Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஹக்கீமினால் ஏமாற்றப்பட்ட பெண்
#13
ஹக்கீம் விவகாரத்தை உலமா சபை மூலமே விசாரிக்க வேண்டும்
முஸ்லிம் காங்கிரஸ் கிளர்ச்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

}லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவ10ப் ஹக்கீமுக்கு பெண்ணொருவருடன் தகாத நட்பு இருந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலான விசாரணையை பாரபட்சமற்ற உலமாக்களைக் கொண்ட குழுவொன்றின் மூலம் நடத்த வேண்டுமென்று விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரிர்hத் பதியுதீனும், நஜீப் ஏ.மஜீதும் வலியுறுத்திக் கேட்டுள்ளனர்.

களங்கப்பட்ட ஒருவர் தலைமைத்துவத்திலிருப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு உகந்ததல்லவென்றும், தலைமைத்துவம் தான்தோன்றித்தனமாகச் செயற்பட இடமளிக்க முடியாது எனவும் அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடத்திய இந்தச் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரிசாத் பதிய10தீன், நஜீப் ஏ.மஜீத் ஆகியோருடன் முஸ்லிம் காங்கிரஸ் மஜ்லிஸ{ஸ் ர்{ரா தலைவர் மஸீஹ{தீன் இனாமுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ரிசாத் பதிய10தீன் கூறியதாவது:

எமது கட்சித் தலைவருக்கு பெண்ணொருவருடன் தொடர்பு இருந்த விவகாரம் எமக்குத் தெரியவந்தபோது அவற்றைப் பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாகவே தீர்க்க நானும் சகமூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் முயற்சிகளை மேற்கொண்டோம். இதில் சம்பந்தப்பட்ட குமாரி என்ற பெண் ஹக்கீமுடனான தமது தொடர்பு விவகாரத்தைப் பகிரங்கப்படுத்தப் போவதாகத் தெரிவித்த காரணத்தினாலேயே நாம் அதனை மறைத்து தலைமைத்துவத்தினதும், கட்சியினதும் மானத்தையும், கௌரவத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கினோம்.

ஆனால், கட்சியின் தலைமைத்துவம் எம்மைப் பொருட்படுத்தாமலும் எமக்கெதிராகவும் செயற்பட்டார். இந்த விவகாரத்தை அவரேதான் பின்னணியில் நின்று முதலில் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

எம்மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. குற்றமிழைத்தவரைப் பாதுகாக்க முயற்சித்தவர்கள் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தலைமைத்துவத்தைவிட கட்சிதான் எமக்கு முக்கியம். கட்சியை விட்டும் நாம் ஒருபோதும் வெளியேறப்போவதில்லை. கட்சியைப் பாதுகாப்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நாம் தயாராகவே இருக்கின்றோம்.

இப்போது குமாரி என்ற பெண் கூட ரவ10ப் ஹக்கீம் குழுவினரின் பாதுகாப்பிலேயே இருக்கின்றார். திங்களிரவு தனியார் தொலைக்காட்சியில் மேடையேற்றப்பட்ட நாடகம் போன்று இன்னும் பல நாடகங்கள் மேடையேற்றப்படலாம்.

நாம் எமக்கு நீதியான விசாரணையொன்றைக் கோரியுள்ளோம். தலைமைத்துவம் நியமிக்கும் விசாரணைக் குழுவல்ல பாரபட்சமற்ற உலமாக்களைக் கொண்ட குழு இந்த விவகாரத்தை முழு அளவில் விசாரித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

நாம் தான் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அரசியலுக்கு முழுக்குப் போடுவேன். அத்துடன், எந்தவிதமான தண்டனையையும் ஏற்கவும் தயாராக இருக்கின்றேன்.

இங்கு கருத்துத் தெரிவித்த மஜ்லிஸ{ஸ் ர்{ரா தலைவர் இனாமுல்லா கூறியதாவது:

இப்பிரச்சினைக்குத் தீர்வொன்று காணப்படும் வரை ரவ10ப் ஹக்கீம் மு.கா.வின் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட குழு விசாரணையல்ல உலமாக்களைக் கொண்ட குழுவின் விசாரணையே தேவை.

முஸ்லிம் காங்கிரஸ{க்கு கூட்டுத் தலைமைத்துவம் அமைக்கப்பட வேண்டும். மு.கா.வில் சர்வாதிகாரத் தலைமைத்துவத்துக்கு, இடமளிக்கக் கூடாது. தற்போதைய நிலை மேலும் தொடர்ந்தால் முஸ்லிம் காங்கிரஸ் அழிந்து போகலாம் அதற்கு எந்தவிதத்திலும் இடமளிக்க முடியாது.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-18-2004, 12:02 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:09 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 01:06 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:41 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:56 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 07:56 PM
[No subject] - by tamilini - 05-18-2004, 09:00 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:37 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:22 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:23 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:24 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:25 PM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 02:44 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 09:17 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 09:32 PM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 10:43 PM
[No subject] - by Mathan - 05-20-2004, 01:24 AM
[No subject] - by Mathan - 05-20-2004, 01:31 AM
[No subject] - by Eelavan - 05-20-2004, 05:47 AM
[No subject] - by Manithaasan - 05-21-2004, 06:55 PM
[No subject] - by Mathan - 05-22-2004, 01:38 AM
[No subject] - by kuruvikal - 05-22-2004, 02:16 AM
[No subject] - by Eelavan - 05-22-2004, 05:04 AM
[No subject] - by Mathan - 06-02-2004, 02:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)