05-18-2004, 12:12 PM
சமாதானத்துக்கு குறுக்குவழிகள் உண்டா?
தனது தேர்தல் வாக்குறுதி ஒன்றை நிறைவேற்ற மிகக்கவர்ச்சியான குறுக்குவழியொன்றை சந்திரிகா கண்டுபிடித்துவிட்டார் போலத்தோன்றுகின்றது. நாட்டிலுள்ள சுமார் எழுபதாயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தனது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் வேலைதரப்படும் என்று முன்பு சந்திரிகா வாக்களித்திருந்தார். இப்பொழுது அந்தவாக்குறுதியை அவர் எப்படியோ நிறைவேற்றப்போகிறார் என்பதான ஒரு பரப்பான தோற்றம் உண்டாகின்றது.
இதன்படி நாட்டிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு சம்பளத்துடன் கூடிய இரண்டாண்டுகால தொழிற்பயிற்சி வழக்கப்படும். இந்தப்பயிற்சி முடிந்ததும் அரச அலுவலகங்களில் பயிற்சிக்குரிய வேலை தரப்படும். பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு 6000 ரூபா சம்பளம் தரப்படும் என்று தெரியவருகிறது.
இதற்கான நிதி எங்கிருந்து பெறப்படுகிறது தெரியுமா? முன்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசு இளைஞர்கள் கூட்டுறவுத் திட்டம் என்ற ஒரு திட்டத்திற்காக ஒதுக்கிய நிதி செலவழிக்கப்படமால் அப்படியே இருக்கிறதாம். அதைத்தான் இப்பொழுது சந்திரிகா எடுத்து பட்டதாரிகளுக்குச் சம்பளம் கொடுக்கப் போகிறார்.
இதன்மூலம்,வேலையற்று வீடுகளில் விரக்திவசப்பட்டு முடங்கிக் கிடக்கும் பட்டதாரிகள் ஏதோவொரு தொழில் பயிற்சியில் மினக்கெடப் போகிறார்கள். இது அவர்கள் எதிர்காலத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவதிலிருந்து அவர்களைத் திசைதிருப்பி வைத்திருக்கும். அதோடு, அவர்கள் ஜே.வி.பியின் கொள்கைகளின்பால் கவரப்படுவதையும் தடுக்கும்.
இங்கே உண்மையில் பட்டதாரிகளுக்கு வேலை தரப்படவில்லை மாறாக இரண்டாண்டுகளுக்கு அரைகுறைச் சம்பளத்துடன் பயிற்சி தரப்படுகிறது என்பதே சரி. அதோடு அவர்கள் பெறப்போகும் பயிற்சி அவர்களுடைய கல்வித் தகைமைகளுடன் தொடர்புடையதாக இருக்குமா? என்பதையும் இரண்டாடுகளின் பின் அவர்களுக்கு கிடைக்கப்போகும் வேலை அவர்களுடைய பட்டத்துடன் தொடர்புடையதாக இருக்குமா என்பதையும் ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை.
ஆனால் கிளர்ச்சிகளுக்குத் தலைமைதாங்கவல்ல இளைஞர்கள் யுவதிகளின் படை ஒன்றை இரண்டாண்டுகளுக்கு குறைச் சம்பளத்துடன் தாக்காட்ட இது உதவும்.ஆம் இதை அப்படித்தான் சொல்ல வேண்டும். இங்கே பிரச்சினை ஒத்திவைக்கப்படுகிறதே தவிர, தீர்க்கப்படவில்லை.
ஆனால் சந்திரிகா அதை மிகவும் கவர்ச்சிகரமாகச் செய்யப் போகிறார் என்பதே மெய்நிலை. இதற்காக அவர் முன்பு ரணில் தொடங்கிய ஒரு திட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட நிதியையே பெறப் போகிறார். இது ஒன்றைக்காட்டுகிறது. தனது இலக்குகளை அடைவதற்கு சாத்தியமான எல்லாக் குறுக்குவழிகளினூடாகவும் நாட்டைக் கொண்டு போக அவர் தயராகிவிட்டார்.
சமாதானத்தின் கதியும் அநேகமாக இப்படித்தான் இருக்கும் போலத் தோன்றுகிறது. நாடாளுமன்றத்தில் தனது கூட்டுமுன்னணியை ஸ்தரப்படுத்துவதற்கான ஒரு குறுக்குவழியாகவே அவர் சமாதானம் செய்யத் தொடங்கியுள்ளார். அதாவது, அவரைப்பொறுத்தவரை சமாதானம் எனப்படுவது ஒரு குறுக்கு வழிதான். அதேசமயம் அந்தச் சமாதானத்தை அடைவதற்கு உரிய குறுக்கு வழிகளையும் அவர் இனிக்கண்டுபிடிப்பார்.
யுத்தத்தில் குறுக்குவழிகள் இருக்கலாம். மாறாக சமாதானத்துக்குக் குறுக்குவழிகள் கிடையாது. விசுவாசமாகச் சமாதானம் செய்வதென்றால் அங்கே குறுக்குவழிகளுக்கு இடமில்லை. பரஸ்பரம் நம்பிக்கைகளின்மீது கட்டியெழுப்பப்படுவதே சமாதானம்.
