07-07-2003, 11:20 AM
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலமைப் பதவியில் வீ.ஆனந்தசங்கரி நீடிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரேரணை கூட்டணியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று 06-7-2003 பிற்பகல் 2.00 மணியளவில் கட்சித் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தலமையில் செயற்குழுக்கூட்டம் ஆரம்பமானது. இதில் மத்திய செயற்குழு உறுப்பினர்களில் 36 பேர் கலந்துகொண்டனர். தற்போதைய அரசியல் நிலமைகள், இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கை என்பன தொடர்பாக நீண்ட நேரம் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் ஆனந்தசங்கரி மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தை ஆவரங்கால் சின்னத்துரை முன்மொழிந்தார். எதிர்க்கருத்துக்களை எவரும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காலம் கடந்து போய் கூட்டம் நிறைவுறும் வேளை வந்துவிட்டதால் இப்பிரேரணை குறித்த விவாதத்தில் ஈடுபடவிரும்பவில்லையென கூட்டணியின் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் பின்னர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூட்டணி புலிகளின் கைப்பொம்மையாக செயற்படக்கூடாது என்று பலர் வலியுறுத்தியதாகவும் தெரிய வருகிறது.

