05-18-2004, 09:37 PM
தனித்தரப்புக்கோரிக்கையை பலவீனப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி எம்மீது சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் குற்றச்சாட்டு நிலைப்பாட்டில் உறுதி எனவும் தெரிவிப்பு
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அரசாங்கமும் இணைந்து கட்சியின் தலைமைக்கு எதிராகவும், கட்சிக்கெதிராகவும் எத்தகைய சதியினை மேற்கொண்டாலும் சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக பங்குபற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். எனக்கெதிராக தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சதிக்கு அஞ்சி எமது தனித்தரப்புக்கோரிக்கையினைக் கைவிடப்போவதில்லை. முஸ்லிம் தனித்தரப்புக்கோரிக்கை யினை பலவீனப்படுத்துவதற்காகவே கட்சியின் மீதும், கட்சித்தலைமை மீதும் சேறுபூசும் சதி முயற்சியினை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதனை முறியடிக்க முஸ்லிம் சமூகம் முஸ்லிம் காங்கிரசுடன் ஒன்றிணையும் என்பது உறுதி என்றும் ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக பங்கு பற்றுவது தொடர்பான கோரிக்கையினை கடந்த ஆட்சிக்காலத்தில் ரவூப்ஹக்கீம் முன்வைக்கவில்லை என்றும் தற்போதே இக்கோரிக்கையினை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறித்தும், தனிப்பட்ட முறையில் அரசாங்க ஊடகங்கள் ஹக்கீம் மீது பழிசுமத்தியுள்ளமை தொடர்பாகவும் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரவூப் ஹக்கீம் கேசரிக்கு மேலும் தெரிவித்ததாவது,பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக பங்குபற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருப்பதனால் அதனை பலவீனமடையச் செய்வதற்காகவே ஜனாதிபதியும், அரசாங்கமும் தனிப்பட்ட முறையில் என்மீதும் கட்சிமீதும் அபாண்டமான பழியை சுமத்தியுள்ளன.
இத்தகைய அபாண்டமான சதிமுயற்சி எனது தனிப்பட்டவாழ்க்கையையும் பாதிக்கத் தக்கவகையில் அமைந்துள்ளது. எமது உறுதியான நிலைப்பாட்டை பல வீனப்படுத்துவதற்காக இத்தகைய கீழ்த்தரமான பழிகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த சதி முயற்சி குறித்து ஆதாரங்கள் எமக்கு கிடைத்துள்ளது. சதிமுயற்சியின் பின்னணி குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் அரசியல் அதியுயர் பீடக்கூட்டத்தில் எடுத்துக்கூறியுள்ளேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட அரசியல் உயர்பீடம் ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும், இத்தகைய சதிமுயற்சியினை வன்மையாக கண்டித்துள்ளது.
இந்த சதி குறித்து உத்தியோகபூர்வமான அறிக்கையினையும் கட்சிவெளியிடும்.
கட்சிக்கு எதிராகவும், கட்சியின் தலைமைக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சதி முயற்சி குறித்து ஆராய்ந்து எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கை குறித்து சிபார்சு செய்வதற்கு 5 பேர் கொண்ட குழு ஒன்றையும் கட்சி நியமித்துள்ளது.
எனக்கெதிராக தனிப்பட்டமுறையில் ஜனாதிபதியாலும், அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்பட்டுள்ள சதி முயற்சிக்கெதிராக சட்டநடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றோம்.
வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>