05-19-2004, 10:59 PM
ஜூன் 8 ஆம் திகதி வானில் அதிசயம் சூரியனைக் கடக்கிறது வெள்ளிக்கோள்
சுமார் 123 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு வான் நிகழ்வு மறுபடியும். இந்த ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி நிகழப் போகிறது. வானில் இப்போது, சூரியன் அடிவானத்தில் மறைந்த பிறகு வெள்ளிக்கோள் சில மாதங்களாகவே மிகப்பிரகாசமாகத் தெரிந்து வருகிறது. ஜூன் 8ஆம் திகதி அதாவது சூரியனின் மேற்பரப்பை வெள்ளிக்கோள் கடக்கும். அன்று தொலைநோக்கிகள் மூலம் வெள்ளியின் போக்கை வெள்ளைத் திரையில் பிரதிபலித்துக் காணலாம்.
வெள்ளிக்கோளில் மேற்கில் சூரியன் உதிக்கும். வியப்பாகவுள்ளதா? வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுழல்வதால், சூரியன் மேற்கில் உதிப்பது போன்று புலப்படும். வெள்ளிக் கோள் விட்டமும் நமது பூமியின் விட்டமும் கிட்டத்தட்ட ஓரளவே ஆகும். நமக்கு ஒரு நாள் என்பது 24 மணி நேரம். ஆனால் வெள்ளிக்கோளுக்கு ஒரு நாள் என்பது 243 நாட்கள். தன்னைத்தானே வெள்ளிக்கோள் சுற்றிவர 243 நாட்கள் பிடிக்கும்.
வெள்ளிக்கோளின் காற்று மண்டலத்தில் கரியமில வாயு 96.5 வீதம் உள்ளது. அதனால்தான் இக்கோளில் தரைவெப்பம் 480 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உள்ளது. சூரியனிடமிருந்து வெள்ளிக்குக் கிடைக்கும் வெப்பம் இவ்வாயுவினால் வெளியேற முடியாமல் போய்விடுகிறது.
ஆகவேதான், சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதனைவிட அதைவிடச் சற்றுத் தொலைவில் உள்ள வெள்ளிக்கோள் அக்கினிக்குண்டமாக உள்ளது. வெள்ளியின் காற்று மண்டலத்தில் மிக அதிக அளவுக்கு கரியமில வாயு மேகக் கூட்டங்களால் சூழப்பட்டுள்ளதால், இதனை தொலைநோக்கி மூலம் வானவியல் அறிஞர்கள் ஆராய்ந்து பார்க்க முடியவில்லை.
ஆயினும், கலிலியோ கலிலி என்பவர் தொலை நோக்கியை வானத்தை நோக்கித் திருப்பினார். அவர்தான் முதன் முதலில் வெள்ளியில் பிறையைக் கண்டவர். என்ன வியப்பு.
வெள்ளிக்கோளும் பிறையாகத் தென்படுவது ஏன்? வெள்ளி தனது மேல்வட்ட சுற்றுப்பாதையில் சுழன்று வருகையில் எப்போதும் சூரியனின் நிலை பூமிக்கு எதிர்த்திசையில் அமைவதால், வெள்ளியின் பிறைமுகம் மட்டுமே புலப்படும்; முழுமுகம் புலப்படாது போகும். ஆனால் கலிலியோ வெள்ளியின் அனைத்துப் பிறை வடிவங்களையும், முழு முகங்களையும் புலப்படுத்தினார்.
பிறகு கோப்பர் நிகஸ் கருத்துப்படி, சூரியன் மையத்தில் இருப்பதால், பூமியிலிருந்து பார்வைக்கு வெள்ளி சில சமயம் இடையிலும் சில சமயம் சூரியனுக்கு அப்பாலும் புலப்படும். சூரியனுக்கு அப்பால் உள்ள நிலைகளில் பூமியை நோக்கி வெள்ளியின் முழு முகமும் சூரிய ஒளியில் ஒளிர்வதால் முழு உருவமும் புலப்படும்.
சூரியனிலிருந்து முதற்கோளாகிய புதன், சூரியனது மேற்பரப்பை 2003 மே 7 ஆம் திகதியன்று கடந்தது. இது மிகத் தெளிவாகத் தெரிந்தது. அதேபோல், சூரியனிலிருந்து இரண்டாவது கோளாகிய வெள்ளிக்கோள், சூரியனது மேற்பரப்பை 2004 ஜூன் மாதம் 8ஆம் திகதி கடந்து செல்லும். பூமிக்கு அருகே வரும். இதனால் வெள்ளிக் கோளின் நிழல் 5 மடங்குகள் அகலமாகவும், புதனின் நிழலை விட 23 மடங்குகள் பெரிதாகவும் இருக்கும். இதுவரையில் இத்தகைய வெள்ளியின் மறைப்பு 1631, 1639, 1761, 1769, 1874 மற்றும் 1882 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தது.
இவ்வாண்டு ஜூன் 8இற்குப் பிறகு வெள்ளிமறைப்பு 2012 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6ஆம் திகதி நிகழலாம். அதற்குப் பின் 2117 ஆம் ஆண்டில் தான் வெள்ளிமறைப்பு நிகழுமாம். அதாவது ஒவ்வொரு நூற்றாண்டிலும் குறைந்தது இரண்டு வெள்ளி மறைப்புகள் நிகழும் என வானவியலாளர்கள் கூறியுள்ளார்கள்.
மார்ச் மாத கடைசியில், புதன் கோளை மேற்கு அடிவானத்தில் சூரியன் மறைந்தபிறகு பார்க்க முடிந்தது. பிறகு இதற்குமேல் வெள்ளிக்கோள் ஒளிர்ந்து தெரிகிறது. இந்த வெள்ளிக்கோள் மிக ஒளிர்வுடன் சென்ற சில மாதங்களாகவே தெரிந்து கொண்டே வருகிறது.
வெள்ளிக்கோள் மேற்கு வானத்திலிருந்து மேலே சிறிது உயரமாகவே தெரியவருகிறது. சூரியனிடமிருந்து விலகி தன்னுடைய சுயசுதந்திரத்துடன் ஒளிர்ந்து வருகிறது. பிறகு செவ்வாய், சனி மற்றும் வியாழன் கோள்கள் ஒரே பாதையில் தெரிந்து வருகின்றன. இதைக் கோள்களின் படைவரிசை அணிவகுத்து செல்வது என்று கூறுவர். இது ஒரு வாரமாக 2004 மார்ச் கடைசியில் நடந்தேறியது. இந்நிகழ்ச்சி 32 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கிறது.
இது தொடருமா என்பது கேள்விக்குறியே.
மாதவன்
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>