Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஹக்கீமினால் ஏமாற்றப்பட்ட பெண்
#18
தலைவரை பாதுகாக்கும் நல்லெண்ணத்தில் செயற்பட்டதால் சதியில் சிக்கியுள்ளோம் ரிஸாத் பதூர்தீன் எம்.பி.

தலைவர் ரவூப் ஹக்கீமினால் ஏமாற்றப்பட்ட குமாரிகுரே என்ற பெண்ணுக்கு நியாயம் பெற்றுக்கொடுத்து கட்சியையும் கட்சித்தலைவரையும் பாதுகாக்கவே நாம் அந்த விடயத்தில் தலையிட்டோம். ஆனால் அந்தப்பெண் சதி செய்து எம்மைக் குற்றவாளிகூண்டில் நிறுத்தியுள்ளார். ஆகையால் இது குறித்து கட்சி பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளி யார் என்பது கண்டறியப்படவேண்டும். இவ்வாறு நேற்று முன்தினம் மாலை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் வன்னிமாவட்ட மு.கா.எம்.பி. ரிஸாத் பதூர்தீன் தெரிவித்தார்.

கடந்த மாதம் 13 ஆம் திகதி நானும் திருமலை எம்.பி.நஜீப் ஏ.மஜித். மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.அமிர் அலி உட்பட நான்கு எம்.பி.க்கள் தலைவரின் வீட்டிற்குசென்றோம். தலைவரின் வீடு இருட்டாக இருந்தது. துறைமுக அதிகாரசபை பாதுகாப்பு ஊழியர்கள் காவலுக்கு இருந்தனர். அங்கு ஒரு இளம்பெண் அழுது கொண்டிருந்தார். பாதுகாவலர்களிடம் கேட்டபோது தலைவரை சந்திக்க இரவு எட்டு மணி முதல் நிற்பதாகக் கூறினார்.

அந்த பெண்ணிடம் கேட்டபோது தலைவர் தம்மை ஏமாற்றிய கதையை கூறினார். அந்தக்கதையை வெளியே யாரிடமும் கூறவேண்டாம். நாம் நியாயம் பெற்றுத்தருகிறோம் எனக்கூறினோம். தலைவரிடம் இதனைக்கூறிய போது இது எனது தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினை. இதில் தலையிட வேண்டாம் எனக்கூறினார்.

அந்தப்பெண் ஒரு நாள் என்னையும் நஜீப் எம்.பி.யையும் ஹோட்டலுக்கு அழைத்தார். தற்கொலை செய்யப் போவதாகவும் கூறினார். அதற்காக அப்பெண்ணை சந்திக்கச் சென்றோம். அங்கு எமது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இது எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதியாகும்.

நாம் அந்தப் பெண்ணை ஜனாதிபதியிடம் அழைத்துச் செல்லவில்லை. அப்படி அப்பெண் கூறுவதை முற்றாக மறுக்கின்றோம்.

நாம் அந்த அறையில் இருந்துகொண்டு அமைச்சர் மங்கள சமரவீரவுடன் உரையாடவும் இல்லை. ரவூப் ஹக்கீம் மு.கா.தலைவர் பதவியை வகிக்க தகுதியற்றவர். மு.காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற பேரியல் அஷ்ரப், அதாவுல்லா ஆகியோர் உட்பட அனைவரும் கட்சிக்குள் இணைக்கப்படவேண்டும்.

மு.கா.தலைவர் தனித்தலைவராக இருக்கக்கூடாது. கூட்டுத்தலைமைத்துவம் அமைக்கப்படவேண்டும்.

குமாரிகுரே என்ற இப்பெண் தொடர்பான இரகசியங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டவர் ஹக்கீமே. அதன் மூலம் அனுதாபம் தேடிக்கொள்ள முனைந்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் மயப்படுத்தியுள்ளார்.

எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவும் தயாராக இருக்கின்றோம் என்றும் ரிஸாத் பதூர்தீன் குறிப்பிட்டார்.

திருமலை மாவட்ட எம்.பி.நஜீப் ஏ.மஜீத்தும் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்

வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-18-2004, 12:02 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:09 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 01:06 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:41 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:56 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 07:56 PM
[No subject] - by tamilini - 05-18-2004, 09:00 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:37 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:22 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:23 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:24 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:25 PM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 02:44 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 09:17 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 09:32 PM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 10:43 PM
[No subject] - by Mathan - 05-20-2004, 01:24 AM
[No subject] - by Mathan - 05-20-2004, 01:31 AM
[No subject] - by Eelavan - 05-20-2004, 05:47 AM
[No subject] - by Manithaasan - 05-21-2004, 06:55 PM
[No subject] - by Mathan - 05-22-2004, 01:38 AM
[No subject] - by kuruvikal - 05-22-2004, 02:16 AM
[No subject] - by Eelavan - 05-22-2004, 05:04 AM
[No subject] - by Mathan - 06-02-2004, 02:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)