Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஹக்கீமினால் ஏமாற்றப்பட்ட பெண்
#5
4 எம்.பி.மார் மீது ஒழுக்காற்று நடவடிýக்கைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தீவிரமாக ஆராய்வு

லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துக்கு எதிராக சதி செய்ததாக கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிýக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக ஐவர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று மு.கா. அதி உயர் பீடக் கூýட்டத்தின் போது அமைக்கப்பட்டுள்ளது.

வெளி அரசியல் சக்தியொன்றுடன் இணைந்து ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட இரகசிய சதி நாடகம் அம்பலத்துக்கு வந்ததையடுத்தே, இந்த விசாரணைக் குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்குக் கிடைத்த ஒளிநாடாவொன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பார்வைக்கு அனுப்பப்பட்டதையடுத்தே இந்த இரகசிய சதி நாடகம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

தலைமைத்துவத்தினால், நம்பிக்கையாகக் கருதப்பட்ட ஒருவரும் அவரது சகாக்கள் மூýவரும் இணைந்து தலைமைத்துவத்துக்கு எதிராக சதி செய்ததாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கூýடிýய மு.கா.வின் உயர் பீடக் கூýட்டத்தில் பல சான்றுகளுடன் பலரும் குற்றம் சுமத்தியதையடுத்தே மேற்படிý நால்வர் மீதும் ஒழுக்காற்று நடவடிýக்கை எடுப்பது குறித்து ஆராயும் குழு கட்சியின் உப தலைவரும் சட்டத்தரணியுமான என்.எம்.சஹீத் தலைமையில் நியமிக்கப்பட்டது.

இக் குழுவில் மௌலவி ஏ.எல்.எம்.கலீஸ், வை.எல்.எஸ்.ஹமீத், சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ், முன்னாள் சிரேர்;ட பொலிஸ் அத்தியட்சர் மஜீத் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது அவதூறு கற்பிக்கும் விதத்தில் ஒரு பெண்னுடன் அவரைச் சம்பந்தப்படுத்தி அரச ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தகவல்களை வெளியிட்டது. இதன் பின்னணியில் அரச தரப்பைச் சார்ந்த சிலரும் சம்பந்தப்பட்டிýருப்பதாக அறியவந்துள்ளது.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் சதி முயற்சியில் ஈடுபட்டவர்களில் இருவர் மேற்படிý அவதூறுச் செய்திகளின் பின்னணியில் இயங்கி வருவதாகவும் நம்பகமாகத் தெரியவந்திருப்பதாக அறியவந்துள்ளது.

மேற்படிý இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் எத்தகைய நடவடிýக்கை எடுக்கலாமென்று குழு ஆராய்ந்து மிகக் குறுகிய காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கக் கேட்கப்பட்டுள்ளது.

ஞாயிறு இரவு நடைபெற்ற கூýட்டத்துக்கு மேற்படிý சதி முயற்சியிலீடுபட்டவர்கள் எனக் கருதப்படும் இரண்டு எம்.பி.க்கள் சமுகமளிக்கவில்லை எனவும் ஏனைய இரு சகாக்களும் கூýட்டத்துக்கு வந்து இடை நடுவில் வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒளி நாடாவைப் போட்டுப்பார்த்துக் கொண்டிýந்தபோதே அவர்களிருவரும் மெதுவாக அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

இது இவ்விதமிருக்க இக் கூýட்டத்தின் போது தலைமைத்துவத்தின் மீது பூரண நம்பிக்கை தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றுப்பட்டதாக மு.கா. பொதுச் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-18-2004, 12:02 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 12:09 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 01:06 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:41 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:56 PM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 07:56 PM
[No subject] - by tamilini - 05-18-2004, 09:00 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:37 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:22 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:23 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:24 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 02:25 PM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 02:44 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 09:17 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 09:32 PM
[No subject] - by kuruvikal - 05-19-2004, 10:43 PM
[No subject] - by Mathan - 05-20-2004, 01:24 AM
[No subject] - by Mathan - 05-20-2004, 01:31 AM
[No subject] - by Eelavan - 05-20-2004, 05:47 AM
[No subject] - by Manithaasan - 05-21-2004, 06:55 PM
[No subject] - by Mathan - 05-22-2004, 01:38 AM
[No subject] - by kuruvikal - 05-22-2004, 02:16 AM
[No subject] - by Eelavan - 05-22-2004, 05:04 AM
[No subject] - by Mathan - 06-02-2004, 02:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)