05-05-2004, 05:22 PM
முரணிகளின் கூட்டிலிருந்து சமாதானம் எப்படி வரும்...?
தேர்தல் முடிந்து ரணிலை சந்திரிகா வீழ்த்தி விட்டதால், இனி சந்திரிகாவின் பிரதான ஆடுகளத்தில் குறுக்கே நிற்பது சமாதானம்.சந்திரிகா ரணிலை வீழ்த்துவதற்கு பயன்படுத்திய ஆடுகள தந்திரங்களை சமாதானத்தின் மீது பிரயோகிக்கமுடியாது என்றொரு நிலையே இப்போது காணப்படுகின்றது.இந்த நிலையில் சந்திரிகா சமாதானத்தை அடியோடு வீழ்ந்த வேண்டும் அல்லது சமாதானத்தின் ஆட்டத்தைத் தொடர வேண்டும்.
சந்திரிகாவின் முன் இந்த இரண்டு தெரிவுகள்தான் உண்டு.
ஆனால் சந்திரிகாவால் சமாதான ஆட்டத்தை அடியோடு வீழ்ந்தமுடியாது என்ற நிலையே காணப்படுவதால் அவரால் சமாதானத்தின் ஆட்டத்தை தொடர வேண்டிய நிலையே காணப்படுகின்றது.
இப்போது இலங்கையின் பொருளாதாரயதார்த்தத்தில் சந்திரிகாவின் நிறைவேற்று அதிகாரமோ, நாடாளுமன்ற பலமோ சந்திரிகா நினைப்பதை நிறை வேற்றப்போதுமானதாக இல்லை.
இதனால் சந்திரிகா நினைப்பதையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்போகும் மசோதாக்களையும் செயற்பட வைக்கும். செயன்திறன் என்பது இலங்கைக்கு வெளியில் தான் இருக்கிறது.
இது ஜம்பது வருடங்களுக்கு மேல் அரச இயந்திரத்தை இயங்கி வந்தவர்கள் என்ற வகையில் ஜக்கிய தேசிய கட்சிக்கும் தெரியும். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தெரியும். ஆனால் அரச இயந்திரத்தை நேரடியாக இயக்கிய அனுபவமற்றவர்கள் என்ற வகையில் சந்திரிகாவோடு கூட்டுச்சேர்ந்திருக்கும்
ஜே.வி.பி இதனை குறைத்து மதிப்பிட முயலலாம்.
இந்த பின்னணியில் அரசை இயக்கும் செயற்திறன் என்பது இலங்கைக்கு வெளியிலிருந்து இலங்கைக்குள் உதவி வழங்குவோர்களால் பாச்சப்படும் நிதியில்தான் தங்கியிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டே சந்திரிகாவாக இருந்தாலும் சரிதான், ஜே.வி.பியாக இருந்தாலும் சரிதான் தீர்மானிக்க வேண்டிய கட்டாய நிர்ப்பந்தம் உண்டு.
இந்த வகையில் சந்திரிகாவுக்கு சமாதான ஆட்டத்தை தொடரவேண்டிய கட்டாய நிர்ப்பந்தமும் உண்டு.
இந்த வகையில் சந்திரிகாவுக்கு முன் இரண்டு கட்டாய நிர்ப்பந்தங்கள் உண்டு. இந்த இரண்டு நிர்ப்பந்தங்களும் ஒன்றுக்கொன்று இணைந்த தொடர்பைக் கொண்ட செயற்பாடுகளாகவே காணப்படுகிறது.
அதாவது சமாதான ஆட்டம் தொடரப்பட்டால் மாத்திரமே இலங்கைக்குள் நிதிபாச்சலுக்கான வாய்ப்பு உண்டு. மாறாக சமாதானம் வீழ்த்தப்படுமானால் நிதிப்பாய்ச்சல் வற்றிவிடும்.
இப்படி ஒரு நிலையை சந்திரிகா ஏற்படுத்துவாரானால் அவரால் ஒரு கட்டத்துக்குமேல் அசையமுடியாது. ஜே.வி.பி.யாலும் அசையமுடியாது.
ஆனால் இந்த யதார்த்தத்தை இதுவரை ஜே.வி.பி.யின் சார்பில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியத சந்திரிகாவின் அரச இயந்திரம் அசைய வேண்டுமானால் இலங்கைக்குள் நிதிபாச்சப்படவேண்டும். நிதிபாச்சப்பட வேண்டுமானால் சமாதானம் தொடரப்படவேண்டும். சமாதானம் தொடரப்படவேண்டுமானால் புலிகளோடு மட்டுமே பேசியாக வேண்டும். புலிகளோடு
பேசவேண்டுமானால் புலிகள் முன்வைத்திருக்கும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான திட்டவரைபிலிருந்தே பேசவேண்டும்.ஆனால் சந்திரிகா ஏற்படுத்தியிருக்கும் கூட்டுக்காரர்கள் முற்றிலும் இதற்கு முரணான முரணிகளாகவே உள்ளனர்.
