05-20-2004, 12:16 PM
சத்தமில்லாமல் ஒரு சதி
"...அப்போதுதான் வீட்டிற்குள் நுழைகின்றேன். முன் ஹோலில் அக்காவும் பக்கத்து வீட்டு அன்ரியும் ஏதோ கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தாண்டி அறைக்குள் நுழைகின்றேன். சரியான களைப்பு. கண்டியிலிருந்து கொழும்புக்கு பஸ்ஸில் வருவது சரியான அலுப்பு வேலை. இவள் அக்கா என்ன வெளியே கதைக்கிறாள் அப்பிடி. நானொருவன் களைச்சு வந்திருக்கிறதையும் பொருட்படுத்தாமல். காதுகளை அவர்களின் கதைப்பக்கம் கூர்மையாக்குகின்றேன். ?உண்மையாக வேணுகோபால் செய்தது பிழைதானே?... என்னவெண்டாலும் சீதா பாவம் - அது அக்கா, ?சீதா பாவம் தான் ஆனால் வேணுகோபாலில் பிழையெண்டு நான் சொல்லமாட்டேன்.? இது பக்கத்து வீட்டு அன்ரி. எனக்கிண்டால் எதுவுமே விளங்கவில்லை. இவர்கள் யாரைப்பற்றித்தான் கதைக்கிறார்கள். ஊர் எண்டாலும் யாரோ ஊர்க்காரரைப் பற்றிக் கதைக்கிறார்கள் எனலாம். அன்ரியும் நாங்களும் வேறு வேறு ஊர்க்காரர் எனவே அதற்குச் சந்தர்ப்பம் இல்லை. அப்ப யாரைப்பற்றி இவ்வளவு கரிசனை என்று யோசிக்கையிலேயே அக்கா உள்ளே வந்தாள். தம்பி சாப்பாடு மேசையிலிருக்கு, பிரிட்ஜில் தண்ணியிருக்கு சாப்பிடு. நான் ?சத்யா? பார்க்கப் போகிறேன் என்றாள். நான் உடனே யார் சத்யா, அது உன்ரை நண்பியா? என்றே கேட்டேன். அத்துடன் நிக்காமல் யார் வேணுகோபால்? என்றேன். உடனே அக்கா விழுந்து விழுந்து சிரித்து விழுந்துவிட்டு அன்ரியிடம் சொல்ல அவவும் விழுந்து விழுந்து சிரித்தார். அப்போதுதான் அக்கா சொன்னாள் அது நாடகத்தொடர்கள் சத்தி T.V யில் ஒளிபரப்பாகிறது என்று. இது ஒரு சின்ன உதாரணம்தான். இந்த நாடகத் தொடர்கள் எவ்வாற எமது சமூகத்தை பெரிய அளவில் பாதித்திருக்கின்றது என்று விளங்குவதற்கு எங்கு பார்த்தாலும் சத்யா, குடும்பம், வாழ்க்கை, ஆலயம், மந்திரவாசல் இது வயசு வித்தியாசமின்றி பலராலும் பேசப்படும் சொற்கள். இந்த நாடகத் தொடர்களை என்னால் இரண்டு கோணத்தில் நோக்கக் கூடியதாக உள்ளது.
1) பொதுவாக எம்மக்கள் கிராமப் புறங்களில் இருந்து நாட்டு நிலமை காரணமாக கொழும்பில் குடியேறி அறைகள் விடுதிகளில் மிகவும் நெருக்கமான அவதியான ஒரு சூழ்நிலையில் வாழ்க்கை நடாத்துகின்றார்கள், வெளியில் செல்லவே பயப்பிடுகிறார்கள். இது இங்கு மட்டுமல்ல தமிழர் வாழும் ஏனைய பகுதிக்கும் பகுதிக்கும் பொதுவான நிலை. ஒரு சமூகம் சூழல், பக்கத்துவீட்டார் என்று வாழ்ந்த எமது மக்கள் இப்போது ஒரு அறை என்று வாழ்க்கையை சுருக்கி கொண்டுவிட்டர்ர்கள். இவ்வாறு உள்ள போது இவ்வர்கள் மன நிலையில் ஒரு அழுத்தம் உண்டாக வாய்ப்புள்ளது. இது இவர்களைப் பெரிதும் பாதிக்கும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்தத் தொடர்கள் அவர்களிற்கு இன்iனாரு குடும்பத்தில் அதடர்பை அவர்களின் கதைகள் அறியும் வாய்ப்பு இன்னொருவரின் பிரச்சினை, குடும்ப சூழல் தொடர்பைத் தொடர்பைத் தொலைக்காட்சி மூலம் அதாவது ஒரு கற்பனையாக ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இது அவர்களின் மனவழுத்தத்தை குறைக்கின்றது என்ற விடயத்தில் சந்தோஷம் தான்.