இதில் குறுக்குவழிகளைத்தேடுவது என்பது சமாதானத்தின் வெளிப்படைத்தன்மையை சோதனைக் குள்ளாக்கும். முன்பு சந்திரிகாவுடன் செய்யப்பட்ட சமாதான முயற்சிகளை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் வஞ்சகத்தின் அரசியல் என்று வர்ணித்திருப்பதை இங்கே சுட்டிக் காட்டவேண்டும்.
இத்தகைய ஒரு பின்னணியில் இப்பொழுது சந்திரிகா சமாதானம் செய்யவேண்டுமானால் முக்கியமாக மூன்று தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்.
முதலாவது, புலிகளுக்கும் அவருக்கும் இடையில் கடந்த பத்தாண்டுகளாக உருவாகி வந்திருக்கும் இடைவெளியைக் குறைத்து ஆகக்கூடியபட்ச புரிந்துணர்வு ஒன்றை உருவாக்குவது.
இரண்டாவது, சமாதானத்தை மக்கள் மயப்படுத்துவது.
மூன்றாவது, ஜே.வி.பி.யை சமாதானத்தின் பங்காளியாக்குவது.
இம்மூன்றையும் செய்வதானால் அவர் ஒன்றேயொன்றைச் செய்தாலே போதும், அதுதான் விசுவாசமாகச் சமாதானம் செய்வது. விசுவாசமாகச் சமாதானம் செய்வராக இருந்தால் அதற்குக் குறுக்கு வழிகளைத் தேடவேண்டியிருக்காது. விசுவாசமாகச் செய்யப்படும் சமாதானத்தில்தான் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே மெய்யான புரிந்துணர்வு உண்டாகும்.
ரணிலுடனான சமாதானத்தில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையே முழு அளவிலான புரிந்துணர்வு இருந்தது என்பதல்ல. ஆனால் சமாதானத்திற்கான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் நல்லெண்ணச் சமிக்ஞைகள் பலவற்றை ரணில் ஆரம்பத்தில் வெளிப்படுத்தியிருந்தார். புலிகள் மீதான தடையை நீக்கியது. மூடிக்கிடந்த பாதைகளைத் திறந்தது. காவலரண்களை அகற்றியது. சோதனைச்சாவடிகளை அகற்றியது... போன்ற சில நல்லெண்ணச் சமிக்ஞைகளை அவர் வெளிக்காட்டியிருந்தார்.
ஆனால் சந்திரிகாவைப் பொறுத்தவரை அவருடன் ஏற்கனவே ஒருதடவை சமாதானம் செய்த கசப்பான ஒரு மனப்பதிவு தமிழர்களுக்கு உண்டு. அவருடைய சமாதானத்துக்கான யுத்தத்தின் குரூரம் பொய்த்தன்மை கபடம் போன்றவைகள் குறித்து தமிழர்களின் மனதில் ஆழப்படித்துள்ள பயங்கரமான முற்கற்பிதங்களை களைய வேண்டிய ஒரு முதற்பணி சந்திரிகாவுக்குண்டு.
நடந்துமுடிந்த பொதுத்தேர்தலுக்கு முதல்நாள் அவர் தமிழர்களுக்கு ஆற்றிய விசேட உரையில் மென்மையாக மன்னிப்புக் கேட்டிருந்தார். குறிப்பாக அந்த உரையில், யாழ்ப்பாணத்தின் வெற்றியை தனது அரசு கொண்டாடிய விதம் குறித்து முதற்தடiவாயாக வெளிப்படையாக வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழர்கள் அதை வெறுமனே ஒரு தேர்தல்கால தந்திரமாகவே பார்க்கிறார்கள். தவிர, அவருடைய வாக்குறுதிகளோ அல்லது மன்னிப்புக்களோ தமிழர்களுடைய காயங்களை ஆற்றலாம் என்றிருந்த காலங்கள் யாவும் எப்பொழுதோ தீர்ந்துபோய் விட்டன. இனி எதையும் செய்து காட்டினால்தான் உண்டு. சமாதானத்தைப் பொறுத்தவரை இது செயலுக்கான காலம்.
இப்பொழுதுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை கோட்பாட்டுரீதியாக அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில்தான். எனினும் நடைமுறையில் புரிந்துணர்வு உருவாகியது ரணிலுக்கும் புலிகளுக்கும் இடையில்தான். ஆனால் அதே அளவு புரிந்துணர்வு சந்திரிகாவுக்கும் புலிகளுக்கும் இன்னமும் உருவாகி விடவில்லை.
எனவே, இப்பொழுது புரிந்துணர்வு உடன்படிக்கை உண்டு. ஆனால் மெய்யான புரிந்துணர்வு இல்லை. இதை உருவாக்குவதென்றால் சந்திரிகா துலக்கமான, திட்டவட்டமான நல்லெண்ணச் சமிக்ஞைகளை வெளிப்படுத்தியாகவேண்டும். அப்படிச் செய்தால்தான் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு கனம் ஏறும். அவர் அப்படி ஏதும் செய்வாரா?
