05-14-2004, 01:18 AM
பேரழகன் - விமர்சனம்
<img src='http://www.tamilcinema.com/cinenews/review/2004/perazhagan.jpg' border='0' alt='user posted image'>
படத்தின் முதல் ஆச்சர்யமே சூர்யாதான். முன் தள்ளிய பற்கள். முதுகை வளைக்கும் கூன். எக்ஸ் டைப் கால்கள். ஆள்தான் இப்படியே தவிர, மனசுக்குள் இவர் ஒரு மன்மதன்! ஒவ்வொரு முறை குளிக்க போகும்போதும் நாலு லைப்பாய் சோப் தேவைப்படுகிறது இந்த அழகனுக்கு. வாயை திறந்தால் பயங்கர சவடால் பேர்வழி. சின்னானாக அவதாரம் எடுத்திருக்கும் சூர்யா.... ஜோர்யா!
அழவைக்கிற அளவிற்கு ஆயிரம் காரணங்களை இந்த கேரக்டர் சுமந்திருந்தாலும், அப்படியரு சங்கடத்தை ரசிகர்களுக்கு கொடுக்காத இயக்குனருக்கு ஒரு ஜே!
இன்னொரு சூர்யா பயங்கர மிடுக்கு. டி.எஸ்.பி பெண்ணை காதலிக்கும் கான்ஸ்டபிள் மகன். பாக்சரான இவர், காதலியின் மரணத்திற்கு பின்பும் அதே முரட்டுத்தனத்தை தொடர்வது பொருத்தம். ஒரு கட்டத்தில் பெற்ற அப்பனுக்கே விழுகிறது ஒரு அடி! அடியா அது, இடி! இறந்து போன தன் காதலியின் கண்கள் பொருத்தப்பட்டிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, பரவசத்தோடு ஜோதிகாவை அணைத்துக் கொள்ளும் சூர்யா, எல்லா நேரமும் அந்த கண்களை பார்த்தபடியே அவரை விரட்டி விரட்டி துரத்துவது பரிதாபம். அதே நேரத்தில் பகீர்!
சூர்யாவை போலவே இரண்டு வேடங்களில் ஜோதிகா. வழக்கம் போல உதட்டை சுழித்து அழகு காட்டும் ஜோதிகாவை, அந்த பார்வையில்லாத ஜோதிகா, முந்தியிருக்கிறார் பல காட்சிகளில். குறிப்பாக, முதன் முதலாக பார்வை வரும் நேரத்தில் சின்னான் என்று நினைத்துக் கொண்டு சூர்யாவின் மார்பில் முகம் புதைப்பதும், பின் அவரல்ல இவர் என்பதை தெரிந்து கொண்டு குற்ற உணர்ச்சியால் தவிப்பதும்...
மேரேஜ் அரேன்ஜர் விவேக் வரும்போதெல்லாம் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. சின்னானும், விவேக்கும் சேர்ந்து கொண்டு அடிக்கும் லூட்டிகள் விலா நோக வைக்கிறது. அதிலும் ஒரு அடி சைஸ் உயரத்திற்கே இருக்கும் சினேகா, ''என்ன கிண்டலா பண்றீங்க? பெண் போலீஸ்கிட்டே சொல்லி பொடாவுல உள்ளே தள்ளிடுவேன்'' என்று மிரட்டுவதையும், ''என் பின்னால எத்தனை தடவை சுத்தினாலும் மனசு இறங்க மாட்டேன்'' என்று அலட்டுவதையும் கேட்டால் ''அட ஆழாக்கே...'' என்று அடி வயிற்றிலிருந்து கிளம்புகிறது சிரிப்பு! இந்த லட்சணத்தில் எஸ்.டி.டி பூத் வைத்திருக்கும் சின்னான் போடுகிற ஒரு டம்மி அழைப்பு சினேகா வீட்டுக்கு போய் தொலைப்பதை எப்படி சிரிக்காமல் ரசிப்பதாம்? ஆனாலும், விவேக்கின் வாயிலிருந்து வருகிற பல வார்த்தைகள் ஊனமுற்றவர்களின் உள்ளத்தை நோக வைப்பது மட்டும் வெளிப்படையான சோகம்!
ஜோதிகாவின் வீட்டின் உள்ளேயே தைரியமாக நுழைந்து பெண் பார்க்க வந்தவர்கள் முன்னிலையில், அவரை தன் காதலி என்று சொல்லும் சூர்யா, அந்த அர்த்த ராத்திரியில் ஓடிப்போக முடிவெடுப்பதும், அதற்காக அவரை சின்னான் உதவியுடன் காட்டுப்பகுதிக்கு வரச் சொல்வதும், நம்பும்படியாகவா இருக்கிறது?
குறிப்பிட்ட சொல்லப்பட வேண்டியவைகளில் சண்டைக்காட்சிகளும் ஒன்று. ஸ்டண்ட் சிவா, தியாகராஜன், பாராட்டுக்குரியவர்கள்.
ரத்னவேலுவின் ஒளிப்பதிவு, கண்ணாடி!
இசை- யுவன்சங்கர்ராஜா. அம்புலிமாமா பாடல் அசத்தல்! புஷ்பவனம் குப்புசாமியின் வெண்கல குரலில் தலைவாசல் விஜய் பாடும் பாடல், கம்பீரம்!
சிவாஜிக்குப் பின் கமல்! கமலுக்குப் பின் விக்ரம் என்பவர்கள்
சற்றே குழம்பக்கூடும். குழம்ப வைத்திருக்கிறான் சின்னான். நீண்ட வரலாற்றை சுமந்து கொண்டு பயணிக்கும் தமிழ்சினிமா என்ற பஸ், சின்னானுக்காகவும் ஒரு 'பிரேக்' அடித்திருக்கிறது. பிறகென்ன... ஏறிக்கொள்ளுங்கள் சூர்யா!
நன்றி - தமிழ் சினிமா

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>