05-04-2004, 08:15 AM
விடுதலைப்புலிகளின் முகாம் மீதான தாக்குதல்களின் உள் நோக்கம் என்ன?
<b>புலிகளின் பகுதியில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க கருணா குழுவினர் திட்டம்
கொழும்புக்கு தப்பி வந்த கருணா குழு ஆயுதங்களை விற்க முயற்சி</b>
விடுதலைப்புலிகளுக்கு எதிராக, அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நீண்ட தூரம் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் நடவடிக்கை ஆரம்பமாகி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று, தற்போதும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் புலிகளுக்கு எதிராக அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் நுழைந்து தாக்குதல்கள் நடத்தும் நடவடி க்கைகள் ஆரம்பமாகி விட்டதா என்ற ஐயத்தை வவுணதீவு-ஆயித்தியமலை வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற சம்பவங்கள் எழுப்பியுள்ளன.
வெள்ளை வானொன்றில் புலிகளின் பிரதேசத்திற்குள் நுழைந்த கோர்;டியொன்றே இந்தத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. கருணா குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் படையினரின் ஆதரவுடனேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும் புலிகள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆனாலும், இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் ஆதரவு வழங்கியதாகக் கூ றப்படுவதை படையினர் மறுத்தாலும்; தாக்குதல் நடத்த வாகனத்தில் வந்தவர்கள் இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து நள்ளிரவு நேரம் இரானுவ சோதனைச் சாவடிய10டாக வந்தமை, இவ்விடயத்தில் படையினரின் மறுப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என்பதை தெளிவுபடுத்துகின்றன.
கிழக்கில் கருணாவுக்கு எதிரான புலிகளின் நடவடிக்கைகளையடுத்து அங்கு இரு தரப்பும் மிகுந்த உர்hர் நிலையிலுள்ளன. கருணாவின் நடவடி க்கைகளுக்கும் அதன் பின்னர் அவர் தப்பிச் சென்றதற்கும் படையினரே உதவி வழங்கியதாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்த நிலையில், வவுணதீவு-ஆயித்தியமலைச் சம்பவங்கள் இந்தச் சந்தேகங்களை உறுதிப்படுத்தியுள்ளன.
புலிகளுக்கு எதிரான புரட்சியில் கருணா ஈடுபட்ட போது படையினரின் முழு ஆசீர்வாதமும் இருந்தது.புரட்சி தோல்வியடைந்து அவர் தப்பிச்சென்ற போதும் படையினரின் உதவி கிடைத்தது. அவருடன் கொழும்புக்கு தப்பி வந்து, பின்னர் அவரால் கைவிடப்பட்ட நிலையில் புலிகளிடம் திரும்பிய கருணாவின், சகாக்கள் இது பற்றி பல தகவல்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் தான் வவுணதீவு-ஆயித்தியமலை வீதியில் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவிய ஆயுத பாணிகள் புலிகளின் முகாமொன்றின் மீதும் முன்னரங்க காவல் நிலைகள் மீதும் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளன.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி புலிகளின் முக்கியஸ்தர்களைத் தாக்குவது இந்தக் கோர்;டியின் நோக்கமல்ல. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாகனமொன்றில் வெற்றிகரமாக ஊடுருவிச் சென்று அவர்களது முகாம்களில் எவரையாவது சுட்டுக் கொல்வதும் அவர்களது சொத்துக்களை அழிப்பதுமே இந்தக் கோர்;டியின் நோக்கமாகும்.
கருணா மட்டக்களப்பிலிருந்து துரத்தப்பட்டாலும் அவருக்குரியவர்கள் அந்தப் பிரதேசத்தின் எங்காவது ஒரு மூலையிலிருந்து கொண்டு புலிகளுக்கு நெருக்கடி களைக் கொடுப்பார்கள் எனக் காட்ட முயல்வதே இந்தத் தாக்குதலின் நோக்கமாகும்.
கிழக்கில் கருணா கிளப்பிய பிரதேசவாதத்திற்கு இதன் மூலம் சிறுகச் சிறுக உயிரூட்டுவதும் கிழக்கில் புலிகளை நிம்மதியாக இருக்க விடமாட்டோமெனக் காட்டுவதும் இந்தக் கோர்;டியின் பின்னணியிலிருப்பவர்களது எண்ணமாயிருக்கலாம்.
கருணாவின் புரட்சி புலிகளை பெரும் உலுக்கு உலுக்கி, கிழக்கை வடக்கிலிருந்து பிரித்து விட சிங்கள சக்திகள் திட்டமிட்டிருந்த போதும், புலிகளின் திட்டமிட்ட அதிரடி நடவடி க்கை எல்லாவற்றையுமே புஸ்வாணமாக்கி விட்டது. இதனை பலரால் ஜீரணிக்க முடியவில்லை. கருணா விவகாரத்துடன் விடுதலைப்புலிகள் அமைப்பே உடைந்து விடுமென மனப்பால் குடி த்தவர்களெல்லோரும் வாயடைத்துப் போகும் விதத்தில் புலிகளின் நடவடிக்கை அமைந்தது.
