05-04-2004, 03:54 PM
கல்கிசையில் உள்ள ஊடகவியலாளர் த.சிவராம் அவர்களின் வீட்டில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறி பொலிஸார் தேடுதல் நடத்திய சம்பவமானது சிவராமுக்கும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கருதுகிறது. இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழ் ஊடவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறீலங்கா ஜனாதிபதி, ஊடகத்துறை அமைச்சர், ஊடகத்துறை பிரதியமைச்சர், பொலிஸ்மா அதிபர், ஆகியோருக்கும் சர்வதேச ஊடகவியலாளர் அமைப்புக்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
கடந்த திங்கள் 3ம் திகதி இரவு அதிகளவிலான ஆயுதம் தரித்த பொலிஸார் கல்கிசையில் உள்ள சிவராமின் வீட்டிற்கு சென்று ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறி சோதனை நடத்தியுள்ளனர். கொகுவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திசேரா தலைமையிலான பொலிஸாரும், கல்கிசை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருமாக மொத்தம் 50க்கு மேற்பட்ட பொலிஸார் ஆயுதங்களுடன் அங்கு சென்றுள்ளனர். அவர்களில் சுமார் 15பேர் வீட்டிற்குள் சென்று சல்லடைத்தேடுதல் நடத்தியுள்ளனர். வீட்டிற்கு வெளியிலும் தேடிதல் நடத்தினர்.
சம்பவம் நடைபெற்ற வேளையில் சிவராம் மட்டக்களப்பில் கிழக்கிலங்கை செய்தியாளர்
சங்கம் ஏற்பாடு செய்த சர்வதேச ஊடகவியலாளர் தினவைபவத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அவரின் மனைவியும் மூன்று பிள்ளைகளுமே அங்கு இருந்தனர். இது சிவராமுக்கு மட்டுமல்ல அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே கருகிறோம். இச்சம்பவம் தமிழ் ஊடகவியலாளர்களை வன்முறைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என காட்டுவதற்கு
அரசும் அரச படைகளும் முயற்சிப்பதை எடுத்துக்காட்டுகிறது. இது தமிழ் ஊடகவியலாளர்களின் தொழில்சார் நம்பவத்தன்மையை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் அழிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியாகவே கருதுகிறோம். இதன் ஒரு முயற்சிதான் சிவராமின் வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலாகும். இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது இதுதான் முதற்தடவையல்ல. 1996ம் ஆண்டில் சிவராம் கொழும்பில் வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். கடந்த வாரம் குருநாகலில் உள்ள தமிழ் ஊடகவியலாளரான ரமேஷிற்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதை தடுப்பதற்கும், தமிழ் ஊடகவியலாளர்கள் சந்தேகத்திற்கிடமான ஆபத்தான பேர்வழிகள் என காட்டுவதற்கும் எடுக்கப்படும் முயற்சியாகவே இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இவைகளை கருதுகிறது. சிங்கள பெரும்பான்மை இனமக்கள் சூழ இருக்கும் சிவராமின் வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்ட சம்பவம் அவரின் சுதந்திரமான செயற்பாட்டினை தடுத்துள்ளது. கடந்த காலங்களில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது படுகொலைகள், தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை மேற்கொண்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனைகளை வழங்காத காரணத்தினாலேயே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. அடக்குமுறைகளை தட்டிக்கேட்கும் ஊடகவியலாளர்கள் மீது குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் மீது சிறீலங்கா அரசம் அதன் படைகளும் வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் பிரயோகித்து வருகிறது. இதனை உடனடியாக நிறுத்தும் படியும் இதை மேற்கொள்பவர்கள் மீது நீதிவிசாரணைகளை மேற்கொள்ளும் படியும் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஜனநாயகத்தின் மீதும் ஊடக சுதந்திரத்தின் மீதும் பற்றுடைய அனைவரையும் இலங்கை தமிழ் ஊடவியலாளர் ஒன்றியம் வேண்டிக்கொள்கிறது.