05-20-2004, 11:49 AM
<b>அரசியலமைபில் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது புலிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்: பேராரிசியர் நிஹால் ஜெயவிக்கிரம </b>
[ கொழும்பிலிருந்து சண்முகப்பிரியா ] [ வியாழக்கிழமை, 20 மே 2004, 7:51 ஈழம் ]
அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது விடுதலைப் புலிகளையும் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ள வேண்டுமென பேராசிரியர் நிஹால் ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ~மக்களும் அரசியலமைப்பும்| என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படாத நிலையில் பொதுத் தேர்தல் முடிவுகளானது, அரசியலில் மாற்றம் கொண்டு வர சிறந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இடம்பெற்ற பொதுத் தேர்தல் மூலம் விடுதலைப் புலிகளுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. சகல இன மக்களினதும் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்படும் அரசியலமைப்பே சிறந்தது. பெரும்பான்மையினரது நலனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அவை இயக்கப்படக் கூடாதென்றும் அவர் கூறினார்.
அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்ட மூலம் ஏற்கும் பொறுப்பு சுதந்திரமான ஒரு ஆiணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். நியமிக்கப்படும் ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றத்தில் பிரதிநித்துவம் வகிக்காத அரசியல் கட்சிகளுக்கும் அதே போன்று இந்த விடயம் தொடர்பாக ங்களுக்கு கரிசனை காண்பிக்கும் குழுக்களுக்கும் ஆலோசனைகள் முன்வைக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென பேராசிரியர் ஜெயவிக்கிரம மேலும் தெரிவித்தார்.
நன்றி புதினம்