05-14-2004, 12:41 AM
ஓரிரு தினங்களில் பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு: விடுதலைப் புலிகளின் மதியுரைஞர்
நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன், சிறிலங்காவிற்கான நோர்வேத்து}துவர் ஹான்ஸ் பிறஸ்கர் ஆகியோர் ஜனாதிபதியின் செய்தியுடன் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களை கிளிநொச்சியில் சந்தித்தனர்.
நோர்வே து}துக்குழுவினருடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு:-
கேள்வி:- இன்று நோர்வே தரப்பினர் அரசாங்கத்திடமிருந்து என்ன விடயங்களை அல்லது முடிவுகளை கொண்டு வந்தார்கள் எனக் கூற முடியுமா?
பதில்:- தீர்க்கமான முடிவுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான சில அடிப்படை பிரச்சனைகளை எழுப்பியிருந்தோம். அனேகமான பிரச்சனைகள் வந்து எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது. என்ன என்ன விடயங்கள் என்பதை விபரமாக சொல்ல விரும்பவில்லை.
அனால் ஒட்டுமொத்தமாக இந்தப் பேச்சுவார்த்தைகளை அரம்பிப்பதற்கான முன் முயற்சியை மிகவும் திருப்திகரமான முறையிலும், ஆக்கபூர்வமான முறையிலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. சந்திரிகா குமாரதுங்க அவர்கள் எப்படியாவது இந்தப் பேச்சுவார்த்தைகளை விடுதலைப் புலிகளுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமான அக்கறை காட்டி வருவதால் சில அடிப்படை விஷயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டு வருகின்றது.
இந்தப் பேச்சுவார்த்தைகளை எங்கே நடத்துவது, எப்போது நடத்துவது என்ற விடயங்கள் குறித்த முடிவு இன்னும் ஓரிரு தினங்களில் காணப்படும். ஆகவே இப்போது நான் அதைப்பற்றி எதுவும் சொல்ல முடியாதுள்ளது. ஏனென்றால் இன்னும் சில பிரச்சினைகள் தொடர்பாக கதைத்து அவற்றை நோர்வேயின் சமாதானத் து}துவர் சந்திரிகா அம்மையாரிடம் எடுத்துச் சென்று அவருடன் கதைத்து எங்களுக்கு ஒரு இறுதி முடிவை சொல்வார்கள்.
ஆகவே, இரு தரப்பினருக்கும் மத்தியில் இணக்கப்பாடு கண்டு அடிப்படையான சில விடயங்களில் ஒத்திசைவு காணப்பட்டு பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான ஒரு நல்ல புறநிலை உருவாகி வருகிறது என்பதை மட்டும் நாங்கள் உறுதியாகச் சொல்லலாம்.
கேள்வி:- நீங்கள் நோர்வே வெளிவிவகார அமைச்சரிடம் முக்கியமாக பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் ஏற்படுவதற்கு முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து உங்களுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைதிருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றீர்கள். அதைவிட முக்கியமான விடயங்கள் குறித்து மேலதிகமாக ஆராயப்பட்டதா? அல்லது உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா?
பதில்:- சில அடிப்படை விடயங்கள் சம்பந்தப்பட்ட hPதியில் உதாரணமாக விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகள் அவர்களுடன் மட்டும் தான் பேச்சுக்கள் நடத்த வேண்டும் என்றும், பேச்சுக்கள் மேல் அவர்களுக்கு சமத்துவமான அந்தஸ்துகள் வழங்கப்படல் வேண்டும். பேச்சுக்கள் இலங்கைக்கு வெளியே நடைபெற வேண்டும். இப்படியான சில பிரச்சினைகளுக்கு இணக்கப்பாடு காணப்பட்டிருக்கின்றது.
இன்றும் திருப்திகரமான முறையில் இந்த இணக்கப்பாடு அமையப் பெற்றிருந்தது. ஆனால், மேலும் சில நடைமுறைப் பிரச்சனைகள் இருக்கின்றது. முதலாவது பேச்சு எங்கே நடத்துவது. எப்போது நடத்துவது என்ற hPதியில் இங்கே சில நடைமுறைப் பிரச்சினைகளிலும் சில சிக்கல்கள் இருப்பதும், இது சம்பந்தமாகத்தான் இன்றும் கதைத்து, இதற்கொரு தெளிவான முடிவை காண்பதற்கு நோர்வேத் து}துவரிடம் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே எல்லாவற்றுக்கும் ஒரு உறுதியான முடிவு காணப்படும். இறுதியில் இன்னும் ஓரிரு தினங்களில் அனேகமாக நோர்வே அரசுதான் ஒரு பொதுவான கூட்டறிக்கை மற்றும் இரு தரப்பிற்கும் மத்தியில் காணப்பட்ட இணக்கம் சம்பந்தமாக ஒரு அறிக்கையை விடுவார்கள்.
கேள்வி:- இறுதித்தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் நிர்வாகசபை தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் சமாந்தரமாக நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கூறுவது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- எங்கள் நிலைப்பாடு இதுதான் திரும்பி திரும்பி இதைத்தான் சொல்கிறோம் முதலில் இடைக்கால நிர்வாக கட்டமைப்பு பற்றித்தான் பேசப்படல்வேண்டும் அதில் ஒரு இணக்கப்பாடு காணப்படல் வேண்டும் அது நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் அதற்கு அப்புறம் தான் இனப்பிரச்சினை தொடர்பாக பேச்சுக்கள் தொடரவேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு அதைத்தான் நாங்கள் திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறோம் ஆகவே எங்களுக்கு திருப்திகரமான இணக்கப்பாடு வரும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>