புலிகள் கூ றியது போன்று கருணா தனி மனிதனாகவே தப்பிச் சென்றார். அவர் மீது புலிகள் சுமத்திய குற்றச்சாட்டுக்களையெல்லாம் நிரூபிப்பது போன்று அவரது செயற்பாடுகளும் அமைந்தன. ஆனாலும், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது ஆபத்தை ஏற்படுத்தலாமென்பதால் தற்போதும் தென் பகுதியிலேயே கருணா மறைந்து வாழ்கிறார்.
ஆனாலும், தன்னிடம் எஞ்சியவர்களைப் பயன்படுத்தி கிழக்கில் ஆங்காங்கே இவ்வாறான தாக்குதல்களை நடத்தி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஸ்திரமற்றதொரு நிலையை உருவாக்க கருணா முயலக் கூடுமெனவும் கருதப்படுகிறது.
தன்னுடன் தப்பி வந்த முக்கிய பொறுப்பாளர்களையெல்லாம் கைவிட்ட பின்னர் கருணா இனிமேல் இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்க மாட்டாரென்றே பலரும் கருதினர். எல்லாமே முடி ந்த பின்னர் இந்தப் பொறுப்பாளர்களை தன்னுடன் வைத்திருப்பது தனக்கு பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தலாமெனக் கருதியே கருணா இவர்களைக் கைவிட்டிருந்தார்.
தன்னுடன் புரட்சியில் ஈடுபட்டு பின்னர் தன்னால் கைவிடப்பட்ட இந்தப் பொறுப்பாளர்கள் இனியொரு போதும் புலிகளுடன் இணையும் சாத்தியமில்லை என்றும், ஒன்றில் அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டும், அல்லது இரானுவத்துடன் இணைய வேண்டும் என்றே கருணா கருதியிருந்தார்.
ஆனாலும், அவர்கள் அனைவரையும் புலிகள் தங்களுடன் இணைத்துக் கொண்டனர். இது கிழக்கு மக்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையும், விசனத்தையும் ஏற்படுத்திய போதிலும் இவ்விடயத்தில் புலிகள் மிகுந்த இராஜதந்திரத்துடன் நடந்து கொண்டார்கள்.
எதிரிகளின் எண்ணிக்கையை கூட்டி, நெருக்கடிகள் ஏற்படுவதை புலிகள் விரும்பவில்லை என்பது இவர்களை இணைத்துக் கொண்டதன் மூலம் தெரிய வந்தது. ஆனாலும், இதனை ஜீரணிக்க முடியாத சக்திகள், தற்போது கருணாவுடன் எஞ்சி படை முகாம்களில் சரணடைந்தவர்களைப் பயன்படுத்தி கிழக்கில் இவ்வாறான சிறுசிறு அசம்பாவிதங்களை ஏற்படுத்தி அதனைப் பெரிதுபடுத்துவதன் மூ லம் பிரசார ரீதியிலாவது புலிகளுக்கு நெருக்குதல்களை ஏற்படுத்தலாமென எண்ணிக் கொண்டிருக்கின்றன.
இதனால், தற்போது கருணாவிற்கு புகலிடமளிப்பவர்கள் கருணாவையும் அவருடனிருப்பவர்களையும் அல்லது அவருடனிருந்து தற்போது புலிகளிடமிருந்து விலகிச் சென்றவர்களையும் பயன்படுத்தி கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் குழப்ப நிலைமைகளைத் தோற்றுவிக்க முயல்வதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கருணா குழுவினர் தப்பிச் செல்லும் போது அவர்கள் புலிகளுக்கு பல்வேறு நெருக்கடி களையும் ஏற்படுத்தியிருந்தனர். கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஸ்திர நிலைமையை தளம்பச் செய்ததுடன் புலிகளின் உட்கட்டமைப்பை பெரிதும் சீர்குலைத்திருந்தனர். கனரக ஆயுதங்கள், ஆயுதக் களஞ்சியங்கள், வெடி பொருட் களஞ்சியங்கள் எனப் போர்த் தளபாடங்கள் பெருமளவை அழித்ததுடன் படையணிகளையும் கலைத்து போராளிகளை கருணா வீடுகளுக்கு திருப்பியனுப்பினார்.
