05-17-2004, 08:37 PM
அப்போது கேட்காத ஹக்கீம் இப்போது கேட்பது ஏன்?
ஜனாதிபதி, கேள்வி
கடந்த ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் அரசின் முக்கிய அமைச்சராய் இருந்த ரவ10ப் ஹக்கீம் அப்போது, அரசிற்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையே நடந்த சமாதானப் பேச்சுகளில் தனித்தரப்பாக கலந்து கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி யுள்ள ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இப்போது ஹக்கீம் முஸ்லிம் மக்களின் சார்பில் தனித்தரப்பாக கலந்து கொள்ள வேண்டும் என அடம்பிடிப்பது ஏன் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் மக்கள் சார்பில் தனது கட்சியும் பங்கு கொள்ள வேண்டும் என ஹக்கீம் விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து பதிலளித்துள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவியில் இருக்கும் பொழுது பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருந்த ஹக்கீம் சமாதானப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் இருந்தார். ஆனால், அப்போது அவர் தனித்தரப்பாகப் பேச்சுகளில் கலந்துகொள்ள எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு புலிகள் இயக்கத்தினால் சில பிரச்சினைகள் ஏற்பட்ட பொழுது, அந்தப் பிரதேச முஸ்லிம் தலைவர்கள் என்னைப் பல தடவை சந்தித்துப் பேசியுள்ளனர். அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் அம்மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நான் பல நடவடிக்கை எடுத்துள்ளேன்.
இது சம்பந்தமகாப் பேச ரவ10ப் ஹக்கீமிற்கு பல தடவை அழைப்பு விடுத்தும் கூட அவர் ஒரு போதும் சமுகமளிக்கவில்லை. எனினும், பேரியல் அர்;ரப்பும் அதாவுல்லாவும் எம்முடன் இணைந்து கொண்ட பின்னர், சமாதானப் பேச்சுகளில் முஸ்லிம்கள் சார்பாக தாம் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்களின் வேண்டுகோளையடுத்து, பேச்சுவார்த்தையின் போது, முஸ்லிம் மக்களின் பங்களிப்புக் குறித்தும் அரசாங்கம் புலிகளுடன் கருத்துகளைப் பரிமாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>