05-19-2004, 04:37 PM
தற்போதைய அரசினால் சமாதான முயற்சிகளை முறையாக முன்னெடுக்க முடியாது: மகேஸ்வரன் எம்.பி.
தற்போதைய அரசாங்கத்தினால் சமாதான முயற்சிகளை முறையாக முன்னெடுக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகஸே;வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசு மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தமிழர்க்கெதிரான கட்சி. இவர்களால் சமாதான முயற்சிகளை சரியான வழியில் முன்னெடுக்க முடியாது.
தற்போதைய அரசு ஆகக் கூடியது இன்னும் சில மாதங்களே நீடிக்குமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தியாராசா மகேஸ்வரன் தனதுரையில் தெரிவித்தார்.
கந்தப்பொல விவகாரத்தை கண்டிக்கும் வகையிலான சுலோகத்தை ஏந்தியவாறு தியாகராசா மகேஸ்வரன் சபை அமர்வுகளில் கலந்து கொண்டார்.
ம.ம.மு. பாராளுமன்ற உறுப்பினர் பெ.சந்திரசேகரன்
கந்தப்பொல தொடர்பான விவாதத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பெ.சந்திரசேகரன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அதன் போது குறுக்கிட்ட ஆளும் கட்சியினர் ஒழுங்குப் பிரச்சனையை ஒன்றை கிளப்பினர்.
கந்தப்பொல சம்பவம் தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தல் என்று சந்திரசேகரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கூட தமிழர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியவில்லை. தமிழர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகின்றதென்றும் சந்திரசேகரன் தனதுரையில் தெரிவித்தார்.
இ.த.க. பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்
தமிழர்களைக் கொலை செய்து நட்ட ஈடு வழங்குவதனால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதென்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கந்தப்பொல தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அவர், இத்தகைய கொலைச் சம்பவங்கள் தொடர் கதைகளாகவே உள்ளன என்றும் தெரிவித்தார்.
இத்தகைய வன்முறைகள் சமாதான நடவடிக்கைகளை பாதிக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன்
கந்தப்பொல தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், கந்தப்பொல விவகாரம் ஒரு இனப்பிரச்சனையல்ல. இதனை பெரிதுபடுத்தி சிலர் அரசியல் லாபம் ஈட்ட முயல்வதாக கூறினார்.
புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>