05-19-2004, 11:02 PM
தேர்தல்கால வாக்குறுதிகளும் முஸ்லிம் காங்கிரஸின் நெருக்கடியும்
நடைபெற்று முடிந்துள்ள பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு ரவூப் ஹக்கீம் தகுதியற்றவர் என்ற எதிர்பிரசாரத்திற்கும் முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கை தீர்மானிக்கும் சக்தியாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் காணப்படுகின்றார்கள். அம்பாறை மாவட்டம் எவ்வாறு இலங்கை முஸ்லிம்களுக்கு இதயமாக விளங்குகின்றதோ அதேபோன்றுதான் முஸ்லிம் காங்கிரஸின் மரத்திற்கு ஆணிவேராக அம்பாறை திகழ்கின்றது. இம் மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் தேர்தலில் நின்று வெற்றிபெற்றிருப்பதுடன் மு.கா. இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. இங்கு ரவூப் ஹக்கீம் அடைந்த வெற்றி முஸ்லிம் காங்கிரஸுக்கு தலைமை தாங்குவதற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.
தலைமைத்துவ போட்டி, தலைமைத்துவத்திற்கு எதிரான பிரசாரங்கள், கருத்துக்கள், கட்சிக்கு முஸ்லிம் வாக்காளர்களுக்கிடையே இருக்கும் செல்வாக்கு என்பவற்றில் வெற்றியடைந்து நிம்மதிப் பெருமூச்சினை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. விட்டபோதிலும் தலையிடி தீர்ந்தபாடில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் 10 உறுப்பினர்களைக் கொண்டிருந்தபோதிலும் அவர்கள் அனைவரையும் ஒரு கட்டுக்கோப்பில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கவேண்டிய தேவையும் ரவூப் ஹக்கீமுக்கு இருக்கின்றன. தற்போது ஆளும் மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலேயேயுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியில் உள்ளவர்களை பட்டம், பதவிகளையும், கோடிகளையும் காட்டி தன்பக்கம் இழுப்பதற்கான வேலைகளை முகவர்களின் உதவியுடன் செய்துகொண்டு வருகின்றது. இந்த வலையில் தமது கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கிவிடுவார்களோ என்ற அச்சம் மு.கா.வின் தலைமைக்கு நிறையவே உண்டு.
அண்மையில் மு.கா.வின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் தரப்பிற்கு மாறவிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன. பின்னர் இந்நான்கு பேரும் கூட்டாக மு.கா.விற்கும் தலைமைத்துவத்திற்கும் விசுவாசமாக அறிக்கைவிட்டனர். இவ்வறிக்கை வந்திட்டபோதிலும் தலைவர் ரவூப்ஹக்கீம் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கழுகுப் பார்வையை தொடர்ந்தும் வைத்துள்ளார். இதனிடையே ஆளும் தரப்பிற்கு மாறவிருப்பதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் உண்மையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தபோதிலும் நெருப்பில்லாமல் புகைவருமா? என்று அரசியல் அவதானிகள் கேட்கின்றார்கள்.
""முஸ்லிம் மக்களின் விடுதலைக்காகவே முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இந்த இலட்சியத்தினை அடைந்துகொள்வதற்காகவே முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் தேர்தலில் நிற்கின்றோம்'' என்று தேர்தல் காலங்களில் கூறியவர்கள் உண்மையாகவே முஸ்லிம் சமூகத்தை விசுவாசிப்பவர்களாக இருந்தால் பட்டம், பதவிகளுக்காக ஆளும்தரப்பிற்கு மாறக்கூடாதென்று மு.கா.வின் ஆதரவாளர்கள் கருதுகின்றார்கள். அதுமட்டுமன்றி தேர்தல் காலங்களில் இவர்களின் தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதியின் பக்கம் முஸ்லிம் ம்க்கள் ஐக்கிய சுதந்திர முன்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிக்க துடித்துக்கொண்டிருப்பவர்கள் முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு விரோதமான சக்தியுமாகிய ஜே.வி.பி. யும் காணப்படுவதோடு முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எழுதிய ஐம்பது பக்கங்களைக்கொண்ட கடிதத்தினை மறைத்தவரும் அவரின் படுகொலைக்கு காரணமானவர்களும் காணப்படுகின்றார்கள். இவர்களோடு ஒருபோதும் இணைந்துகொள்ளமாட்டோம்'' என்று மேடைக்கு மேடை கூறிவந்தார்கள் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள். இவ்வாறு முழங்கிவிட்டு ஆளும் தரப்பிற்கு ஒரு சில எம்.பி.க்கள் மாறுவார்களாயின் அது அவர்களின் கபடத்தனத்தைக் காட்டுவதாக இருக்கும்.