2) எனது மற்றய கோணம் மிகவும் ஆபத்தானதும், ஆழமானதும் சில நேரங்களில் சிலருக்கு அற்பதனமாகவும் அமையலாம். எமது மக்கள் போர் என்ற குகையில் சிக்கித்தவிக்கும் ஓர் சமூகம், இனவாதத்துடன் தவிக்கும் ஒரு இனம், பொருளாதாரத்தில் சரிந்த மக்கள், பின் தள்ளப்படும் ஒர் சமூகம். நாங்கள் போரிட வேண்டியவர்கள், குரல் கொடுக்க வேண்டியவர்கள், எதிர்க்க வேண்டியவர்கள், உணர்ச்சிகளை உரக்க வெளிப்படுத்த வேண்டியவர்கள், கயனவு காணமுடியாதவர்கள் நாங்கள், காதல் செய்யக்கூடாதவர்கள் நாங்கள், எங்களுக்கு வேண்டியது என்பது உரிமையுடன் கூடிய அமைதி. வரலாறுகள் எமக்கு வாழ இடமளிக்கவில்லை. எப்பவோ எவரோ வாழுவதற்கு வழிசமைக்கவே எமக்கு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் இன்று 6.30க்கும் 8.00 மணிக்கும் தான் தொலைக்காட்சியை நிப்பாட்டுகிறார்கள். ஏனென்றால் அதுதான் செய்திக்கான நேரம். 97ல் நான் கொழும்பு வந்தபோது என்னிடம் சொல்லிக் கவலைப்பட்டான். எங்கள் சனம் எவ்வளவு கஷ்டப்படுகிறது, சும்மா அரசாங்கம் அரசாங்கம் ஏமாத்துகிறது, சமாதானம் அது இது என்று இழுத்தடித்து எமக்கு எப்பத்தான் விடிவு வரப்போகுது?? என்றெல்லாம் கவலைப்பட்டான். அதே நண்பனை இன்று சந்தித்தபோது தான் போனமாதம் யாழ்ப்பாணம் போனதாகச் சொன்னான். எப்படி ஊர் எண்டேன் ஒரே அலுப்பு மச்சான். எனக்கு என்ன கவலையெண்டால் ஒரு மாதமாக வாழ்க்கையும், குலவிளக்கும் பார்க்கவில்லை. சங்கர் மகாதேவனின் நிகழ்ச்கியும் பார்க்க முடியாமல் போய்விட்டது என்றான். எவ்வளவு மன மாற்றம் அவனது மனநிலையில் என்று யோசித்துவிட்டு நேரத்தைப் பார்த்தேன் 8.30 க்கு வாழ்க்கை பார்க்கவேண்டும் என்ற ஞாபகத்தில். இது உண்மையான விடயம் மட்டுமல்ல மிகவும் கவலைப்படக்கூடிய ஒரு விடயமும் தான். ஆனால் மிகவும் நுணுக்கமாக சிந்திக்க வேண்டிய விடயம்.
கடந்த 2 வருடத்தில் எத்தனை தனியார் வானொலிகள், தொலைக்காட்சிகள், தென்னிந்திய கலைஞரின் நிகழ்ச்சிகள, அவை தரமானவையா அல்லது தலையைப் பிடுங்க வைப்பவையா என்பது இன்னொரு பெரும் கேள்வி. அது மட்டுமின்றிக் குறுகிய காலத்தில் இவ்வாறான ஒரு தோற்றத்தின் பின்னணி, நோக்கம் என்ன? அல்லது தொடர்பு சாதனங்களின் வளர்ச்சிதான் இந்த வளர்சிக்கு காரணம் என்று இலகுவில் விட்டுவிடமுடியுமா?
மனம் என்பது மிகவும் நுண்ணிய பொருள். அதனுள் திரும்ப திரும்ப ஒரு விடயத்தைப் புகட்டினால் அது அதற்கே பழக்கபடுத்தி கொள்ளும். அதே போல் மனிதனும் சூழலுக்கு இயல்பாகவே தன் வாழ்க்கையை தொடர்கின்றான். வளைந்து கொடுக்கின்றான். பெரும்பான்மையான மக்கள் இப்போது வடக்கிலிருந்து வெளியேறி இங்கு வந்து தங்கி உள்ளனர். இவ்வாறான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிச்சயம் அவர்களின் கடப்பாடுகளில் இருந்து அவர்களைப் பின்தள்ளும் என்பதில் எந்த வித ஜயப்பாடும் இல்லை. இது யாராலும் திட்டமிட்டுச் செய்யப்படும் சதியா? இதற்கு ஏதேனும் அரசியல் இராஜதந்திர பின்னணி உண்டா என்பது ஒரு கேள்வியே.
