05-17-2004, 03:33 PM
கதிர்காமரை பேச்சுவார்த்தைக்குழுவில் இணைத்துள் கொள்ளாத விவகாரம்: ஐ.ம.சு.மு. அரசுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குழுவில் சிறிலங்காவின் அரச தரப்பில் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை இணைத்துக் கொள்ளாத விவகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவின் நலன்கணைப் பேணும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச நாடுகள் பல தடை செய்வதற்கு காரணமாகவிருந்த லக்ஸ்மன் கதிர்காமர் தற்போது அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அரசியலமைப்புச் சபையில் உள்ள சிலர் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கான அரச தரப்புப் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் சிறிலங்கா ஐனாதிபதியும், அவரது நெருங்கிய அரசியல் ஆலோசகர்களுமே ஈடுபட்டதாகவும் தெரிய வருகின்றது.
இதேவேளை, அரச தரப்பு பேச்சுவார்த்தைக்குழுவில் லக்ஸ்மன் கதிர்காமர் இடம்பெறுவதை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதாலேயே, அவரை அரசதரப்பு பேச்சுவார்த்தைக் குழுவில் ஐனாதிபதி சேர்த்துக் கொள்ளவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி புதினம்.

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>