05-17-2004, 03:23 PM
இது குறித்து கதிர்காமர் அமெரிக்காவில் வெளியிட்ட செய்தி குறித்து நீங்கள் குருவிகளின் யாழ் வலைப்பூவில் பார்க்கலாம்..இந்திய உபகண்டத்தில் எனும் தலைப்பின் கீழ் செய்திப்பகுதியில் உள்ளது....
http://kuruvikal.yarl.net/[/size]

கதிர்காமரின் கூற்று நகைப்புக்கிடமானது: விடுதலைப் புலிகள்
தமிழீழத் தேசியத் தலைவரை இந்தியாவின் புதிய அரசாங்கம்; நாடு கடத்துமாறு கோரலாம் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் தெரிவித்த கருத்துக் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் நகைப்புத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அமெரிக்காவில் வெளியிட்ட சில கருத்துக்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.
தமிழீழ தேசியத் தலைவரை நாடு கடத்துமாறு இந்தியாவின் புதிய அரசாங்கம் கோரிக்கை விடலாம் என்றும், விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு தன்னாட்சி அதிகார சபை ஆலோசனைகள் தனிநாட்டுக்கு வழிவகுக்கக் கூடியவை என்றும் லக்ஸ்மன் கதிர்காமர் அமெரிக்காவில் ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணப்பாளர் புலித்தேவன் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, லக்ஸ்மன் கதிர்காமர் வேண்டுமானால் வன்னி வந்து தமது தலைவரை நாடு கடத்துவதற்கு முயற்சிகளைச் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லக்ஸ்மன் கதிர்காமரின் இத்தகைய கருத்துக்கள் இலங்கையின் சமாதான முயற்சிகளை பாதிக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

கதிர்காமரின் கூற்றுக்கு தமிழ்க் கூட்டமைப்பு கடும் ஆட்சேபம்
தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அமெரிக்காவில் வெளியிட்ட சில கருத்துக்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.
லக்ஸ்மன் கதிர்காமரின் இக்கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா ஜனாதிபதி உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வேளையில், அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், லக்ஸ்மன் கதிர்காமரின் இத்தகைய கருத்துக்கள் இலங்கையின் சமாதான முயற்சிகளை பாதிக்கலாம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

கதிர்காமரின் கூற்றுக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இடைக்கால நிர்வாகம் வழங்கக்கூடாது என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூறியிருப்பதானது, மிகவும் வேடிக்கையாகவும் நகைப்புக்குரியதாகவும் உள்ளதென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழர்களின் பாரம்பரியம், போராட்டத்தின் தார்ப்பரியங்கள் தொடர்பாக கதிர்காமருக்கு என்ன தெரியும்? விடுதலைப் புலிகளிடம் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை கொடுக்கவேண்டாம் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அருகதை உண்டு? இவ்வாறு செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.
கதிர்காமர் கூறியுள்ள கருத்தானது, அவருடைய தனிப்பட்ட கருத்தா அல்லது இலங்கை அரசாங்கத்தின் கருத்தா என்று இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அரசாங்கம் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென்று கூறுவதன் முக்கிய நோக்கம் என்னவென்று புரியவில்லை. உண்மையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனை தீர்க்க வேண்டும் என்பதற்காகவா அல்லது வெளிநாட்டுப் பணத்தை பெற வேண்டும் என்பதற்காகவா இந்த பேச்சுவார்த்தை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்திற்கு நட்ட ஈடு வழங்கப் போவதாக இலங்கை அரசு கூறுகிறது. இவ்வளவு காலம் நட்ட ஈடு வழங்காது தற்போது இந்த முடிவை எடுத்து இருப்பது கண்துடைப்பாகவே கருத வேண்டியுள்ளது.
இனப்பிரச்சனை உக்கிரமடைய இந்த இனக்கலவரமே காரணம். எனவே அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கையை எடுப்பதை விடுத்து பொய்யாக இவ்வாறு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் உயிரை இந்த அரசாவது திருப்பி கொடுக்குமா என்று தமிழரசுக் கட்சியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி புதினம்.