Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஹக்கீமினால் ஏமாற்றப்பட்ட பெண்
#12
பணத்துக்காக 'அரசியல் சோரம்" போனவர்கள் தனது குடும்ப வாழ்வை சீர்குலைப்பதாக சீறுகிறார் ஹக்கீம்

அபாண்டமாக பழி சுமத்தி தனது குடும்ப வாழ்வை சீர்குலைக்கும் நாசவேலையில் }லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டிருப்பதாக கடுமையான குற்றச்சாட்டைத் தெரிவிக்கும் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான ரவ10ப் ஹக்கீம், பணம், பதவிக்காக 'அரசியல் சோரம் போகும்" செயற்பாட்டில் தனது கட்சி சகாக்கள் இறங்கியிருப்பதாகச் சாடினார்.

முஸ்லிம் சமூகம் இந்தச் சதிகார நடவடிக்கைகள் குறித்து சஞ்சலப்படாமல் தெளிவுடன் இருக்குமாறு விநயமாக நேற்று செவ்வாய்க்கிழமை அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பெண் ஒருவரை ஹக்கீமுடன் சம்பந்தப்படுத்தி அரச ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் பின்னர், அந்தப்பெண் தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி என்பன தொடர்பான உண்மை நிலைவரம் தொடர்பாக ஹக்கீமுடன் தொடர்பு கொண்ட போது, அவர் தெரிவித்தவை இங்கு தரப்படுகின்றன.

}லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் சோரம் போகின்ற அரசியலைச் செய்ய ஆரம்பித்திருப்பது முஸ்லிம் சமூகம் ஜனநாயக அரசியலிலே வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாழடித்து விடும் பயங்கரமான நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இவ்விடயத்தில் நாம் மிக ஆழமாகச் சிந்தித்து கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

முஸ்லிம் சமூகம் இந்தச் சந்தர்ப்பத்திலே இப்படியான சதிகார நடவடிக்கைகள் குறித்து சஞ்சலப்படாமல், இது போன்ற துரோகத்தனங்களில் ஈடுபடுகின்றவர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக ஒன்று பட்டுச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன்.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டத்திலே இதைப் போன்ற சவால்கள் கடந்த காலங்களிலும் தலைமைத்துவம் சந்தித்திருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்கும், பதவிகளுக்கும் சோரம் போவது, கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு தங்களுடைய சொந்த சுய இலாபங்களை அடைந்து கொள்கின்ற போக்கு விசனிக்கத்தக்கது.

ஆனால், அவர்களது இந்த நடவடிக்கைகள் எமது கட்சியின் வளர்ச்சிப் பாதையை எந்த விதத்திலும் பாதிக்கமாட்டாது.

நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக இருக்க வேண்டி யவர்கள் இவ்வாறு நம்பிக்கைத் துரோகமான செயல்களில் ஈடுபடுகின்ற பொழுது, எமது சமூகம் ஜனநாயகத்தில் கொண்டி ருக்கின்ற நம்பிக்கை இனியும் பலிக்குமா என்ற கேள்வியை பலரும் எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆனால், எந்தக் கட்சியினதும் பயமுறுத்தல்களுக்கும், அரச அடாவடித்தனங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும், கீழ்த்தரமான மானபங்கப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் எந்தவிதமான பீதியும், பயமுமில்லாமல் மக்கள் ஆதரவெனும் ஒரே பலத்திலிருந்து கொண்டு உரிமைப் போராட்டத்திலே நிலைத்து நின்று போராடும் என்பதை இங்கு வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன்.

கட்சிக் கட்டுக்கோப்பை மீறுகின்ற அடிப்படையில் செயற்படும் எவருக்கெதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சமுதாயத்திலிருந்தும் தூக்கி எறியப்படுவார்கள். எமது கட்சியின் அரசியல் உயர்பீடம் இது குறித்து அத்தனை ஆதாரங்களையும் பரிசீலித்து குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எவ்வகையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐவர் கொண்ட குழு சிபாரிசு செய்த பின்னர், அவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இது விடயத்தில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை அவமானப்படுத்தி, மானபங்கப்படுத்தி நிலை குலைய வைத்து கட்சியை கபளீகரம் செய்து கொள்வதற்கு அரசும், அதன் அடிவருடிகளாகச் செயற்படும் ஒரு சில எட்டப்பர்களும் எத்தகைய சூழ்ச்சிகளை மேற்கொண்டாலும் மக்கள் மத்தியிலேயே உண்மைக்காகவும், நியாயத்துக்காகவும் இந்தக் கட்சியினதும் சமூகத்தினதும் உரிமைகளுக்காகவும் நான் சளைக்காமல் போராடுவேன் எனும் உத்தரவாதத்தை எனது சமூகத்துக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சவால்கள் எந்தக் கோணத்திலிருந்து வந்தாலும் அவற்றுக்கு முகம் கொடுக்கும் வலிமை என்னிடம் இருக்கின்றது. போராளிகள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் பலத்தைக் கொண்டு சவால்களை நிச்சயம் வெற்றி கொள்வேன்.

இப்படியான துரோகத்தனம் செய்பவர்கள் குறித்தும் சதிகாரர்கள் குறித்தும் நாடு முழுவதும் வாழும் மக்கள் அவர்களுக்கு எதிராக விழித்துக் கொண்டு விட்டார்கள் என்பதைச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

என்னுடைய அரசியல் எதிரிகளிடத்தில் நான் சொல்வது தங்களுடைய அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வங்குரோத்து நடவடிக்கைகளில் இறங்காமல் கொள்கை அடிப்படையில் வாதப்பிரதிவாதங்களை கட்சியுடனும், தலைமையோடும் முட்டி மோதுவதாக இருந்தால் அதற்கு முகம் கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன். ஆனால், அபாண்டமாக அநியாயமாக என்னுடைய கௌரவத்தையும், எனது குடும்பத்தினரின் மனைவி, மக்களின் நிம்மதியான வாழ்விலே தலையிட்டு நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என விநயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-18-2004, 12:02 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:09 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 01:06 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:41 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:56 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 07:56 PM
[No subject] - by tamilini - 05-18-2004, 09:00 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:37 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:22 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:23 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:24 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:25 PM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 02:44 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 09:17 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 09:32 PM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 10:43 PM
[No subject] - by Mathan - 05-20-2004, 01:24 AM
[No subject] - by Mathan - 05-20-2004, 01:31 AM
[No subject] - by Eelavan - 05-20-2004, 05:47 AM
[No subject] - by Manithaasan - 05-21-2004, 06:55 PM
[No subject] - by Mathan - 05-22-2004, 01:38 AM
[No subject] - by kuruvikal - 05-22-2004, 02:16 AM
[No subject] - by Eelavan - 05-22-2004, 05:04 AM
[No subject] - by Mathan - 06-02-2004, 02:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)