Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடும்பம் ?
#5
அம்மாவுக்காக நாடகம் பார்க்கும் பிள்ளைகள்

அந்தக் காலத்தில் எங்கள் சிறுபராயத்தில் நாங்கள் திரைப்படம் பார்ப்பதென்றால் பெற்றோரைக் கெஞ்சிக் கூýத்தாடிýனால்தான் சாத்தியம். அதுவும் வீட்டிýல் உள்ள வேலைகளையெல்லாம் ஒழுங்காகச் செய்து ஒப்பேற்றிப் படிýப்பிலும் அக்கறை காட்டிýனால்தான் ஒருமாதத்துக்கு ஒரு படத்துக்கு அனுமதி. சில கண்டிýப்பான பெற்றோர் தவணைப் பரீட்சையில் பிள்ளைகள் நன்றாகச் சித்தியடைந்தால்தான் எப்போதாவது ஒரு படம் பார்க்க மனமுவந்து அனுமதிப்பார்கள்.

கிராமப் புறங்களில் அந்தக் காலத்தில் புதிதாக மணமுடிýத்த தம்பதிகளுக்கு தேனிலவு என்றால், அருகாமையில் உள்ள நகர்த் தியேட்டருக்கு வாடகைக் காரில் சென்று ஒரு படம் பார்ப்பதுதான். அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள சிறுபிள்ளைகளும் மணமக்களுடன் காரில் சென்று படம் பார்த்து மகிழ்வர். அவ்வாறு சிறுவயதில் எங்கள் பக்கத்துவீட்டு அக்கா திருமணம் முடிýத்த பிறகு அவர்களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை" பார்த்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த நாட்களை நினைக்கும் போது இப்போது மனதுக்குப் பெரும் சஞ்சலமாகவும் இருக்கும்.

ஆனால், இப்போது பிள்ளைகளுக்கு அந்தமாதிரியான கட்டுப்பாட்டு வளர்ப்புடனான அனுபவங்கள் எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் காலத்தில் நாம் வாழ்ந்தது போன்று பின்னடைவான சூýழலில் இந்தக் காலத்துப் பிள்ளைகளும் வளர்க்கப்பட வேண்டும் என்று நான் சொல்வதாக இதை அர்த்தப்படுத்தக் கூýடாது. கண்டிýப்பு என்பது கடுகளவுக்கும் இல்லாத ஒரு வளர்ப்பை இன்று எமது சமூýகத்தில் கண்முன்னால் காண்கின்றோம். இதன் விளைவுகளையும் நாம் நேரடிýயாக காலம் தாழ்த்தாமலே அனுபவிக்கவும் செய்கின்றோம்.

அன்று வீட்டுக்கு வெளியே தொலைவில் உள்ள தியேட்டருக்குள்தான் திரை இருந்தது. இன்று தொலைக்காட்சி என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் திரை இருக்கிறது. அதனால் அனுகூýலங்கள் பல இருப்பதாக வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். அனுகூýலங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அனுகூýலங்களைவிட பிரதிகூýலங்கள்தான் அதிகம் என்ற எனது வாதத்தை மறுதலித்துக் கடுமையாக எவரும் பேச இயலாது என்பது எனது திடமான நிலைப்பாடு. இதை நாம் நேரில் வாழ்வில் நிதர்சனமாகக் காண்கின்றோம். ஒரு சிறு உதாரணம் -நேற்றுக் காலை நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். வீட்டு கேற் ப10ட்டப்பட்டிýருந்தது. உள்ளே நண்பரின் இரு பெண் பிள்ளைகள் - ஒன்றுக்கு 6 வயது, மற்றையதுக்கு 10 வயது - தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிýருந்தார்கள்.

இருவரையும் வெளியே அழைத்து அப்பா, அம்மா இல்லையா என்று கேட்டேன்.

