05-05-2004, 05:27 PM
பாராளுமன்றம் வந்ததால் பஸ்ஸில் கூýட ஆசனமில்லை
பௌத்த பிக்குமார் தேர்தலில் போட்டிýயிட்டதை சில பௌத்த பீடங்கள் கண்டனம் செய்திருந்தன என்ற போதிலும் அவர்களைத் தேர்தல் களத்தில் இருந்து வெளியேற்ற எதையும் செய்ய முடிýயவில்லை. சிங்கள பொதுமக்கள் பிக்குமாரின் தேர்தல் களப் பிரவேசத்தை எதிர்க்கவில்லை. வாக்களித்து 9 பேரை பாராளுமன்றத்திற்குள்ளும் கொண்டு வந்திருக்கிறார்கள்.
பாராளுமன்றம் கடந்த ஏப்ரல் 22 இல் கூýடிý சபாநாயகரைத் தெரிவு செய்த போது, லொக்கு பண்டாரவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியுடனும் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்புடனும் சேர்ந்து ஜாதிக ஹெல உறுமயவின் இரு பிக்கு எம்.பி.மார் வாக்களித்ததையடுத்து, புலிகளின் பதிலுரிமையாளர்களாக சபைக்குள் வந்திருப்பவர்களுடன் சேர்ந்து விட்டதாக இந்தப் பிக்குமாருக்கு எதிராக ஜே.வி.பி.யினரும் அரசாங்க ஊடகங்களும் தாறுமாறான பிரசாரம்.
கடந்த மே தினத்தன்று கொழும்பில் ஜே.வி.பி.யினர் நடத்திய ஊர்வலத்தில் ஒரு ஊர்தியில் விழுந்து கிடக்கும் யானை மீது புலி ஏறியிருந்து கொண்டு சங்கு ஊதுகிறது. விளங்குகிறது தானே உங்களுக்கு விசயம்.
போதாதகுறைக்கு பிக்கு எம்.பி.மாரின் விகாரைகள் மீதும் இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியிருந்தார்கள். இப்படிýயெல்லாம் அவமானப்படுத்தப்படுவோமென்று பிக்கு எம்.பி.மார் உண்மையில் நினைத்திருக்கமாட்டார்கள்.
நேற்று எனக்கு திக்குவெல்லையில் இருந்து நண்பர் எம்.ஏ.சி.முஹம்மத் ஹாஜியார் ஒரு கடிýதம் எழுதியிருந்தார். பஸ்களில் மதகுருமாருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள முன்வரிசை ஆசனங்களில் இப்போது தென்பகுதியில் பாமரமக்கள் துணிச்சலுடன் அமருகிறார்களாம். பிக்குமார் வந்து பஸ்ஸில் ஏறினாலும் அந்த ஆசனங்களை விட்டு எழுந்து இடம் கொடுக்கிறார்கள் இல்லையாம். முன்னரெல்லாம் பௌத்த பிக்குமாருக்கு அந்த ஆசனங்களைக் கொடுக்காமல் அமர்ந்திருக்கும் ஆட்களை ஒரு முறைப்பாகப் பார்த்து ஏசி எழுப்பி விடுவது தான் சிங்களப் பயணிகளின் வழமை. இப்போது அவர்களே ஆசனங்களைக் கொடுக்கிறார்கள் இல்லையாம்.
கடந்த வாரத்தில் இருந்து தான் இந்தக் காட்சிகளைக் காணக்கூýடிýயதாக இருக்கிறதாம். கடந்த மாதம் 26 ஆம் திகதி அம்பலாங்கொடையில் இருந்து அம்பாறை சென்ற தனியார் கடுகதி பஸ்ஸொன்று மாத்தறை தபாலகத்துக்கு முன்பாக வந்து நின்றது. கூýட்டத்துடன் கூýட்டமாக சனங்களுடன் இடிýபட்டுக் கொண்டு ஒரு பௌத்த பிக்குவும் ஏறினார் அந்த பஸ்ஸில்.
முன் ஆசனத்தில் இரு பெண்களும் ஒரு பையனும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அருகே அந்தப் பௌத்த பிக்கு போய் நின்று கொண்டார். பெண்களும் பையனும் எழும்பி அவருக்கு இடம் கொடுப்பதாக இல்லை. பஸ் நடத்துனர் வந்து பிக்குவுக்கு ஆசனத்தைக் கொடுக்குமாறு கேட்டார். அந்த மூýவரும் முடிýயாது என்று கூýறியதுடன் புலிகளைக் கட்டிýயணைப்போருக்கு ஆசனங்களைக் கொடுப்பதா என்று கேள்வியும் கேட்டனர் அந்தப் பெண்கள்.
பஸ் தொடர்ந்து ஓடிýயது. திக்குவல்லையில் ஒரு பெண்மணி இறங்கிக் கொண்டதும் 'அணே தெய்யனே" என்று கூýறிக் கொண்டு முன் ஆசனத்தில் அமர்ந்தார் அந்தப் பிக்கு. அதுவரைக்கும் அவர் பாமரப் பயணிகளுடன் நின்று கொண்டுதான் பயணம் செய்தாராம். இதை எல்லாம் எழுதியதால் கடிýதத்தில் முஹம்மத் ஹாஜியார் என்னிடம் சுகத்தைக் கூýட விசாரித்து ஒருவரில்லை.
எப்படிý இருக்கிறது நிலைமை பார்த்தீர்களா?
பாராளுமன்ற ஆசனத்தில் கண்வைத்து கடைசியில் பஸ்ஸில் இருந்த ஆசனத்தையும் பறிகொடுக்கும் நிலை வந்துவிட்டதோவென்று நினைக்கத் தோன்றுகிறது.
பட்டுவேட்டிýக்கு ஆசைப்பட்டு கட்டிýயிருந்த கோவணத்தையும் களவு கொடுத்த கதைதானோ?
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>