இதனால் கிழக்கில் சகல வளங்களையும் புதிதாக உருவாக்க வேண்டி ய கட்டாய சூழ்நிலை புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது. போதிய ஆளணிகளை (போராளிகளை) திரட்டுவது, அவர்களுக்குத் துரித பயிற்சியளிப்பது, அதுவரை ஏனைய மாவட்டப் போராளிகளை மட்டக்களப்பில் நிறுத்துவது, மீண்டும் கனரக ஆயுதங்கள் உட்பட அனைத்து வகை ஆயுதங்களையும் கிழக்கிற்கு நகர்த்துவது, முன்னரங்க காவல் நிலைகளை மீளப் புனரமைத்து கண்காணிப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது, கருணாவின் நடவடி க்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களை உற்சாகப்படுத்தி, மீண்டும் போராட்டத்திற்கு அவர்களது முழு அளவிலான பங்களிப்பை பெறுவதென, குறைந்தது அடுத்த ஆறு மாத காலங்களுக்கு புலிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
இந்த நிலையில் தான் அங்கு ஸ்திர நிலையொன்று உருவாகுவதற்கு முன் குழப்பங்களை ஏற்படுத்த பல்வேறு தரப்பும் முயன்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே வவுணதீவு-ஆயித்தியமலை வீதியில் இரு பகுதிகளில் 'வாகனங்களில்" திடPரென ஊடுருவி அதிரடி த் தாக்குதல்களை நடத்தி புலிகளுக்கும் மக்களுக்கும் உளவியல் ரீதியில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் திட்டங்களை சில சக்திகள் கருணா குழுவுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகப் புலிகள் நம்புகின்றனர்.
ஜனாதிபதி சந்திரிகாவின் கடந்த ஆட்சிக் காலத்தில் 'நீண்ட தூரம் ஊடுருவும் படையணிகள்" வன்னிக்குள்ளும் மட்டக்களப்பிற்குள்ளும் ஊடுருவி புலிகளின் முக்கிய தலைவர்களையும் தளபதிகளையும் இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வந்தன. ஜனாதிபதியின் தற்போதைய ஆட்சியில் இந்தத் தாக்குதல் வடிவம் மாறியுள்ளது.
வாகனத்தில் அதிரடி யாக நுழைந்து எழுந்தமானமாகத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் செல்வதன் மூலம் வாகனங்களில் பல கிலோ மீற்றர் தூரம் நுழைந்து தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் செல்பவர்களைக் கூடத் தடுத்து நிறுத்தவோ அல்லதும் பதிலடி கொடுக்கவோ அல்லது தப்பிச் செல்லும் போது கூடத் தடுக்கவோ முடியாத நிலையில் புலிகள் அங்கு பலவீனமாக இருப்பதாய் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்க இந்தச் சக்திகள் முயல்கின்றன.
இதை விட கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் தப்பி வந்து பெருமளவில் ஆயுத விற்பனைகளில் ஈடுபடுவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த தாங்கள் கொழும்பு மாநகரில் பாரிய தேடுதல்களை ஆரம்பிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை தோன்றியிருப்பதாகவும் காட்டுவதன் மூ லம், தொடர்ந்தும் கருணா விவகாரத்தைப் பெரிதுபடுத்தி புலிகளின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
தற்போது கருணா கொழும்பில் அல்லது தென் பகுதியில் படையினரின் பாதுகாப்புடனிருப்பது தெரிய வந்துள்ளது. இவரைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டும் வவுணதீவு-ஆயித்தியமலைச் சம்பவங்கள் போன்ற தாக்குதல்களை மேற்கொண்டவாறு இந்த அரசு புலிகளுடன் மீண்டும் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிப்பதென்பது சாத்தியமற்றதொன்றாகும்.
இந்த ஆட்சி எத்தனை நாட்களுக்குத் தொடருமென்ற கேள்விகள் தினமும் எழுப்பப்பட்டு வருகையில், வடக்கு-கிழக்கில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறுவது எதிர்காலப் பேச்சுகளைக் கூடத் திட்டமிட்டுக் குழப்பும் செயலாகவே கருதப்படுகிறது.
வவுணதீவு-ஆயித்தியமலை தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து படையினரின் சோதனை நிலையமூ டாக, அதுவும் எவ்வித போக்குவரத்தும் நடைபெறாத நள்ளிரவு நேரம் சென்று திரும்பியுள்ளனர்.
இவ்வாறு, வவுணதீவு-ஆயித்தியமலைத் தாக்குதல் சம்பவங்கள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ள அதேநேரம், இவ்வாறான தாக்குதல்களை முறியடிக்கவும் தாக்குதல் கோர்;டி களின் பின்னணிகளை அம்பலப்படுத்துவதிலும் புலிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் இந்தச் சக்திகளைத் தேடுவதில் தீவிரம் காட்டியுள்ளது. பின்னணியில் இருப்பவர்கள் கண்டறியப்படாவிடி ல் இது போன்ற அசம்பாவிதங்கள் தொடருமென்பதில் ஐயமில்லை.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>