05-19-2004, 02:56 PM
கொழும்பு பாலத்துறையில் பாலத்தின்கீழ் 7-1/2 கிலோ கிளைமோர் குண்டு மீட்பு
கொழும்பு பாலத்துறையிலுள்ள பாலம் ஒன்றின் கீழ் மறைத்துவைக்கப்பட்டிருந்த 7-1ஃ2 கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டொன்றும் 6 கைக்குண்டுகளும் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்தே 7-1ஃ2 கிலோ எடையுள்ள கிளைமோர் மற்றும் 6 கைக்குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
பாலத்துறை }மாவோ பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள பாலமொன்றின் கீழேயுள்ள புதரொன்றின் மறைவிலிருந்தே இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த கிளைமோர் குண்டு அதி சக்தி வாய்ந்த சீ.போரக வெடிபொருள் 3-1ஃ2 கிலோவினைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருந்துள்ளதுடன், அது இரண்டு தட்டுகள் வடிவத்தில் அமைக்கப்பட்டு ஒரு இடத்தில் பொலிஸ் பக்கம் என்று தமிழில் எழுதப்பட்டிருந்ததாகவும் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயசிங்க தெரிவித்தார்.
குறிப்பிட்ட இந்த பாலம் ஊடாக பயணம் செய்யும் முக்கியஸ்தர் ஒருவரை அல்லது சிறிது தொலைவில் உள்ள களனி திஸ்ஸ மின் நிலையத்தை தாக்கி அழிக்கும் நோக்கில் இந்த குண்டுகள் நாசகார சக்திகளினால் இங்கு எடுத்து வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்தக் குண்டு பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவ, மற்றும் களனிதிஸ்ஸ மின் நிலையங்களுக்கு எரிபொருள் எடுத்துச் செல்லும் பாரிய எண்ணெய்க் குழாய்கள் இரண்டு இருப்பதாகவும் அவற்றை அழிப்பதன் மூலம் மோசமான ஆபத்துகளை உருவாக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவமானது கொழும்பில் நாசகார வேலைத்திட்ட மொன்றை மேற்கொள்ள சிலர் தயாராகி வருவதைப் பாதுகாப்புப் பிரிவுகளின் அவதானத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது என்று இப்பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சர் அன்ரன் சிறிகுமார தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கொழும்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸாரும், கிராண்ட்பாஸ் பொலிஸாரும் வௌ;வேறு விதமான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களை தேடிக்கண்டு பிடிக்கும்படியும் இவ்வாறான பகுதிகளில் அடிக்கடி ரோந்து சேவைகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் இந்திரா டி சில்வா பொலிஸாரைப் பணித்துள்ளார்.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>