Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடும்பம் ?
#7
இப்படிக் கதைத்து எத்தனை காலம்?

"...சதா வேலை.....வேலை.... என்று அலைவதும். பிள்ளைகள்......பிள்ளைகள்.....என்று மூழ்கிப் போவதும் வாழ்வில் சலிப்பை ஏற்படுத்தி ஏதோ கடமைக்கான வாழ்வாக்கிவிடும். இதிலிருந்து விடுபட்டு நேரம் கிடைக்கும் நேரத்தில் மட்டுமல்லாமல் அதற்காக நேரம் ஒதுக்கி ஒருவர் மனதை ஒருவர் பகிர்ந்து கொள்ளலாம்...."
எப்போதும் தன் சந்தோஷம், தன் துக்கம் என்றில்லாமல் பிறர் சந்தோஷம். பிறர் துன்பத்தில் பங்கெடுக்கும் மனோபாவம் மலர்கின்ற போது, தாம்பத்திய உறவு ஆரம்பமாகின்றது. கணவன்-மனைவியரிடையேயான வாழ்தல் உறவு எமது சமூகக் கடமைக்காக என்றில்லாமல் இரு மனமும் சந்தோஷத்தை அனுபவிக்கும் வாழ்தலாக இருக்க வேண்டும்.

இந்த மன நிறைவான சந்தோஷ வாழ்வு எல்லோருக்கும் கிட்டுவதில்லை ஏன்?

ஆரம்பத்தில் இருக்கும் சந்தோஷம் பின்னர் இருப்பதில்லை ஏன்?

கணவன்-மனைவி இருவரும் தமக்குள் கதைத்துக் கொள்வதை பகிர்ந்து கொள்வதில்லை. இது தான் பிரதான காரணம் என்கின்றனர் உளவியலாளர்கள்.

உளரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிசிச்சை அளிக்கப்படும் போது முதலில், அவர் கூறுவதைப் பொறுமையாகக் கேட்டல் தான் முக்கியமாகிறது. அதன் பின் அவர் கருத்துக்களை செவி மடுத்து அவருடன் உரையாடி பரஸ்பரம் பல விடயங்களை பகிர்ந்து கொள்ளும் போது, உளத் தாக்கத்திற்குட்பட்டவர் ஓரளவு அதிலிருந்து விடுபடும் தன்மையை உணர முடியும். எனவே, ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியில் குடும்பம் நடத்தும், கணவன்-மனைவி இருவரும், ஒருவர் கதையை ஒருவர் செவி மடுத்து அதற்கு மதிப்புக்கொடுத்து பகிர்ந்து கொள்ள நிச்சயம் நேரம் ஒதுக்க வேண்டும்.

சதா வேலை.....வேலை.... என்று அலைவதும். பிள்ளைகள்......பிள்ளைகள்.....என்று மூழ்கிப் போவதும் வாழ்வில் சலிப்பை ஏற்படுத்தி ஏதோ கடமைக்கான வாழ்வாக்கிவிடும். இதிலிருந்து விடுபட்டு நேரம் கிடைக்கும் நேரத்தில் மட்டுமல்லாமல் அதற்காக நேரம் ஒதுக்கி ஒருவர் மனதை ஒருவர் பகிர்ந்து கொள்ளலாம்.

உயிரோட்டமற்ற இறைவனை ஆலாவணப்படுத்திப் கோயிலை புதுப்பிப்பது போல் வீட்டையும் புதுப்பித்து உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும்.

திருமணம் முடிந்து 25 வருடங்கள் கழித்த தம்பதிகளிடம் இருந்த மனோபாவம்.

மனைவி- முதல் பிள்ளைக்காக நான் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது என் கையைப் பிடித்து ஒரு அன்புப் பார்வை பார்த்த என் கணவன். இப்போ 3 பிள்ளைகள், அவர்கள் பெரியவர்கள், இத்தனை வருடத்தில் அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்ததாக எனக்கு தெரியவில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய சில மணி நேரங்கள் தான் என்னிடம் உண்டு.

கணவன் - சம்பாதித்து கொடுக்கிறேன். தேவையானதைச் செய்து கொடுக்கின்றேன். இதுக்கு மேலே பிரியமா இருக்கிறதெண்டா?

குறிப்பு:- பாதுகாப்பும், பணமும், நகையும், குழந்தையும் சந்தோஷத்தைத் தொடர்ந்து காப்பாற்றுமா? இவை மட்டும் சந்தோஷத்தைத் தருவதில்லை........
துணை என்பது எந்த வரையறையுமற்ற சுதந்திரமான மனத்தொடுகைக்கு ஏற்ற இடமாக இயங்க வேண்டும். அப்போதுதான் அதன் மீது நாட்டமும் இருந்து கொண்டே இருக்கும்.

ஆரணியா தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
குடும்பம் ? - by Mathan - 05-18-2004, 07:47 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 08:28 PM
[No subject] - by sOliyAn - 05-19-2004, 12:51 AM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 02:37 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 03:10 PM
[No subject] - by adipadda_tamilan - 05-20-2004, 06:32 AM
[No subject] - by Mathan - 05-20-2004, 12:13 PM
[No subject] - by Mathan - 05-20-2004, 12:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)