அது மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸை எம்.பி.பதவிக்கு மாத்திரம் பாவித்துவிட்டு தூக்கிவீசுவதனைப் போன்றாகிவிடும். அதேநேரம் தேர்தல் காலத்தில் கூறியவார்த்தைகள் எதுவும் பெறுமதியற்றதாகவே இருக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்பிற்கு ஏதோ ஒரு அடிப்படையில் ஆதரவினை வழங்குவதற்குரிய பேரம்பேசும் சக்தியை இல்லாமல் செய்துவருவதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மீதும் அதனூடாக தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் இருக்கும் நம்பிக்கையானது இல்லாமல் போய்விடும். அத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் மேலும் சின்னாபின்னமாகி அழிந்துவிடும். ஆதலால், முஸ்லிம் காங்கிரஸின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் வாக்காளர் தொகையினை இன்னும் கூட்டிக்கொள்ளவும் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டம் பதவிகளுக்காக சோரம் போகக்கூடியவர்களல்லர் என்ற நல்லபெயரை எடுக்கவும் வேண்டிய அவசியமும் தேவையும் உள்ளன. இவைகளை அடைந்துகொள்ளவேண்டுமாயின் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரிபிழைகளை தங்களுக்குள் விவாதித்து கட்சியின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். இதனையே ரவூப்ஹக்கீம் விரும்புகின்றார். இதனிடையே கட்சியின் எம்.பி.மார் எந்த இடத்தில் காலைவாரிவிடுவார்களோ என்ற உள்ளச்சமும் அவரிடம் காணப்படுகின்றது. இந்த அச்சத்தை இல்லாமல் செய்ய வேண்டிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காணப்படுகின்றது. அதேவேளை தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கவேண்டிய அணுகுமுறைகளை கையாளுவதற்கு ரவூப்ஹக்கீம் முன்வரவேண்டும். கடந்தகால அனுபவங்களை பாடமாகக் கொண்டு செயற்படவேண்டிய அவசியமும் அவருக்கு இருக்கின்றது.
மு.கா.வின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மற்றுமொரு தலையிடிதான் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்ற விடயமாகும். முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ஒரு தேசியப்பட்டியல் உறுப்பினரையும், ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையினூடாக நான்கு தேசியப்பட்டியல் உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டது.
இதில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற தனித்துப்போட்டியிட்டதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கட்சியின் மூத்த உறுப்பினரும் செயலாளருமான எம்.ரீ.ஹஸன் அலிக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதியாகவுள்ள நான்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தற்காலிகமாக நான்குபேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தலைமைத்துவம் ஆணையிடும்போது இராஜினாமாச் செய்வதற்குள்ளார்கள்.
இந்நான்கு எம்.பி.பதவிகளையும் யார் யாருக்கு வழங்குவது, எவ்வாறு வழங்குவது என்ற குழப்பத்தில் தலையை பிய்த்துக்கொண்டிருக்கின்றார் மு.கா.வின் தலைவர் ரவூப் ஹக்கீம். தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனவர்கள் தங்களின் ஆதரவாளர்களை முன்னிலைப்படுத்தி தாங்கள் பின்னுக்கு நின்று கொண்டு எம்.பி.பதவியை கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
வட கிழக்கிற்கு வெளியே உள்ள கட்சி ஆதரவாளர்களும் கூட தங்களின் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு தேசியப்பட்டியல் எம்.பி.பதவி வழங்கவேண்டுமென்று கட்சி தலைமைத்துவத்தை நெருக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
மறுபுறத்தில் அம்பாறை மாவட்டத்தில் ரவூப்ஹக்கீம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதன் கட்டாயத்தில் காணப்படுகின்றார். அதாவது, இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மூன்று ஆசனங்களைப் பெறுமாயின் விருப்புவாக்கின் அடிப்படையில் நான்காவது இடத்தினை பெறுபவருக்கு தேசியப்பட்டியல் மூலம் எம்.பி. பதவி வழங்கப்படும். சிலவேளை கட்சி இரண்டு ஆசனங்களைப்பெறும் பட்சத்தில் பட்டியலில் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளவர் தேசியப்பட்டியல் மூலம் எம்.பி. பதவியை பெற்றுக்கொள்வார் என்று ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார். இதன்படி மூன்றாவது இடத்திலுள்ள நௌஸாட் என்பவருக்கு தேசியப்பட்டியலில் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டியுள்ளது.
