05-17-2004, 09:30 PM
அடுத்த கட்டப் பேச்சுக்களில், முதல் சந்திப்பு நோர்வேயில் இடம்பெறும்?
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ திங்கட்கிழமை, 17 மே 2004, 22:34 ஈழம் ஸ
புதிய அரசுடன் விடுதலைப் புலிகள் ஆரம்பிக்கவுள்ள அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளின் முதலாவது சந்திப்பு, நோர்வே நாட்டில் இடம்பெறுவதற்குத் தீர்மானமாகியிருப்பதாக எமது புதினம் நிருபர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடொன்றில் நடைபெறவேண்டுமென்று விடுதலைப் புலிகள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், நோர்வே நாட்டின் முக்கிய விடுதியொன்றில், இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என்றும், நோர்வே பிரதமர் இப்பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வைப்பார் என்றும் உத்தியோகப் பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலாவது பேச்சுவார்த்தைகளில், விடுதலைப் புலிகளின் தரப்பில் மதியுரைஞர் அன்ரன் பாரசிங்கமும், அரசு தரப்பில் திரு.nஐயந்த தனபாலவும், தலைமை தாங்க, நோர்வே அனுசரணையாளர்கள் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிப்பார்கள்.
இதற்கிடையில், அரச தரப்பில் nஐயந்த தனபாலவுடன், இரு முக்கிய அமைச்சர்களும், ஐ.ம.சு.மு.க்கு ஆதரவு வழங்கிய கூட்டணிக்கட்சியான பேரியல் அஸ்ரப்பின் முஸ்லிம் கட்சியிலிருந்து ஒருவரும் பங்கேற்கவுள்ளதாக கொழும்புப் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நன்றி : புதினம்