Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்னிப்பு கேட்கவேண்டும்
#6
<span style='color:red'> இந்தக் கதையை கொஞ்சம் பொறுமையோடு வாசிக்க முடிந்தால் இதை ஏன் இணைத்தேன் என்பது தேவையானவர்களுக்கும் புத்திசாலிகளுக்கும் புரியும். மற்றவர்களுக்கு...............?

[align=center:4843e7c006]<img src='http://www.kumudam.com/kumudam/05-04-04/11.jpg' border='0' alt='user posted image'>[/align:4843e7c006]குழந்தைகள் _ தெய்வங்கள்! இது நூறு சதவிகிதம் உண்மை. ஏனெனில், தெய்வத்தன்மையின் ஒரு பண்பான கள்ளங்கபடமற்ற சிரிப்பும், கண்களில் தெளிவும் எப்போதும் குழந்தைகளிடம் இருந்து கொண்டே இருக்கும்.

குழந்தைகள் மூளையில் இருந்து செயல்படுவதில்லை.

குழந்தைகள் இதயத்தில் இருந்து செயல்படுகிறார்கள்.

குழந்தைகள் இதயபூர்வமாக (7 வயது வரை) வாழ்வதால் அவர்களின் கிரகிக்கும் தன்மை முழுமையாக இருக்கும். அவர்கள் பார்த்த, உணர்ந்த விஷயங்கள் தவறாக இருந்தாலும், சரியாக இருந்தாலும் அப்படியே பதிந்துவிடும். அந்தப் பதிவுகளாகவே மாறி விடுவார்கள். சிறு பிராயத்தில் ஏற்படும் அனுபவங்கள்தான் ஒருவரின் அடிப்படை குணத்தை நிர்ணயிக்கின்றன.

தவறான மனிதர்கள் உருவாவதற்கு, தவறான வளர்ப்புமுறை காரணமா? என்று சிலர் என்னிடம் கேட்பார்கள்.

வளர்ப்பு முறையில் எப்போதும் தவறு இருப்பதில்லை. வளர்ப்பவரின் முதிர்ச்சியில் தான் எப்போதும் தவறு இருக்கிறது.

பெற்றோரின் முதிர்ச்சியில் வேறுபாடுகள் இருந்தாலும், தன் குழந்தை நன்றாக வளர வேண்டும் என்ற கரிசனம், அக்கறை, பாசம் எல்லோரிடமும் இருப்பதால் வளர்ப்புமுறையைக் குறைசொல்ல முடியாது.

நன்கு மனமுதிர்ச்சி கொண்ட ஒருவரால் குழந்தையை தவறான வழியில் வளர்க்க முடியாது. அதேபோல், மன முதிர்ச்சி தேவையான அளவு இல்லாமல் சராசரி வெறுப்பு, எரிச்சல், பொறாமை, துக்கம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியினர், எவ்வளவு முயற்சித்தாலும், எவ்வளவு குழந்தை வளர்ப்பு முறையைப் படித்தாலும், கேட்டாலும் குழந்தையை நன்றாக வளர்க்க முடியாது.

உங்களது வார்த்தைகளையும், எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் அதிகம் கவனிப்பதில்லை. ஏனென்றால், அவை மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள்.

உங்களது முகபாவங்களையும், உணர்ச்சிகளையும்தான் குழந்தைகள் முழுமையாக கிரகிக்கின்றன. ஏனென்றால் அவை இரண்டும் இதயம் சம்பந்தப்பட்டவை.

கிட்டத்தட்ட எல்லோருமே முகமூடி அணிந்த வாழ்க்கையைத்தான் நடத்துகிறார்கள். பல காரணங்களுக்காக தங்கள் உணர்வுகள், ஆசைகள், கோபங்களை மறைத்து சூழ்நிலைக்கேற்ப வேஷம் ஏற்க வேண்டியிருக்கிறது. இப்படியே இரட்டை வாழ்க்கை வாழ்ந்து பழகியவர்கள் இதயபூர்வமாக, உணர்ச்சிபூர்வமாக வாழ்வது எப்படி என்பதை மறந்தே விடுகிறார்கள்.