அது மட்டுமின்றி இப்போது சில் மாதங்களில் இந்தியாவில் இருந்து சன் T.V காரர்கள் அங்காங்கே மக்களை சந்திச்சு உரையாடி, விருப்பாமான பாடல்களைக் கேட்டு அதை ஒலிபரப்பினார்கள். அப்போது அவர்கள் இங்கு யுத்தம் அப்படி இப்படி கூறுகிறார்கள் ஆனால் உங்களைப் பார்க்கவும் இங்குள்ள மக்களைப் பார்க்கவும் அப்படி தெரியவில்லையே என்றனர். அவ்வாறே கொஞ்ச நாட்களின் முன்னர் எனது சிங்கள நண்பர் ஒருவரை சந்தித்தபோது சொன்னார். தமிழ்மக்கள் கஷ்டப்படுகின்றார்கள், அடிமைப்படுத்தப்படுகின்றார்கள். சுதந்திரமில்லையென்று என்னுடன் வாக்குவாதப்படுவாய். ஆனால் பார் தனியே தமிழ் மக்கள் என்றில்லாது சிங்கள, முஸ்ஸீம் மக்கள் கூடுதலாக வாழும் கொழும்பு, கண்டியிலும் இப்படியான பெரியளவான இசை நிகழ்ச்சிகள் தமமிழ்மக்களால்தானே நடாத்த முடிகின்றது. அப்போது தமிழ்மக்கள் தனியாக வாழும் யாழ்ப்பாணத்தில் அவர்களிற்கு சுதந்திரமில்லை. திறந்த சிறைச்காலையெண்டு சொல்வதில் என்ன அர்த்தம். இப்போது கொழும்பில் சிங்கள இசை நிகழ்ச்சிகளை விட தமிழ் நிகழ்ச்சிகள் தானே கூட நடக்கிறது. தமிழ்ர்களின் உரிமைகள், சுதந்திரம் மறுக்கப்படவில்லையென்றார், ஓரளவேனும் எங்களின் பிரச்சினையும் விளங்கிய அந்த சிங்கள நண்பர்.
இந்நோக்கத்தில் பார்க்கையில் வெளியுலகத்திற்கு இங்கு சகல உரிமையும் சுதந்திரமும் உண்டு என்பதை உணர்ந்த சிலரால் உந்தப்பட்டு செயற்படுத்துவதே இந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சித் தொடர்புகள் என்ற ஜயப்பாடு தீவிரமாக எழுகிறது.
சரி எது எப்படியோ இங்கு வந்து வாழும் மக்கள் போரைப்பற்றி சிந்தனையை, கடமைப்பாடுகள் மறந்தும் அதில் இருந்து ஒருங்கவே இங்கு வந்து பெருமளவில் குடியேறுகின்றனர், என்று நோக்கினாலும் இது அவர்களின் அன்றாட வாழ்விலோ, சமூக சிந்தனையிலோ, கல்வியிலோ எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் ஒரு பெரிய கேள்வியே.
ஒரு முழுமையான நாளை எடுத்து நோக்கினால் காலை 10 மணிக்கு சுவர்ணவாகினியில் ஒரு திரைப்படம், 4.30 - 9.00 மணிவரை தொடர்களும் 9.30 க்கு சிரசவில் தமிழ்த்திரைப்படம் இதில் பெரும்பான்மையான மக்கள் முழுமையாக இந்நேரங்களை இதற்கு மட்டுமே செலவிடுகிறார்கள் என்பது கண்கூடு நேரடியாக அவதானித்ததொரு விடயமும் கூட. அண்மைக்காலமாக ஒரு வாரத்தைக் கருதினால் அதில் சத்தி T.V யில் 7 படங்களும் சுவர்ணவாகினியில் 4 படங்களும் சிரசவில் 2 படங்களும் ஜரிஎன், ரிஎன்எல் போன்றவற்றில் தாலா ஒரு படமும் மொத்தமாக 15க்கு மேற்பட்ட படங்கள் ஒளிபரப்பாகின்றது. இது ஒரு நல்ல போக்கா?. இது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மிகவும் கவலைப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இது திட்டமிடப்பட்ட விடயமா என்பது மிக மிக அச்சத்தை அளிக்கிறது. இதற்கு பலியாவது அப்பாவி மக்களே.
