05-19-2004, 02:41 PM
கடத்தப்பட்டதாக முறையிடப்பட்டிருந்த ஹெல உறுமய பிக்கு எம்.பி. ராஜிநாமா
கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த ஜாதிக ஹெல உறுமயவின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான கதளுவே ரத்னசார தேரர் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து தனது இராஜிநாமாக் கடிதத்தை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளித்ததாக ஜாதிக ஹெல உறுமய வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்செய்தியை ஊர்ஜிதப்படுத்திய ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அதுருலியே ரத்ன தேரர் இந்த ராஜிநாமாவை உயர்சங்க பீடம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குப் பின்னர் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும், அதன் தேசிய அமைப்பாளருமான கொலன்னாவே சுமங்கல தேரருடன் பாராளுமன்றத்திற்கு வந்த கதளுவே ரத்னசார தேரர், சபாநாயகர் டபிள்ய10.ஜே.எம்.லொக்குபண்டாரவைச் சந்தித்து தொடர்ந்தும் தான் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட விரும்பவில்லையென்றும் தர்ம காரியங்களில் ஈடுபட வேண்டியிருப்பதால் அரசியலுக்கு நேரத்தைச் செலவிட முடியாதுள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.
தனது சுயவிருப்பின் பேரிலேயே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்வதாகவும் தான் எவராலும் கடத்தப்படவில்லை என்றும் சபாநாயகருக்குத் தெரிவித்ததாக ஹெல உறுமய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன் பின்னர் கதளுவே ரத்னசார தேரர் தனது இராஜிநாமாக் கடிதத்தைப் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமவின் தற்போது ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்வதற்காக விரைவில் உயர் சங்கபீடம் கூடி முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>