05-20-2004, 12:22 AM
பேச்சுவார்த்தையில் அரசும், புலிகளும் அக்கறை தன்னாட்சி அதிகார சபை குறித்து பேச வேண்டும்
இந்தியா வெளியுவுக் கொள்கையினை மாற்றாது என்கிறார் அகாசி
அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் சமாதானப் பேச்சுவார்த்தையில் அக்கறை கொண்டுள்ளனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை கடைப்பிடிப்பதிலும், சமாதானப் பேச்சுவார்த்தையிலும் விடுதலைப் புலிகள் ஈடுபாடு காட்டிவருகின்றனர். இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான புலிகளது திட்டம் தயாராகவுள்ளமையினால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என்று ஜப்பானின் விஷேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார். சமாதானப் பேச்சுவார்த்தைக்கான தினமானது நாளையோ அல்லது நாளை மறுதினமோ அடுத்த வாரமோ தீர்மானிக்கப்படும் என்று நான் கருதவில்லை. கோடை காலத்திலேயே பேச்சுகள் ஆரம்பமாகும் சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்தியாவில் புதிய அரசாங்கம் உருவாகியுள்ள போதிலும் இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் வருமென நான் கருதவில்லை என்றும் யசூசி அகாஷி சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு கடந்த சனிக்கிழமை வந்த யசூசி அகாஷி நேற்று புதன் கிழமை நாடுதிரும்புவதற்கு முன்னர் கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றினை நடத்தினார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவற்றை தெரிவித்தார்.
ஒஸ்லோ மற்றும் டோக்கியோ பிரகடனங்களுக்கு அமையவே இலங்கைக்கான நிதி உதவிகள் வழங்கப்படும். வடகிழக்குக்கான இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முக்கியமான விடயமாகும்
. இது தொடர்பான விடுதலைப்புலிகளின் திட்டமும் தயாராகவுள்ளது. எனவே பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் இது குறித்தே இணக்கம் காண்பது பொருத்தமானதாகும் என்றும் செய்தியாளர் ஒருவரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது யசூசி அகாஷி தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் கூறியதாவது:
எனது விஜயத்தின் போது ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் சமாதான செயலகத்தை அமைத்து அதற்கு பணிப்பாளரையும் நியமித்துள்ளார். சமாதான முயற்சிக்கு இந்த அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கின்றது.
தமிழ்ச்செல்வனையும் சந்தித்து நான் பேச்சுக்களை நடத்தினேன். விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினைக் கடைப்பிடிப்பதிலும், சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதிலும் அக்கறை காட்டி வருகின்றனர்.
டோக்கியோவில் இணைத்தலைமை வகித்த உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடனும், சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு ஜுன் மாதம் 1ஆம் திகதி பிரேசிலில் நடைபெறவுள்ளது. உதவி வழங்கும் நாடுகள் தற்போதைய நிலையினை அவதானித்து வருகின்றன.
இவ்விடயம் குறித்து ஆராய்வதும் எனது விஜயத்தின் நோக்கமாகும்.
டோக்கியோ மற்றும் ஒஸ்லோ பிரகடனங்களின் அடிப்படையில் தான் இலங்கைக்கான நிதி உதவிகளை உதவி வழங்கும் நாடுகள் வழங்கும். இந்தியத் தூதுவருடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
காங்கிரஸ் கட்சியின் புதிய அரசாங்கம் வெளியுறவுக் கொள்கையினை மாற்ற மாட்டாது என்றே நம்புகின்றேன். இலங்கையின் சமாதான முயற்சிகளில் இந்தியா அக்கறை காட்டி வருகின்றது. இலங்கைக்கு இந்தியா உதவிகளையும் வழங்கியுள்ளது. எமக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்புறவு நன்றாகவுள்ளது. இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையினை இந்தியா மாற்றுமென நான் நினைக்கவில்லை.
பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இடம் பெற வேண்டுமென டோக்கியோ பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து திகதியை கூறமுடியாதுள்ளது. நான் நோர்வே தூதுவர் ஹென்ஸ் பிராஸ்கரையும் சந்தித்து பேசினேன்.
பேச்சுவர்த்தைக்கான திகதி இடம் குறித்து நாளையோ அல்லது இந்த வாரமோ தீர்மானிக்க முடியும் என நான் கருதவில்லை. கோடை காலத்திலேயே சமாதானப் பேச்சினை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என நான் நம்புகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.
வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>