அவ்வாறாயின் சமாதானத்தின் கதி என்னவாவது?
இதிலும் மேற்குறிப்பிட்டது போல ஒரு தொடர் சங்கிலியாக இருக்கும் இலங்கையின் எதிர்கால அசைவியக்கத்தின் காரணிகளில் புலிகளோடு மட்டுமே பேச வேண்டும் என்பதையும், புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான திட்டவரைபின் அடிப்படையிலேயே பேசவேண்டும் என்பதை சந்திரிகாவோ,
சந்திரிகாவின் பின்புலத்தில் இருக்கக்கூடிய எந்த சக்திகளினாலும் புரந்தள்ள முடியாத ஒரு நிலைமையை புலிகள் இயக்கம் ஏற்படுத்தி வைத்திருக்கின்றது.அதாவது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஜக்கியதேசிய முன்னணி அரசோடு புலிகள் இயக்கம் சமாதான பேச்சுக்களை தொடர்ந்தபோது இருந்ததுபோன்று இப்போது புலிகள் இயக்கம் இல்லை இப்போது இராணுவ ரீதியாகவும் அதேநேரம் சனநாயக ரீதியாகவும் முன்னிலும் பார்க்க அதிகமாகவே தன்னை நிரூபித்து நிற்கிறது.
அந்த வகையில் புலிகள் இயக்கம் பேச்சு மேசையிலும் சரி, சமாதான முன்நகரவு முயற்சியிலாயினும் சரி அதிக வலுவுடன் கூடிய சக்தியாகவே களத்தில் நிற்கிறது.
ஒட்டு மொத்தத்தில் புலிகள் இயக்கம் முன்னரிலும் பார்க்க பன்மடங்கு வீரியம் மிக்க மக்களின் இயங்கு சக்தியாக தன்தை நிரூபித்து அடுத்த கட்ட நகர்வை சந்திக்க தன்னை தயார் படுத்தவிட்டது.
இதன் ஒரு அங்கமே மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் வயது குறைந்த போராளிகளை யுனிசெப் ஊடாக பெற்றோர்களிடம் ஒப்படைத்தமையும்,
கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் சந்திரசேகரன், மனோகணேசன் ஆகியோரை தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் சந்தித்து பேசியுள்ளமையும் ஆகும்.
அந்த வகையில் அடுத்துவரும் எந்த நகர்வையும் சந்திப்பதற்கு ஏதுவாக புலிகள் இயக்கம் தனது நடவடிக்கைகளை செயல்களில் காட்டத் தொடங்கிவிட்டது.
இதேபோன்று இலங்கையின் வரலாற்றில் 1977இல் நடைபெற்ற தேர்தலையடுத்து அதிக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தது போன்று தற்போது தெளிவான ஒரு ஆணையோடு அதிக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை புலிகள் இயக்கம் நாடாளுமன்றம் அனுப்பி வைத்திருக்கிறது. இந்த வகையில் புலிகளின் சமாதானத்தின் மீதான பற்றைவெளிப்படுத்தி சிங்கள தேசத்திற்கு தமிழ் தலைமை வழங்கும் ஒரு வரலாற்று
சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
ஆனால் இதனை சிங்களதேசம் புரிந்து கொண்டு சமாதானத்தின் பாதையில் தங்களை இணைக்கப்போகின்றார்களா என்பதில் தான் இலங்கையில் வாழும் மக்களின் எதிர்காலத்திற்கு நல்ல சகுனங்களை ஏற்படுத்த முடியும்.
ஆனால் சிங்;கள தேசத்தில் சிங்கள மக்கள் தமது பொருளாதார நலன்கள்கூட சமாதானத்தின் அசைவிலேயே தங்கியுள்ளது என்பதை சரியாக எடைபோட தவறியதன், அல்லது நிராகரித்ததன் பலனை அனுபவிக்கக கூடிய வகையிலேயே தென்னிலங்கை சந்திரிகா ஜே.வி.பி கூட்டும், நாடாளுமன்ற குழப்பமும் காட்சி தருகின்றது.
இதனால் சந்திரிகா தன்னையும் தனது கட்சியையும் ஜே.வி.பியிடம் இருந்து பாதுகாக்க போராடுவாரா? சிங்கள மக்களின் பொருளாதாரi நலனிற்காக போராடுவாரா? அமைதியான இலங்கைத்தீவை உருவாக்க போராடுவாரா?
இதில் சந்திரிகா தன்னையும், தனது கட்சியையும் பாதுகாக்கவே அதிகம் போராடுவர் என்ற நிலையே அதிகம காணப்படுகின்றது.
சிறி.இந்திரக்குமார் ஈழநாதம்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>