோர் புது யுகம்! கேட்டுக்கொள்ளுங்கள் அடிக்கடி உங்களை! ஓர் வலிமையான தேசத்தின் அடிக்கற்களையாய் ஆகிய உங்களின் வலிமையைப் பெருக்குங்கள் பயன்தரு நூல்களை வாசியுங்கள்! புலம்பெயர்ந்துள்ள உங்கள் உறவுகளோடு நாளைய தேசத்தின் நாட்டத்தைப்பற்றியும் கதையுங்கள்! எங்கள் சூரியச்சுடரின் சுகமான அரவணைப்புக்குள் தமிழீழம் தலை நிமிரட்டும்.
"கனவு மெய்ப்படவேண்டும்!
கைவசம் ஆவது
விரைவில் வேண்டும்!
தரணியிலே பெருமை வேண்டும்!
சு.ஞாலவன் ஈழநாதம்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>