அது மட்டுமின்றிக் அன்மைக்காலமாகவே இந்தியாவில் வெளிவரும் அதே தினத்தில் இங்கும் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. அவ்வாறான எல்லாச் செயற்பாடுகளும் ஓரிரண்டு பெரிய நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள் பெரிய அரசியல் செல்வாக்குள்ள நிறுவனங்கள் என்பதும் சிந்திக்கப்படவேண்டிய இன்னொரு விடயம். அது மட்டுமின்றி இத் திரைப்படங்கள் தரமானவையா என்பதைவிட இவை கூட எம்மக்களின் பிரச்சினையை திரித்துக் காட்டுகின்றன என்பற்கு என்னால் ஒரு உதாரணத்தைக் கூறமுடியும். இவை எனது கருத்திற்கு வலிமை சேர்ப்பதாய் அமைகின்றது. சரிநிகரில் வந்த ஆலங்காட்டி மழையும், குண்டு மழையும் என்ற கட்டுரையின் தொகுப்பை இங்கே தருகின்றேன். இது தெனாலி படத்தைப் பற்றி குறிப்பிடுகையில்...
தெனாலி சோமனைப் பற்றி சொல்வதற்கு முன் அவர் தப்பிவந்த அத்தேசம் இப்போது எப்படி இருக்கிறது? இங்கே ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். இருபதாயிரம் போராளிகள் உயிரைத் தியாகம் செய்தும் சொந்த நாட்டிலேயே 5 லட்சம் பேரும் இதர நாடுகளில் 5 லட்சம் பேருமாக அகதிகளாக்கப்பட்டும், பல ஆயிரம் குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டும் பல ஆயிரம் பேர் மனநோயாளிகளாக்கப்பட்டும், பல கோடி தமிழர் சொத்துக்கள் அழிக்கப்பட்டும், பல நூறு பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டும், ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் காணாமல் போயுள்ளனர். போரில் இருந்து தப்பிவிருகையில் கடலிலே மூழ்கிப் பலியாகியும் உள்ளார்கள். இத்தனை துன்பங்கள் நிரம்பித்தான் அந்த சின்னஞ்சிறிய தேசிய இனத்தின் அவல வாழ்வு அங்கிருந்து தப்பித் தமிழ்நாடு வரும் ஒருவனின் கதையை அதுவும் இராணுவக் கொடுமைகளால் மனப்பிறழ்வுக்கு உள்ளாக்கபட்ட ஒருவர் கதையைக் கேலியாகச் சிரித்து திரைப்படமாக வெளியிட்டு வெற்றிப்படமாக ஆக்கமுடிகிறது என்பதாலேயே அத்திரைப்படம் பற்றி நாம் அவசியம் பேச நேர்கிறது.
அதிலும் தெனாலி இராணுவத்தால், பெரிதும் பாதிக்கப்பட்டவர் அப்படிப்பட்ட நபரை மையமாக வைத்து கேலி செய்து படம் எடுப்பது என்பது ஈழத்தமிழர் போராட்டம் வாழ்வுரிமை துன்பதுயரம் எல்லாவற்றையும் பின்தள்ளி மறைத்து அப்பிரச்சினையோடு உணர்வுபூர்வமாகத் தொடர்புடைய தமிழ் மக்களைத் திரைதிருப்பும் முயற்சியாகவே தெனாலி படத்தைக் கருதமுடியும்.
கமல் ஈழத்தமிழராக நடிப்பதை இலங்கைத் தமிழராக நடிப்பதாக பத்திரிகைகள் எழுதின. ஈழம், ஈழத் தமிழர், என்ற வார்த்தைகளை திட்டமிட்டே எழுத மறந்தன. கமலின் ரசிகர்களோ இன்னொரு படி மேலே போய் சிங்களம், தமிழில் கமல் அசத்துகிறார் என்று கூறி விளம்பரம் செய்தனர். ஈழத்தமிழர் பிரச்சனையை இவ்வளவு நகைச்சுவையாக கூட எடுக்க முடியுமோ என்று ?இந்தியா டுடே? யே வியக்கிறது. இப்பிரச்சினை நகைச்சுவையான முதல்ப்படம் என்று சொரணை அற்றவர்களுக்கு சுட்டிக் காட்டுகிறது.