இதேவேளை, கல்முனைத் தொகுதி மு.கா. ஆதரவாளர்கள் தங்களது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துநிற்கின்றது. ஆதலால் நான்காவது இடத்தில் பட்டியலிலுள்ள நிஜாமுத்தீனுக்கு தேசியப்பட்டியலில் வாய்ப்பு வழங்கவேண்டுமென்று கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்கள்.
மேற்படி வேண்டுகோள்களும், கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு கொண்டிருக்கின்ற அதேவேளை முஸ்லிம்காங்கிரஸின் ஆணிவேராக திகழ்கின்ற அம்பாறை மாவட்டத்தில் கட்சிக்கான செல்வாக்கை இன்னும் அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் காணப்படுகின்றது. இதற்காக தேசியப்பட்டியல் எம்.பி. பதவியினை பயன்படுத்தியõக வேண்டிய அவசியமும் தலைமைத்துவத்திற்கு உள்ளதென்று கட்சியின் வட்டாரங்கள் அபிப்பிராயப்படுவதில் நியாயம் இல்லாமலில்லை. ஏனெனில், முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு பெரும் சவாலாக விளங்கிவரும் அதாவுல்லா,பேரியல் அஷ்ரப், சேகு இஸ்ஸத்தீன் ஆகியோர் இம்மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதோடு, அமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் காங்கிரஸினதும் ரவூப் ஹக்கீமினதும் செல்வாக்கு மேலோங்குவதனை ஜீரணிக்கமாட்டார்கள். மு.கா.வுக்கும் தலைமைக்கும் எதிராகவே செயற்படுவார்கள். மட்டுமன்றி தமது அமைச்சுப் பதவிகள் மூலம் மக்களை கவரும் வேலைகளில் ஈடுபடவும் செய்வார்கள். இவைகளிலிருந்து முஸ்லிம் காங்கிரஸை பாதுகாக்க ரவூப் ஹக்கீம் முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளன.
அதுமட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸை ஒழிக்கவேண்டுமென்பதற் காக முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தேர்தல் காலத்தில் விலகிய அன்வர் இஸ்மாயிலுக்கு ஜனாதிபதி தேசியப்பட்டியலில் எம்.பி. பதவியை கொடுத்திருப்பதுடன் பிரதி அமைச்சர் பதவியையும் வழங்கியுள்ளார். ஆக அம்பாறையில் மு.கா. வுக்கு எதிராக மூன்று அமைச்சர்களும் ஒரு பிரதி அமைச் சரும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கும் நிலையில் மு.கா.வின் தலைமை எந்தவிதமான யுக்தியை கையாளப்போகின்றது என்பதே இன்றைய கேள்வியாக அரசியல் அவதானிகளிடையே காணப்படுகின்றது.
மு.கா.வின் தலைமைத்துவத்தின் தேர்தல்களமாகவும் மு.கா.வின் ஆணி வேராகவும் அம்பாறை மாவட்டம் உள்ளதால் இம்மாவட்டத்தினை தட்டிக்கழித்துவிடமுடியாது. முன்யோசனை அற்ற எந்தவொரு நடவடிக்கையும் மு.கா.வினைப் பாதிக்கும் என்பதனை எவரும் மறுத்துரைக்கமுடியாது.
