07-06-2003, 09:52 PM
kuruvikal Wrote:உங்கள் வாதம் பெண் எப்பொழுதும் நியாயமான சிந்தனை உள்ளவள் என்பதை சாதிபதற்காக அமைவது போல் உள்ளது!
குருவி
நீங்கள் நினைப்பது போல் நான் கருத்துக் கொள்ளவில்லை.
தவறுகள் எல்லோரிடமும் உண்டு.
அங்கு ஆண் பெண் என்ற பேதம் பார்க்கத் தேவையில்லை.
சிந்தனைகளின் விரிவோ இன்னும் பயங்கரமானது.
யாரும் எப்போதும் நல்லதையே சிந்திப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை.
நானோ... அல்லது நீங்களோ கூட கணப்பொழுதில் மனம் பேதலித்து எதையாவது தவறாகச் சிந்திக்கலாம். அது மனித இயல்பு.
ஆனால் எமக்கென்று மனக்கட்டுப்பாடு, சரி பிழை பகுத்தாயும் தன்மை........ போன்ற சுய வரையறைகள் எமக்குள்ளே இருக்கும் போது நாமே எமது சிந்தனையின் தவறை உணர்ந்து நாமாகவே திருந்திக் கொள்வோம். சில சமயங்களில் எமது சிந்தனை செயலாகும் போது அதன் தவறை நாம் உணராத பட்சத்தில் அதை இன்னொருவர் சுட்டிக் காட்டும் போது திருந்திக் கொள்வோம்.
இந்த நிலையில் ஒருவர் தவறும் போது தவறி விட்டார் என்பதை நாம் சுட்டும் அதே நேரத்தில் அந்தத் தவறு எதனால் நேர்ந்தது என்பதைத்தான் நாம் மிக மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் தவறு மீண்டும் ஏற்படாத வண்ணம் எதையாவது செய்ய முடியும்.
இந்தப் பெண்ணின் விடயத்தில் அவள் தனது காதலைச் சொல்லப் பயந்திருக்கிறாள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
அதற்கான முதற் காரணி - காதலை எமது சமூகம் தீண்டத்தகாத ஒன்றாய்ப் பார்ப்பதேயாகும்.
அடுத்த காரணி - அவளது காதல் விவகாரம் அவளது அப்பாவுக்கோ அல்லது அண்ணனுக்கோ அல்லது அம்மாவுக்கோ தெரியவரும் பட்சத்தில் வீட்டில் ஒரு பிரளயம் ஏற்படும் நிலைமை இருந்திருக்கலாம்.
இப்படியான பல சிக்கல்களையோ எதிர்ப்புக்களையோ எதிர் நோக்கும் தைரியம் அந்தப் பெண்ணிடம் இல்லாதிருந்திருக்கலாம்.
(இந்தத் தைரியமின்மைக்கான காரணம் - இங்கு யோசிக்கப் படவேண்டிய விடயம்)
அந்த இக்கட்டான நிலையிலும் அவளது காதல் வலியதாக இருந்ததால் அவள் கடைசி நேரத்தில் தனது காதலனிடம் ஓடினாள். இது ஒன்றும் இன்றைய 21ம் நூற்றாண்டுப் புரட்சி இல்லை. காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு வரும் பட்சத்தில் காலம் காலமாக நடக்கும் ஒன்றுதான்.
இத்தனையும் இல்லாமல்-----------
அவள் தனது பெற்றோரிடம் தனது காதலைச் சொல்லியும் அவர்கள் அதை ஏற்க மறுத்து கல்யாண ஏற்பாட்டைச் செய்திருக்கலாம். வேறு வழியின்றி அவள் தனது வழியில் ஓடியிருக்கலாம்.
இங்கு பாதிக்கப்பட்டவர் அந்த மணமகன் என்பதை மறுப்பதற்கு இல்லை.
அவள் அவரையே திருமணம் செய்திருந்தால் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று சொல்வதற்கும் இல்லை.
nadpudan
alai
alai