இப்படி, வாழப் பழகிய மனிதர்களுக்கு முதல்முறையாக நீங்கள் தவிர்க்க முயன்றாலும், முடியாவிட்டாலும் உங்களுடைய 'முகமூடி' 'அமுக்கப்பட்ட உணர்வுகள்', 'வெறுப்புகள்', 'துக்கங்கள்' _ உங்களின் முகபாவங்கள் மூலமும், உணர்ச்சிகளின் மூலமும் தெளிவாக வெளிப்படும். அப்படியே அது குழந்தைக்குச் சென்றுவிடும். குழந்தை மனது பஞ்சுபோல் நீங்கள் கொடுக்கும் நிறத்தை அப்படியே ஏற்கிறது.

_இது சூட்சுமமான உண்மை.

அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோர்களை தினமும் பார்த்து வளரும் குழந்தையின் மனதில், சண்டை என்பது வாழ்க்கையின் ஒரு அத்தியாவசியமான அம்சம் என்று மனதில் பதித்து விடும். பிஞ்சு மனதில் கலவரம் என்ற விதை விதைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள் கோபக்காரர்களாகவும், கலகக்காரர்களாகவும் எளிதில் மாறிவிடுவார்கள்.

சண்டை சச்சரவு இல்லாமல் அன்போடும், பரிவோடும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் பெற்றோர்களை தினமும் பார்த்து வளரும் குழந்தையின் மனதில் அன்பு, விட்டுக்கொடுத்தல், உதவி செய்தல் என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம், ஒரு தன்மை என்று மனதில் பதிந்துவிடும்.

அன்பும், பண்பும் விதைக்கப்பட்ட பிஞ்சு மனத்திற்கு கலவரம், கோபம், சண்டை, அடுத்தவர்களைத் துன்புறுத்துதல் என்பதெல்லாம் நஞ்சாகத் தெரியும்.

முதல்வகைப் பெற்றோரிடம் வளரும் குழந்தை 'நல்லவனாக' _ 'அன்பானவனாக' _ 'பண்பானவனாக' மாற நிறைய முயற்சி செய்ய வேண்டும்.

இரண்டாவது வகை பெற்றோரிடம் வளரும் குழந்தை 'நல்லவனாக', 'அன்பானவனாக', 'பண்பானவனாக' மாற கஷ்டப்படவேண்டியதில்லை. அவை அந்தக் குழந்தையிடம் இயற்கையான ஒரு குணமாகவே அமைந்துவிடும்.

பாவம் குழந்தைகள். குழந்தைகள் தெய்வம்தான்; மறுக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் முழு விவரம் தெரியும் வரை தாய், தந்தையாகிய நீங்கள்தானே அந்தக் குழந்தைக்கு குரு, தெய்வம், உலகம் எல்லாம்.

தெய்வத்தையும், உலகத்தையும் குழந்தை உங்கள் மூலம்தான் முதலில் பார்க்கிறது.

[u]நீங்கள் செய்யும் சிறு தவறுகள், உங்களின் முதிர்ச்சியின்மை எல்லாம் பிஞ்சு மனத்தை நஞ்சாக்கும். தாம் நஞ்சைத்தான் (நமது குணத்திற்கும், பணத்திற்கும் பாதகமான) கிரகிக்கிறோம் என்ற தெளிவுகூட இல்லாமல் கள்ளம் கபடம் இல்லாமல் உங்களை முழுமையாக நம்பும் குழந்தைகளுக்கு அமிர்தத்தைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.


உங்களின் மன முதிர்ச்சியே அந்த அமிர்தம்.

பணம் சேர்த்து வைப்பதோடு, பண்பை அதிகம் சேகரியுங்கள். புகழ் சேர்த்து வைப்பதோடு, தெளிவை அதிகம் சேகரியுங்கள்.