இடைவிடாத கடும்போர், அழிவு இந்திய அமைதிப்படை நுழைவு, இஸ்ரேல் ஆயுத உதவி, பாகிஸ்தான் உதவி இப்படிப்பல நாடுகளின் உதவியோடு சிங்கள அரசு தமிழ் இனத்தை சின்னாபின்னமாக்கி வருகின்றது. சொந்த மண்ணை இழந்து தவிக்கின்றது தமிழினம். நாமும் நம் பங்கிற்கு அங்கிருந்து தப்பிவரும் ஒருவரின் கதையை நகைச் சுவைத் திரைப்படம் என்ற பெயரில் சிரித்து ரசித்து இந்த மரண ஓலத்தை கதைத்துக் கொண்டாடியிருக்கின்றோம். ஒடுக்குமுறையை சிரித்து ரசித்து மறப்பது சராம்சத்தில் அவ்வினத்திற்குத் துரோகம் செய்வதும் அந்த ஒடுக்கு முறைக்கு துணை போவதாகத்தான் அமையும்.
இத்திரைப்படங்கள் எம்நாட்டு தியேட்டர்களிலே 100 நாட்கள் ஓடியிருக்கிறது என்றால் எம்மக்களின் அறியாமை எவ்வளவு என்பதும் ஊடகங்களின் சதியும் வெளிப்படுகின்றன. இவை நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தாவிடினும் மிகவும் கவலைப்பட வேண்டிய விடயம், சிந்திக்கப்பட வேண்டியவை, சீர்திருத்தப்பட வேண்டியவை.
அடுத்தவிடயம் அண்மைக்காலமாக இவ்வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அதும் வானொலிகளை நோக்கினால் முழு நிகழ்ச்சிகளுமே தொலைபேசி சம்பந்தமாகவே இக்கின்றது.
இதனால் மக்கள் தாங்கள் விரும்பிய பாடல்களை விரும்பிய நேரத்தில் கேட்கக் கூடியதாக இருக்கிறதாம். அவர்கள் கேட்ட கேள்விக்கும் பிரச்சினைக்கும் மக்கள் தாங்களே நேரடியாக பதிலளிக்க முடிகிறதாம். அதுதான் பலரது இதுபற்றிய கருத்தும் இச்சாதனங்களுடன் தொடர்புபட்டவர்களினதும் விளம்பர வெளிப்பாகும். இவ் வானொலி நிகழ்ச்சிகளை நோக்கினால் முழுமையான தொலைபேசி தொடர்பான நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளது. முழுமையான ஒரு நாளில் அதாவது 24 மணியில் ஒரு வானொலி நிலையத்தில் முழுமையாக 15 மணித்தியாலத்திற்கு தொலைபேசி இணைப்பு இருந்து கொண்டிருக்கின்றது. அதைச் சற்று சிந்திப்பவருக்கு மிகவும் தெளிவாக விளங்கும். அதாவது 900 நிமிடங்கள் அண்ணளவான மொத்தமான தொலைபேசித் தொடர்பில் (Online) உள்ள நேரம். நேரத்திற்கு ஏற்ப தொலைபேசிக் கட்டணம் மாறுவதால் சரியாக 5 ரூபா என்று நோக்கினால் ரூபா 4500 அழைப்பு மேற்கொள்ளப்படுகிறது. மொத்தமாக (சிங்கள வானொலி உட்பட) கிட்டத்தட்ட 6 வானொலி நிலையம் என்று கருதினால், மொத்தமாக ரூபா 27000 தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் 12318750 வரும். இத்கான பாதுகாப்பு வரி 6.5% ஆனதே இப்போது பிரச்சினை இப்படி நோக்கினால் இது ஒரு அண்ணளவான உதாரணம். அண்மைக்காவமாக வெளிவரும் கருத்தான பாதுகாப்பு வரிக்கு கூடிய பணம் தொபேசியூடு வருகின்றது என்பது தெளிவாகின்றது, உறுதியாகின்றது. இப்போது இவையெல்லாம் அரசியல் ராஜதந்திரப் பின்னணியில் சிக்கியிருக்கிறதா என்ற கேள்வியும் வலுவடைகின்றது. அதற்கான விடையும் கொஞ்சமாக தெளிவடைகின்றது.
கடைசியாக ஒன்று, எம்மக்கள் இதையுணர்ந்து செயற்பட வேண்டும் என்பதே என் விருப்பம், பலரது விருப்பம் அது மட்டுமின்றி இதனுடன் 3 எழுத்து உளவு நிறுவனங்களுக்கு தொடர்புகள் உண்டு என்று கூறினால் சாதாரணமாக எவரும் நம்பப்போவதில்லை. எறும்பூர கற்குளியும் என்பதை அவர்கள் நம்புகிறார்கள், காதைக்கடித்துக்கொண்டு தோடு தருகிறார்கள் என்பதை நீங்கள் நம்புங்கள், கொஞ்சம் சிந்தியுங்கள்.
க. ஈசன், இறுதி வருடம், பொறியியல் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்
நன்றி இளங்கதிர்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>