05-18-2004, 11:57 AM
பிரதி சபாநாயகராக கீதாஞ்சன குணவர்த்தன தெரிவு
பதின்மூன்றாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கீதாஞ்சன குணவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குழுக்களின் பிரதித் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப செயலாளரும், பராளுமன்ற உறுப்பினருமான முருகன் சச்சிதானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு பதவிக்கான தெரிவுகளும் ஏகமனதாக இடம்பெற்றுள்ளன.
சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் இன்று காலை 10 மணியளவில் பதின்மூன்றாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமானது.
சபை அமர்வின் ஆரம்பத்தின் போது தேசிய பட்டியல் மூலம் தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூவரும், இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினரும் சத்தியப் பிரமாணம் செய்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மேர்வின் சில்வா, விஜயதாச ராஜபக்ஷ, ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஜனதாச பீரிஸ், வீ.ஆர்.வீரசேகர மற்றும் மேரி லுசிடா ஆகியோர் பதவி விலகியதனையடுத்து இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக பா.அரியநேந்திரன் சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கிங்ஸ்லி இராசநாயகம் தமது பதவியை இராஜினாமா செய்தததையடுத்தே அரியநேந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இன்று காலை பாராளுமன்றம் கூடிய வேளையில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புரிமை பிரச்சனைகளை எழுப்பினர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் அப்பரிக்க பஞ்சானந்த தேரர் ஆகியோர் இந்த சிறப்புரிமை பிரச்சனையை எழுப்பினர்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான களுதாலுவ ரதனசார தேரர் நேற்றிரவு கடத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயராஐ; பெர்ணான்டோ புள்ளே பாராளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சனையை ஒன்றை எழுப்பி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இது தொடர்பாக தாம் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்திருப்பதாக சபாநாயகர் லொக்கு பண்டார கூறினார்.
இதனையடுத்து பிரதி சபாநாயகர் தெரிவு அமைதியான முறையில் இடம்பெற்றதாக பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகராக கீதாஞ்சன குணவர்த்தன தெரிவு செய்யப்பட்டார். இவரது பெயரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிய அதனை மைத்திரிபால சிறிசேன வழி மொழிந்தார்.
குழுக்களின் பிரதித் தலைவராக முருகன் சச்சிதானந்தனின் பெயரை பாராளுமன்ற உறுப்பினரான முத்து சிவலிங்கம் முன்மொழிய அதனை பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன வழி மொழிந்தார்.
பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித்தலைவர் ஆகிய பதவிகளுக்கு உரியவர்களை போட்டியின்றி தெரிவு செய்ய அரசாங்கம் இணங்கியதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இந்த நியமனங்கள் தொடர்பாக பிரதமர், அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கப்பாட்டுக்கு வந்ததாக சமரசிங்க மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றம் மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூடுகின்றது.
புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>