தலைமைத்துவம் இவ்வாறு நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சூழ்நிலையில் தலைமைத்துவத்தினை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வேலைகளில் மு.கா.வின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ள வேட்பாளர்களும் (எம்.பி.மார்களும்) ஈடுபடக்கூடாது. தோற்றவர்கள் தங்களின் ஆதரவாளர்களை தூண்டிவிட்டு தலைமைத்துவத்தை நோக்கி எம்.பி. பதவியினை கேட்டுப் படை எடுப்பதானது தலைமைத்துவம் சரியான முடிவினை எடுப்பதற்கு தடையாக அமைந்துவிடும். ஆகவே, தோற்றவர்கள் கட்சிக்கு நேசக்கரத்தினை தொடர்ந்து நீட்டவேண்டும். இதனை விடுத்து எம்.பி.பதவியை எவ்வாறு அடைந்துகொள்ளலாம் என்பதில் கண்வைத்தவர்களாகவே மு.கா.வின் வேட்பாளர்கள் காணப்படுகின்றார்கள். கட்சியினதும், சமூகத்தினதும் நலன்பற்றி போதிய அக்கறையற்றவர்களாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெற்றிபெற்றவர்கள் மீனுக்கு வாலையும் , பாம்புக்கு தலையையும் காட்டுபவர்களாகவே இருக்கின்றார்கள். இதனால்தான் ஏனையகட்சி எம்.பி.மார்களைவிடவும் மு.கா.வின் எம்.பி. மார் சிலர் ஆளும்தரப்பிற்கு மாறிவிடுகின்றார்கள் என்ற செய்திகள் பரவத்தொடங்கவும் செய்கின்றது. பேச்சு ஒன்றாக இருக்க (இதt ச்ணஞீ கீடிஞ்டt) வேண்டும். அவ்வாறு இருக்கும் போது எதிர் அணியினர் பேசுவதற்கும் வேறு கதைகள் வெளிவருவதற்கும் எம்.பி.மார் மீது தலைமைத்துவத்திற்கு சந்தேகம் வருவதற்கும் இடமிருக்காது.
இவை இவ்விதம் இருக்க ரவூப் ஹக்கீம் மேடைகளில் கண்டபடி வாக்குறுதிகளை அளிப்பதனை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். தேர்தல் காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதி ஒன்று தேர்தல் முடிந்த பின்னர் நிறைவேற்ற முடியாததோடு சூழ்நிலையினை ஏற்படுத்தவும் செய்யும். மறைந்த தலைவர் அஷ்ரப் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்குவதனை மிகக்கூடுதலாக தவிர்த்துக்கொண்டே வந்துள்ளார். முஸ்லிம் சமூகத்தின் விடுதலை, மு.கா.வின் தேவை என்பவற்றை எடுத்துக்கூறியே வாக்குகளை கட்சிக்கு சேர்த்துள்ளார். ஆனால், ரவூப் ஹக்கீம் வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்காக அம்பாறையில் மூன்றாவது/ நான்காவது இடத்தில் நிற்பவர்களுக்கு எம்.பி. பதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பதானது இன்றைய சூழ்நிலையில் சிக்கல்களையே ஏற்படுத்தியுள்ளன.
கட்சியில் புதிதாக சேர்த்து கொள்பவர்களாக இருந்தாலும் பழையவர்களாக இருந்தாலும் கட்சியின் கொள்கைகளுடன் பற்றுள்ளவர்களையே தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தவேண்டும். அதைவிடுத்து எம்.பி.பதவியை நோக்காகக் கொண்டு அதனை அடைந்துக்கொள்வதற்கு மு.கா.வை. பயன்படுத்த நினைப்பவர்களை வேட்பாளர்களாக நிறுத்தக்கூடாது. மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர் என்பதற்காக கட்சியில் சேர்க்கும்போது கொள்கைப்பிடிப்பில்லாத அவர் கட்சியை விட்டு என்றோ ஒருநாள் பிரிந்துசெல்வார். அவ்வாறு செல்லும்போது அவரது ஆதரவாளர்களும் கட்சியைவிட்டு பிரிந்துசெல்வார்கள். ஏனெனில், அந்நபரின் ஆதரவாளர்களும் கொள்கையைவிட தமது ஆஸ்த்தானவரையே முதன்மைப்படுத்தி நிற்பர்.
எனவே, கொள்கைப் பிடிப்புள்ளவர்களை உள்வாங்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் தலைமைத்துவம் முன்வரவேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் மு.கா.வின். எம்.பி.மார் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவும் கொள்கை பிடிப்புள்ளவர்களாகவும் திகழவேண்டும். தேர்தலில் தோற்ற வேட்பாளர்கள் தலைமைத்துவத்தினை நெருக்கடிக்குள்ளாக்கும் வேலைகளில் ஈடுபடக்கூடாது. தலைமைத்துவம் எடுத்ததற்கெல்லாம் வாக்குறுதியளிக்கும் கடந்தகால போக்கிலிருந்து தம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உயர்பீட உறுப்பினர்களும் தலைமைத்துவம் எதிர் கொண்டுவரும் தலையிடியிலிருந்து விடுபட ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் வழங் கவேண்டும். தலைமைத்துவம் நல்ல ஆலோசனைகளை ஏற்று நடப்பதற்கும் முன்வரவேண்டும்.
எம்.சஹாப்தீன் / வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>