05-18-2004, 09:44 PM
எம்முடன் இணைந்துள்ள அதாவுல்லாவும் பேரியலுமே முஸ்லிம் தனித்தரப்பு குறித்து வலியுறுத்தினர் ஹக்கீம் அல்ல என்கிறார் ஜனாதிபதி
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருந்து சமாதான பேச்சுவார்த்தையில் அரசாங்க பிரதிநிதியாக கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் தனித்தரப்பு குறித்து வலியுறுத்தவில்லை. ஆனால் பேரியல் அஷ்ரப்பும், அதாவுல்லாவும் எம்முடன் இணைந்து கொண்ட பின்னர் தான் முஸ்லிம்கள் தனித்தரப்பாக பங்குபற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
இவ்வாறு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சமாதான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக கலந்து கொள்ள வேண்டுமென்று மு.கா. தலைவர் ஹக்கீம் விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பாக ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியதாக ரூபவாஹினி தனது ஞாயிறு மாலைச் செய்தியில் குறிப்பிட்டது.
அச்செய்தியில் தெரிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் கருத்துக்கள் வருமாறு:
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாமே அவர்களின் பாதுகாப்புக்கு உச்ச கட்ட நடவடிக்கை எடுத்தோம். எதிர்காலத்திலும் முஸ்லிம்களின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்துவோம். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக பதவிவகித்தார்.
அத்துடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் அந்த அரசின் பிரதிநிதியாகவும் இருந்தார்.
அதன்போது சமாதான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தவில்லை.
குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கடந்த அரசின் போது அவ்வப்போது புலிகள் அமைப்பின் அச்சுறுத்தலுக்குள்ளாகினர்.
சொத்துக்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இது தொடர்பாக அப்பிரதேச முஸ்லிம் தலைவர்கள் என்னுடன் பேசினர்.அப்போது நான் அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தேன்.
இது தொடர்பாக பேசுவதற்கு நான் ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு விடுத்தும் அவர் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கு சமுகமளிக்கவில்லை. இருப்பினும் பேரியல் அஷ்ரப்பும் அதாவுல்லாவும் எம்முடன் இணைந்து கொண்ட பின்னர் சமாதான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக பங்குபற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
இவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் அரசாங்கம் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்து வருகின்றது.
வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>