05-18-2004, 12:09 PM
ஹக்கீமுக்கு எதிராக அரசு கீழ்த்தரமான பிரசாரம்!
சட்ட நடவடிக்கைக்கு அவரது கட்சி தயார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பலவீனப்படுத்துவதற்காகவே அரச ஊடகங்களில் தலைவர் ரவூப் ஹக்கீம் குறித்து கீழ்த்தரமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சதித்திட்டத்திற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மு.கா. உயர்பீடம் நேற்றுமுன்தினம் இரவு அவசரமாகக் கூடி ஆராய்ந்தது எனவும் அவர் கூறியிருக்கின்றார். ஹஸன் அலி எம்.பி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட ;டிருப்பதாவது:- ஒரு பெண்மணியைப் பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் கௌரவத்துக்கு களங்கத்தை ஏற்படுத்த அரசு பெரிய சதித்திட்டம் ஒன்றைத் தயாரித்திருக்கின்றது. அதன் வெளிப்பாடாகவே அரசின் இலத்தி ரனியல் மற்றும் அரச ஊடகங்களில் தலைவர் ஹக்கீமை ஒரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி அரசு செய்தி வெளியிட்டிருக்கின்றது. அரசு தனது குறுகிய அரசியல் லாபங்களுக்காகவே இவ்வாறான கீழ்த்தரமான - விசமத்தனமான - பிரசாரங்களை முடுக்கிவிட்டிருக்கின்றது. அரசு மேற்கொண்டிருக்கின்ற இந்தச் சதித்திட்டம் தொடர்பாகக் கட்சியின் உயர்பீடம் நேற்றுமுன்தினம் இரவு ஒன்பது மணிதொடக்கம் நேற்று அதிகாலை இரண்டு மணிவரை கூடி ஆராய்ந்தது.
இச் சதித்திட்டத்திற்கெதிராக சட்ட நடிவடிக்கை எடுப்பதற்காக ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய குழு வொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவம், கௌரவம் என்பவற்றை சிதறடித்து, கட்சியைப் பலவீனப்படுத்த அரசு மேற்கொண்டிருக்கின்ற திட்டங்களை சகல தரப்பினரும் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர். அவற்றை முறியடிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் திடசங்கற்பம் பூண்டிருக்கின்றது -இப்படி ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.
உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>