'என்ன மாமா எங்களுக்கு ஒன்றும் வாங்கி வரவில்லையா? வெறுங்கையுடன் வந்திருக்கிறீர்களே, நீங்கள் எப்பவும் இப்படிýத்தானே" என்று எனக்குத் தலையில் குட்டுப் போடாத குறையாக முதலில் அந்த சிறுசுகளின் பேச்சு, அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை- வெளியே போயிருக்கிறார்கள் என்று என்கேள்விக்கான பதில் பின்னர்தான் வந்தது.

தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிýருக்கிறீர்களே பாடம் படிýப்பதில்லையா என்று நான் கேட்டேன்.

'இப்போது மணி 10.55 ஆகிறது. இன்னும் 5 நிமிடங்களில் 'மெட்டிý ஒலி" நாடகம் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் தொலைக்காட்சி போட்டிýருக்கிறோம்.

'இந்தத் தொலைக்காட்சி நாடகம் எல்லாம் பார்க்கிற வயசா உங்களுக்கு" அம்மா எல்லா தொலைக்காட்சி நாடகங்களும் தவறாமல் பார்ப்பார். நாங்களும் அம்மாவுடன் சேர்ந்து இருந்துப் பார்ப்போம்.... மெட்டிýஒலி, காவியாஞ்சலி, சித்தி... என்று அடுக்கிக் கொண்டு போனாள் மூýத்த பிள்ளை.

'அம்மா இன்று அப்பாவுடன் வெளியே ஒரு அலுவலாகப் போயிருப்பதால், மெட்டிýஒலியில் இன்றைய காட்சிகளைப் பார்த்து பின்னர், தான் வந்த பிறகு முழுக் கதையையும் தனக்கு ஒழுங்காகக் கூýறவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனார். ஒழுங்காக பார்த்து கதையை ஒன்றுவிடாமல் சொல்லாவிட்டால் தலையில் குட்டுவிழும் மாமா......அதனால்தான் தொலைக்காட்சி முன்னால் குந்தியிருக்கிறோம்" என்றும் கூýறினாள் அவள்.

கணவன் மனைவிக்கிடையே தாம்பத்தியத்தில் வருகிற விரிசல்கள், மாமியார் மருமகளிடையே ஏற்படுகிற பிரச்சினைகள், கணவன் வீட்டிýலிருக்க முன்னர் காதலித்தவனுடன் கடற்கரையில் கூýட இருந்து கொண்டு தனது வாழ்வின் அவலங்களை விபரிக்கும் மனைவி, அலுவலகத்தில் வேலை செய்பவருடன் ஹோட்டலுக்குச் சென்று சல்லாபம் அடிýக்கும் ஊதாரிப் பெண்.... இந்தமாதிரியான பாத்திரங்கள் வருகிற தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்து, பின்னர் தான் வந்ததும் ஒன்றுவிடாமல் கதையையும் கூýறவேண்டும் என்று இந்தச் சின்னஞ் சிறுசுகளுக்கு கட்டளை பிறப்பித்து விட்டு வெளியே அலுவலுக்குப் புறப்படுகின்ற அம்மாமார்களைப் பற்றி.... மனம் நொந்து கொண்டு.... அந்தப் பிள்ளைகளுடன் பின்னர் எதுவும் பேசாமல் நான் வந்தவழியைப் பார்த்து நடையைக்கட்டிýனேன்.........

இப்படிý எத்தனை அம்மாமாரோ, யாரறிவார் பராபரனே......? பிள்ளைகள் உருப்பட வழியென்ன? தாய்க்குலமே கண் திறப்பாய்.....

தினக்குரல்

கட்டுரையாளரின் கருத்துக்கள் - உங்கள் விமர்சனங்களுக்காக - BBC
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
குடும்பம் ? - by Mathan - 05-18-2004, 07:47 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 08:28 PM
[No subject] - by sOliyAn - 05-19-2004, 12:51 AM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 02:37 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 03:10 PM
[No subject] - by adipadda_tamilan - 05-20-2004, 06:32 AM
[No subject] - by Mathan - 05-20-2004, 12:13 PM
[No subject] - by Mathan - 05-20-2004, 12:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)