05-19-2004, 01:38 PM
<b>தன்னாட்சி அதிகாரசபை கோரிக்கையை அடிப்படையாக வைத்தே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும்: யசூசி அக்காசி </b>
[ கொழும்பிலிருந்து சேரலாதன் ] [ புதன்கிழமை, 19 மே 2004, 14:57 ஈழம் ]
சமாதானப் பேச்சுவார்த்தைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தன்னாட்சி நிர்வாக அதிகாரசபை கோரிக்கையை அடிப்படையாக வைத்தே ஆரம்பிக்கப்படுமென்று ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அக்காசி தெரிவித்துள்ளார்.
தாம் திறந்த மனதுடன் கலந்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அக்காசி, பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பினரும் விட்டுக் கொடுப்புடன் கலந்து கொள்வார்கள் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை உருவாக்கப்படுவதன் அவசியத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். எனவே இந்த விடயத்திற்கு சமாதானப் பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் வழங்கப்படுமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, போர் நிறுத்த உடன்படிக்கையும் இந்த பேச்சுவார்த்தையின் போது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமென்று அக்காசி மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நான்கு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்கு முன்னர் ஹில்ரன் ஹோட்டலில் இன்று பிற்பகல் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஜப்பானின் விசேட பிரதிநிதி இந்த விடயங்களை கூறியுள்ளார்.
நன்றி புதினம்