[align=center:4843e7c006]குழந்தை வளர்ப்பு முறையைக் கற்றுக் கொள்வதைவிட,
<b>உங்களை வளர்க்கும் முறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.</b>
<img src='http://www.kumudam.com/kumudam/05-04-04/11p.jpg' border='0' alt='user posted image'>
Thanks காற்று வரும்...</span>
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 05-14-2004, 04:55 PM
[No subject] - by ganesh - 05-16-2004, 11:15 PM
[No subject] - by AJeevan - 05-17-2004, 03:00 AM
[No subject] - by ganesh - 05-20-2004, 09:02 PM
[No subject] - by sethu - 05-21-2004, 11:57 AM
[No subject] - by ganesh - 05-21-2004, 06:04 PM
[No subject] - by ganesh - 05-21-2004, 06:07 PM
[No subject] - by sethu - 05-21-2004, 06:19 PM
[No subject] - by sethu - 05-21-2004, 07:06 PM
[No subject] - by ganesh - 05-21-2004, 10:39 PM
[No subject] - by இராவணன் - 05-22-2004, 01:04 AM
[No subject] - by sOliyAn - 05-22-2004, 01:30 AM
[No subject] - by Eelavan - 05-22-2004, 05:02 AM
[No subject] - by Rajan - 05-22-2004, 04:44 PM
[No subject] - by shanmuhi - 05-22-2004, 05:40 PM
[No subject] - by Shan - 05-24-2004, 12:28 PM
[No subject] - by Rajan - 05-24-2004, 02:01 PM
[No subject] - by ganesh - 05-24-2004, 06:34 PM
[No subject] - by Eelavan - 05-24-2004, 07:00 PM
[No subject] - by ganesh - 05-24-2004, 07:37 PM
[No subject] - by Eelavan - 05-24-2004, 08:55 PM
[No subject] - by canada - 05-24-2004, 10:00 PM
[No subject] - by ganesh - 05-25-2004, 06:49 AM
[No subject] - by sethu - 05-25-2004, 11:48 AM
[No subject] - by Shan - 05-25-2004, 12:29 PM
[No subject] - by sethu - 05-25-2004, 06:23 PM
[No subject] - by ganesh - 05-25-2004, 06:34 PM
[No subject] - by sethu - 05-25-2004, 06:36 PM
[No subject] - by ganesh - 05-25-2004, 07:04 PM
[No subject] - by ganesh - 05-25-2004, 07:06 PM
[No subject] - by ganesh - 05-25-2004, 07:09 PM
[No subject] - by Eelavan - 05-25-2004, 07:12 PM
[No subject] - by Rajan - 05-25-2004, 07:34 PM
[No subject] - by ganesh - 05-25-2004, 07:42 PM
[No subject] - by Eelavan - 05-25-2004, 08:13 PM
[No subject] - by ganesh - 05-25-2004, 10:58 PM
[No subject] - by ganesh - 05-25-2004, 11:02 PM
[No subject] - by sethu - 05-25-2004, 11:20 PM
[No subject] - by kuruvikal - 05-25-2004, 11:25 PM
[No subject] - by Rajan - 05-26-2004, 12:33 AM
[No subject] - by sethu - 05-26-2004, 12:37 AM
[No subject] - by sethu - 05-26-2004, 12:38 AM
[No subject] - by Eelavan - 05-26-2004, 06:47 AM
[No subject] - by ganesh - 05-26-2004, 06:53 AM
[No subject] - by Shan - 05-26-2004, 11:58 AM
[No subject] - by Eelavan - 05-26-2004, 03:04 PM
[No subject] - by Rajan - 05-26-2004, 04:57 PM
[No subject] - by tamilini - 05-26-2004, 07:27 PM
[No subject] - by canada - 05-27-2004, 05:24 PM
[No subject] - by ganesh - 06-04-2004, 06:27 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 06:54 PM
[No subject] - by Rajan - 06-04-2004, 09:31 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 10:01 PM
[No subject] - by Rajan - 06-04-2004, 11:34 PM
[No subject] - by shanmuhi - 06-04-2004, 11:52 PM
[No subject] - by ganesh - 06-05-2004, 12:22 AM
[No subject] - by sethu - 06-05-2004, 02:46 AM
[No subject] - by sOliyAn - 06-05-2004, 02:48 AM
[No subject] - by Eelavan - 06-05-2004, 06:04 AM
[No subject] - by ganesh - 06-05-2004, 08:48 AM
[No subject] - by ganesh - 06-05-2004, 08:51 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)