05-20-2004, 01:27 AM
செவ்வாய்கிரக ஆராய்ச்சியில் ""ஒப்பர்சுனிட்டி வேகம்
லொஸ் ஏஞ்சல்ஸ்,
செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம் குறித்த ஆராய்ச்சியில் ஒப்பர்சுனிட்டி ஆய்வுக்கலன் ஈடுபட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா, மனிதர்கள் வாழத்தகுதியானதா என்பது குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிமையம் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்விற்கு ஆய்வுக்கலன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒப்பர்சுனிட்டி ஸ்பிரிட் ஆகிய இரண்டு ஆய்வுக்கலன்கள் தற்போது செவ்வாயில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. செவ்வாயில் இருவேறு திசைகளில் இருந்து இந்த ஆய்வுக்கலன்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. செவ்வாயில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற தண்ணீர் ஒரு காலத்தில் இருந்ததா என்பதைக்கண்டறியும் ஆராய்ச்சியில் இவை இறங்கியுள்ளன. செவ்வாயில் கடல் இருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கடந்த மார்ச் மாதம் நாசா அறிவித்தது. குசேவ் என்ற பள்ளத்தில் ஸ்பிரிட் ஆய்வுக்கலன் ஆராய்ச்சி மேற்கொண்டது.
அங்கிருந்த கற்களில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இது ஒரு காலத்தில் ஏரியாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தற்போது மற்றொரு பள்ளத்தில் ஒப்பர்சுனிட்டி ஆய்வுக்கலன் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இது தான் கடந்த மார்ச் மாதம் ஈகிள் பள்ளத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகள் கொண்ட கற்களை கண்டறிந்தது. ஒப்பர்சுனிட்டி ஆய்வு மேற்கொள்ளும் பள்ளம் பல அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. இப்பள்ளத்தில் பக்கவாட்டு அடுக்குகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இங்கு எரிமலைகள் வெடித்து பாறைகளாக படிந்து இருப்பதற்கான அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எரிமலை வெடிப்பு மற்றும் பள்ளங்கள் உருவாவதற்கு முன்பு செவ்வாய்கிரகம் என்னவாக இருந்தது என்ற ஆராய்ச்சியில் தற்போது விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். செவ்வாயில் உள்ள ஒரு மலைக்கு கொலம்பியாமலை என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மலை மீது ஸ்பிரிட் ஆய்வுக்கலன் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளது. இங்குள்ள கற்களில் ஆராய்ச்சி மேற்கொள்ள விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். ஸ்பிரிட்டில் இருக்கும்சுரியசக்தி பேட்டரிகள் தொடர்ந்து நன்றாக இயங்கிவந்தால் ஜூன் மத்தியில் இந்த மலையை ஸ்பிரிட் ஆய்வுக்கலன் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>