Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இவர்களுக்கு ஓர் பகிரங்க சவால்...
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/humanrights.jpg' border='0' alt='user posted image'>

<i>மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு (யாழ்ப்பாணம்)(University Teachers for Human Rights -Jaffna )என்னும் பெயரில் செய்திகளையும் அறிக்கைகளையும் வெளியிடுவதற்கு கொழும்பிலும் வெளிநாடுகளிலும் இருந்து கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து என்ற மாயப்போர்வைக்குள் எழுதும் இவர்கள் தகுதியானவர்கள் தானா? இவர்கள் வெளியிடும் அறிக்கைகளின் நம்பகத் தன்மை என்ன? தம்மை நடுநிலைவாதிகள் எனச் சொல்லிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் பக்கச்சார்பற்றவர்களா?</i>...<b>Eelanathan... http://kavithai.yarl.net/.[/b]

இந்த அன்பருடன் கருத்தால் இணைந்து நாம் இவர்களுக்கு விடுக்கின்றோம் ஒரு பகிரங்கச் சவால்....


இவர்கள் யார்....???!
சந்திரிக்கா அம்மையார்
ஜெயசிக்குரு நடத்தி
பொழிந்து தள்ளிய ஆட்லறிக்குள்ளும்
ஈயத்துகளுக்குப் பதிலாய்
பஞ்சு வைத்து அனுப்பியதாக
கதையளந்தவர்கள்...!

சுப்பசொனிக் கொட்டிய குண்டில்
வடமராச்சியில் மாணவர்
இரத்தத்தில் மிதந்த போது
சாயம் பூசி நாடகம் நடித்ததாக
அறிக்கை விடுபவர்கள்...
ஆனால்
சிறிலங்கா இராணுவ
தாங்கி சுமந்து வந்த
சமாதானப் புறா
புலிகள் குண்டில் காயமடைந்ததற்காய்
ஐ நா சபைக்கு
"மனித உரிமை" காக்கக் கோரி
அறிக்கை விட்டவர்கள்....!

இவர்களிடம் ஒன்று கேட்கிறோம்
அதுவும் சவாலைக் கேட்கிறோம்....
உண்மையில் உங்கள் இதயத்தில்
சமூக அக்கறை இருப்பின்
இந்த அறிக்கை விடும் தொழில் துறந்து
சிங்கள அரசின்
வெட்டுப் புள்ளியால்
வீதியில் நிற்போருக்கு
வாழ்க்கையில் வளமான வழிகாட்டிட
பல்கலைக் கழகத்துக்கு வெளியே
பல்கலையும் புகட்டி
சமூகத்துக்கு தாம் கற்றது கொண்டு
செய்யட்டும் பார்ப்போம்
ஓர் அரிய சேவை என்றுமே....!

யதார்த்தத்தில் அதுவே
உங்கள் சமூக மனித உரிமை
வலுப்படுத்தி நிற்கும்...!
அன்றி நாளை
உங்கள் அறிக்கைக்கு
என்ன அர்த்தம் என்று கேட்கும் குரல்களே
அதிகரிக்கும்....!
அதுவே நீங்கள்
படித்த முட்டாள்கள் என்று
பறைசாற்றியும் நிற்கும்....!

நட்புடன் குருவிகள் ---- http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இவர்களுக்கு ஓர் பகிரங - by kuruvikal - 05-20-2004, 03:21 AM
[No subject] - by Mathan - 05-20-2004, 12:31 PM
[No subject] - by kuruvikal - 05-20-2004, 03:56 PM
[No subject] - by Mathan - 05-20-2004, 04:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)