மற்றது, சமாதானத்தை மக்கள் மயப்படுத்துவது, ரணில் இதைச் செய்யவில்லை. சந்திரிகாவும் செய்வது கடினம். ஏனெனில், ரணிலை அச்சுறுத்துவதற்கு அவர் சொன்ன பொய்கள் கற்பனைகள் எல்லாவற்றையும் அவர் மறுதலித்தால்தான் சமாதானத்தை மக்கள் மயப்படுத்தமுடியும். இதற்கு சிங்களவர்களின் மறதியைக்கூட்ட ஏதாவது மருத்து கொடுக்கவேண்டும். அல்லது சமாதானத்தின் தியாகியாக மாறுவது என்று முடிவெடுக்க வேண்டும். இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா?
மூன்றாவது, ஜே.வி.பியை சமாதானத்தின் பங்காளியாக்குவது, இதிலொருவிசயத்தை முதலில் தெளிவுபடுத்தவேண்டும். ஜே.வி.பி 'சமாதானத்தின்' எதிரிபோல் தோற்றம் தருகிறதே தவிர மெய்யாகவே அது 'சமாதானத்தை' எதிர்க்கவில்லை. இலங்கைத்தீவில் இப்பொழுது எந்தக்கட்சிக்கு யுத்தநிறுத்தம் அதிகம் தேவைப்படுகிறது என்றுபார்த்தால் அது ஜே.வி.பி.தான். ஏனெனில் துரிதமாக வளர்ந்துவரும் ஒரு கட்சி என்ற அடிப்படையில், யுத்தநிறுத்தம் நிலவினால்தான் அவர்கள் இப்பொழுது பெற்றுள்ள அமைச்சுக்களை வைத்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து தமது ஆதரவுத்தளத்தை மேலும் பலப்படுத்தமுடியும்.
ஆனால் இதை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில் சமாதானத்தை தப்பாக அர்த்தப்படுத்திய அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றார்கள். இதில் சந்திரிகாவை விடவும் படு தீவிரமாக சமாதானத்தைக் காட்டிக்கொடுத்தது அவர்களே. எனவே அவர்கள் திடீரென்று 180 பாகையில் திருப்புவது என்றால் அது அவர்களைப்பற்றி சிங்கள வெகுசனங்களின் மத்தியில் உள்ள படிமத்தை உடைத்துவிடும்.
தவிர,ஹெல உறுமயவும் எங்கே ஜே.வி.பி சறுக்கும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறது. ஜே.வி.பி எவ்வளவுக்கெவ்வளவு 'சமாதானத்தை' நோக்கிப்போகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களுக்கு ஆதரவான தீவிரவாதிகள் ஹெல உறுமயவை நோக்கிப்போவார்கள்.
இத்தகைய ஒரு பின்னணியில் அவர்கள் சமாதான முயற்சிகளை வெளிப்படையாக ஆதரிக்கமுடியாது. ஆனால் உள்ள10ர சந்திரிகா செய்பவற்றுக்கு அவர்கள் ஆதரவுதான். ஆனால் சமாதானம் பிசகும் என்று கண்டால் அவர்கள் சந்திரிகாவையும் சமாதானத்தோடு சேர்த்து காட்டிக்கொடுத்துவிடுவார்கள். எனவே அவர்களை சமாதானத்தின் பங்காளிகளாக்குவது ஒரு முக்கிய முன் நிபந்தனையாகும்.
இல்லையென்றால், தான் செய்யவிரும்பாத எல்லாவற்றிற்கும் சந்திரிகா, ஜே.வி.பி.யை சாட்டாகக் கூறத்தொடங்கிவிடுவார். முன்பு ரணில் எப்படி சந்திரிகாவை சாட்டாகக் கூறிவந்தாரோ அப்படி.
எனவே சமாதானம் செய்யும் போது ஜே.பி.பி.யை ஒரு பங்காளியாக்கும் பொறுப்பை சந்திரிகா தட்டிக்கழிக்கமுடியாது. அவர் அப்படித் தட்டிக்கழிப்பராக இருந்தால் அவர் ஏதோ குறுக்குவழிகளைப்பற்றிச் சிந்திக்கிறார் என்று அர்த்தம். அதாவது சமாதானத்துக்கு விசுவாசம் இல்லை என்று அர்த்தம்.
அவர் விசுவாசம் இல்லை என்பது ஏற்கனவே நன்கு தெரிந்த ஒரு விசயம்தான். ஆனால், அவருடைய விசுவாசத்தையும் விசுவாசமின்மையையும் அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது. சர்வதேச சமூகம் அந்தவேலையைச் செய்யும் வரையிலுமாவது சந்திரிகாவை சமாதானம் செய்யவிடுவது தமிழர்களை ராஜீய அர்த்தத்தில் மேலும் பலப்படுத்தும்.
நிலாந்தன் ஈழநாதம்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>